நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 27, 2022

என் கடன்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று திருப்பூந்துருத்தி அப்பர் ஸ்வாமி திருமடத்தில் குருபூஜை தரிசனம்..


இந்தத் திருமடம் அப்பர் பெருமானால் அமைக்கப் பெற்றது..

திருமறைக்காட்டில் இருந்து மதுரைக்கு ஏகிய ஞானசம்பந்தப் பெருமான் அப்பர் ஸ்வாமிகளால் வரவேற்கப் பெற்று அளவளாவி இருந்தது இந்தத் திரு மடத்தில் தான்..


முற்பகல் 10:30 மணியளவில் திருமடத்தில் உள்ள திருமேனிக்கும் உற்சவ விக்ரகத்திற்கும்
பலவகையான திரவியங்களால் திருமுழுக்கு நடைபெற்றது.. தொடர்ந்து அலங்காரமும் மலர் வழிபாடும் தீப ஆராதனையும் நடைபெற்றது..

திரளான அன்பர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் நிறைவாக
தஞ்சாவூர் அருட்பெருஞ் ஜோதி அறக்கட்டளையின் சார்பாக அன்ன பிரசாதம் வழங்கப் பெற்றது..தேவாரத் திருப்பண் இசையும் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் அருளாளரின் ஞான உரையும் நிகழ்ந்தன..மாலையில் தேவார விரிவுரையும் அப்பர் பெருமான் திருமேனி திருவீதி உலாவும் குறிக்கப்பட்டிருந்தன..
இரவு வரை அங்கிருப்பதற்கு எங்களுக்கு இயலாத நிலை.. வரும் நாட்கள் நலமாக அமைவதற்கு இறைவன் அருள் புரிவானாக..
*
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை உற்றுப் பற்றி
உமை அதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே..6.043.7

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே..5.019.9

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

24 கருத்துகள்:

 1. சிறப்பான நிகழ்வு. சிறப்பான படங்கள். தஞ்சையிலிருந்து திருப்பூந்துருத்தி எவ்வளவு தூரம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு.. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.. அதிகபட்சமாக 9 கி.மீ தொலைவு இருக்கலாம்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. தஞ்சையை அடுத்துள்ள களிமேடு கிராமத்தில் மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்தப்படும் அப்பர் ஸ்வாமி திருவிழாவில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக தேரில் தீப் பிடித்துக் கொண்ட விபத்தில் பத்து பேர் உயிரிழ்ந்து விட்டதாக தற்போது செய்தி.. நெஞ்சம் பதறுகின்றது.. விபத்தில் பலியானவர்களது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் பக்க துணையாக இருந்து ஆறுதலும் தேறுதலும் தந்து காத்திட வேண்டும் என இவ்வேளையில் வேண்டிக் கொள்வோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். இப்போதுதான் நானும் படித்தேன். வேண்டிக்கொள்வோம்.

   நீக்கு
  2. நானும் செய்தியில் பார்த்தேன், மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இறைவனை வேண்டி கொண்டேன். ஏன் இப்படி இறைவா! என்ற கேள்வியுடன்.

   நீக்கு
  3. எதிர்பாராத சோகங்களுக்கான கேள்விகள் மட்டுமே நம்மிடத்தில்.. எல்லாம் வல்ல இறைவன் கவலைகளைத் தீர்த்தருளட்டும்..

   நீக்கு
 3. நல்லதொரு சம்பவத்தைக் குறித்து அறிந்த அதே நேரம் இந்த மாதிரி துன்பச் செய்தியும் சேர்ந்து வந்தால் மனம் பதைக்கிறது. ஒருத்தருக்கும் ஒன்றும் நேராமல் இறை அருள் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 4. அனைவரும் இன்புற்று வாழ்க.

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான தகவல்கள். நிகழ்வில் நாங்களும் உங்கள் பதிவு வழி கலந்து கொண்டோம்.

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான தகவல்கள். நிகழ்வில் நாங்களும் உங்கள் பதிவு வழி கலந்து கொண்டோம்.

  பதிலளிநீக்கு
 7. திருப்பூதுருத்தி அப்பர் ஸ்வாமி திருமடத்தில் நடந்த விழா படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 8. படங்கள் எல்லாம் நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 9. அப்பர் சுவாமி திருமடத்துப் படங்களும் நிகழ்வுகளும் அருமை. நீங்கள் தரிசனம் செய்து இங்கு பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி. திருமேனி எனும் தமிழ்வாக்குதான் மலையாளத்திலும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 10. படங்களும் நிகழ்வும் அருமை. கூடவே ஒரு அசம்பாவிதமும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு நன்றி சகோ.. நம்மால் ஆகக் கூடியது என்ன இருக்கின்றது?..

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  படங்களும் செய்திகளும் சிறப்பு. திருப்பூந்துருத்தி, திருமடத்தின் சிறப்புகளை அறிந்து கொண்டேன். அப்பர் சுவாமிகளின் பரிபூரண அருள் அனைவருக்கும் கிடைத்திட மனதாற வேண்டிக் கொள்கிறேன். வேறு ஒரு இடத்தில் நடந்த அசம்பாவிதமான செயல் மனதை மிகவும் வருத்தியது. விபத்தில் காயமுற்றவர்களுக்கு இறைவனின் கருணை கிடைக்கப் பிராத்தனை செய்கிறேன். நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு நன்றி.. பாதிக்கப் பட்டவர்கள் அனைவருக்கும் இறைவன் கருணை கிடைக்கட்டும்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..