நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 26, 2020

வெற்றிவேல்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று உலக முழுதும்
முருக பக்தர்கள் ஒன்று கூடி
கொடும்பகை அகல வேண்டுமென
ஸ்ரீ கந்த சஷ்டி கவசத்தினைப்
பாராயணம் செய்கின்றனர்..


மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம்போல்
கைதான் இருபதுடையான்
தலை பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள்
பயந்த இலஞ்சியமே.. (24)
-: கந்தர் அலங்காரம் :-

இதற்குமேலொரு விளக்கத்தை
எவராலும் கொடுக்க இயலாது..

முருகன் யார்?..
அவன் எத்தன்மையானவன்!..
என்பதை உணர்ந்தவர்களிடத்து
வெறும் பேச்சுக்கு இடம் இராது..

உமையாள் பயந்த இலஞசியம்
என்கிறார் அருணகிரிநாதர்..

உமையவள் பெற்றெடுத்த சிங்கம்..
உலகாள வந்த பசுந்தங்கம்...

இப்பசுந்தங்கம்
ஸ்ரீ ஹரிபரந்தாமனின் மருகன்..

ஸ்ரீ ஹரிபரந்தாமன்
இருபது கைகளை உடைய
இராவணனின்
பத்ததுத் தலைகளையும் 
கத்தரித்துத் தள்ளுவதற்காக
ஸ்ரீராமன்  எனத் திரு அவதாரம் 
செய்தவன்...

ஸ்ரீ ராமபிரானால்
வீழ்த்தப் பெற்ற இராவணன்
ஈசன் எம்பெருமான் வீற்றிருக்கும்
மா மலையை அசைத்த
பராக்கிரமத்தை உடையவன்..

ஈசனிடமிருந்து
சந்திர காந்தம் எனும் வாளையும்
என்றும் குன்றாத வாழ் நாளையும்
பெற்றவன் இராவணன்..

அப்படியாகப் பட்ட
இராவணனின்
தலைகளை அறுத்துத் தள்ளிய
ஸ்ரீராமசந்திரனின் மருமகன்
எப்படிப்பட்டவனாக இருப்பான்!...அண்ட பகிரண்டங்களையும்
உருட்டி விளையாடிய
அருளிளங்குமரன்
தன்னை முத்தமிழால் வைதவரையும்
வாழ வைத்து அருள்கிறான் எனில்
அவனது பெருமை தான் என்னே!...

எம்பெருமான் முருகவேளின்
திருக்கரத்தில் இலஙகும் வேலும்
அவனது திருவடிகளுக்கு அருகில் விளங்கும் யிலும்
அவனது திருக்கொடியில் இருந்து
அவன் புகழைப் பாடிக் கொண்டிருக்கும் சேவலும்
அன்பருக்கானவை..

அன்பர் தமக்கு
ஆனந்தத்தைக் கொடுப்பவை..
அவர்தமைச் சூழும்
அல்லல்களை அறுப்பவை...
ஆணவத்தில் உழல்வோர்க்கு
அனலாகத் தகிப்பவை...
ஆகாத கொடியோர் தம்
ஆதியந்தம் கெடுப்பவை...ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம்
 வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம்
வாழ்க செவ்வேள்
ஏறிடும் மஞ்ஞை வாழ்க யானைதன்
அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க வாழ்க
சீர் அடியார் எல்லாம்...

வெற்றி வேல்.. வீர வேல்!..
ஃஃஃ

14 கருத்துகள்:

 1. சுவைத்துப் படித்தேன்.   மக்கள் மனதில் முருகன் வீறு கொண்டு எழுந்துள்ள காலகட்டம் இது.   மால் மருகன் நம்மைக் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...
   மால் மருகன் நம்மைக் காக்கட்டும்..
   மகிழ்ச்சி..நன்றி...

   நீக்கு
 2. இப்போத் தான் எங்கள் ப்ளாகில் கந்த சஷ்டி கவசம் சொல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தேன். இங்கேயும் அதே. "கந்தனுக்கு அரோஹரா!"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   வேல் நம்மைக் காக்கட்டும்..
   மகிழ்ச்சி..நன்றியக்கா...

   நீக்கு
 3. வெற்றிவேல் வீரவேல்.

  நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   நலமே எங்கும் நிறையட்டும்..
   நன்றி...

   நீக்கு
 4. முருகனருள் காக்கட்டும் வையத்தை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   முருகன் அருள் நிறையட்டும்..
   நன்றி...

   நீக்கு
 5. அன்பின் தனபாலன்..
  தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

  பதிலளிநீக்கு
 6. வெற்றிவேலன் பற்றிய பதிவை ரசித்தேன். எங்கும் நலம் விளைந்திட வேண்டும்

  துளசிதரன்

  அருமை. ரசித்தேன் துரை அண்ணா. வேலனின் வேல் இந்தத் தொற்றை வென்றிட உலகத்தாருக்கு அருள்புரியட்டும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்/ கீதா.
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   முருகன் அருளால் நலமே எங்கும் நிறையட்டும்..
   நன்றி...

   நீக்கு
 7. முருகன் அனைவருக்கும் நலம் அருள்வான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   முருகனின் நல்லருளால் நலமே எங்கும் நிறையட்டும்..
   நன்றி...

   நீக்கு