நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 18, 2020

அன்பின் வழியது

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
கடந்த 14/7 அன்று
நமது தளத்தில் கவிதை ஒன்றை
பதிவு செய்திருந்தேன்..
என் மனதின் இறுக்கம்
ஆதங்கம் இவைகளைக்
காட்டுவது அது...

அதனைக் கண்டதும்
அன்பின் வார்த்தைகளும்
ஆறுதல் மொழிகளுமாக
நண்பர்கள் அனைவரும்
மனதை நெகிழ்த்தி விட்டார்கள்..

அதன் விளைவாக
அந்தக் கவிதையின்
சில வார்த்தைகள் மாற்றப்பட்டு
இதோ புதியதாக ஒன்று..

அன்பு மொழி கூறிய அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றி..


அன்பு முகம் ஆயிரமாய்
நினைவில் ஆட
ஆதரவென் றமுத மொழி
செவியில் கூட
இனி இங்கு எல்லாமும்
நலமே என்று
ஈசனே உனதருளைப்
போற்றுகின்றேன்..
உனைத் துதித்த தமிழே
என் மனதின் இன்பம்..
ஊர் வாழ நினைப்பதுவே
நிறை பேரின்பம்..
எனையாளும் ஈசனே
எம் பிரானே
ஏழைக்கு அருள்க என்
இறைவா போற்றி
ஒருநாளும் வருநாளும்
பொன்னாள் ஆக
ஓங்கு புகழ் இறைவா
நின் கழலே காப்பு..
கௌரி மணாளனே க்ருபாநிதி
குன்றாத நலமருளும் சிவமே போற்றி..
***
அன்றே எழுதி விட்டாலும்
முக்கியமான பதிவுகள் அடுத்தடுத்து
வெளியானதால் சற்றே தாமதம்..

கூடுதலாக 
ஒரு காணொளி..


எங்கும் நலமே சூழ்க..
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

14 கருத்துகள்:

 1. இறைவனின் நினைவுகள் என்று நமக்குத் துணைநிற்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றி ஐயா...

   நீக்கு
 2. ஆத்திச்சூடி போன்ற பாமாலை அருமை ஜி. வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி.. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. சட்டென நேர்மறைக்கு மாறி விட்ட வார்த்தைகள்...   மனதின் உற்சாகத்தைக் காட்டுகின்றன.   அருமை.  அணில் காணொளி வாட்ஸாப்பில் வளம் வந்து மனதைப் பிசைகிறது.  தண்ணீருக்கெல்லாம் மனிதனை இறைஞ்சும் நிலைக்கு அதை கொண்டுசென்று விட்டது மனிதனின் பிழையே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...
   வருகைக்கு மகிழ்ச்சி..

   வாயில்லா ஜீவன்களைத் தண்ணீருக்குப் பரிதவிக்க வைத்தது தான் இன்றைய நவீன உலகம்...
   நன்றி ஐயா...

   நீக்கு
 4. வரிகள் அருமை ஐயா...

  காணொளி கண்ணீர் வரவைத்தது மீண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   வருகைக்கு நன்றி...

   உலகெங்கும் இப்படித் தான் போலிருக்கிறது...

   நீக்கு
 5. கவிதை அருமை.
  இந்த மாதிரி நேரத்தில் மனதில் உற்சாகத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். அன்பானவர்களிடம் அடிக்கடி பேசி கொள்ளுங்கள்.
  நேர்மறையான எண்ணங்கள், இறைபக்தி நம்மை வழி நடத்தி செல்லும்.
  இறைவன் வழி நடத்திசெல்வார்.

  தண்ணீர் கேட்கும் அணிபிள்ளை காணொளி அருமை ! எவ்வளவு தாகம் குடித்தவுடன் ஓடி விட்டதே! அங்கும் தண்ணீர் தட்டுப்பாடு போல.

  அது கேட்பதை புரிந்து தண்ணீர் கொடுத்த நல்லமனம் வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   இறைவன் எல்லாரையும் நல்வழியில் நடத்த வேண்டும்..

   உலகெங்கும் நலமே நிறைக...

   நீக்கு
 6. நல்ல வரிகள் ஐயா...
  காணொளி முகநூலில் பார்த்திருந்தாலும் இங்கும் பார்த்தேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. காணொளி - பாவம் அந்த அணிலார்.

  நலமே விளைய வேண்டும். நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வெங்கட்..
  தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
  எங்கும் நலமே நிறையட்டும்.. நன்றி...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..