நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 29, 2022

வெற்றி வேல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இரண்டு நாட்களாக Fb ல் ஆவேசப் பதிவுகள் சில..

அறிவிலியாகிய ஒருவன் தில்லை நடராஜப் பெருமானின் தாண்டவத் திருக்கோலத்தை கீழ்த்தரமாகப் பேசியிருக்கின்றான் என்று.. 

அந்தக் காணொளியை நான் பார்க்கவில்லை.. ஆயினும் புரிகின்றது.. அங்கே அவன் பேசி இருப்பவை பலராலும் பலமுறை அவரவர் பங்கிற்கு பகிரப்படுகின்றது..

இதெல்லாம் 40 வருடங்களுக்கு முன்பு பகுத்தறிவு மேடைகளில் பேசப் பட்டவையே.. இவற்றை ஏனையோர்கள் கைதட்டி ரசிப்பதில்
இழிமனத்தார்க்கு
 ஏகத்துக்கும் மகிழ்ச்சி..


இன்றைய சூழ்நிலையில் ஹிந்து தர்மத்தைக்  கேவலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு முகவரியற்ற சில பிறவிகள சமீப காலமாக சமூக ஊடகங்களில்
பலவகையிலும் ஊளையிட்டுத் திரிகின்றன..

தன்னைத் தானே கடித்துக் கொண்டு இன்புறும் அவ்விலங்குகள் அல்லல்பட்டு  அவதியுற்று அழிதல் வேண்டி இன்றைய பதிவில்
ஸ்ரீ அருணகிரி நாதர் அருளிச் செய்த மயில் விருத்தத்தில் இருந்து திருப்பாடல் ஒன்று..

வைதாரையும் வாழ வைக்கும் வள்ளல் பெருமான் தான் வடிவேலவன்.. என்றாலும் அவன் சத்ரு சங்கார மூர்த்தி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

அவனே வருவான்
அரக்கரை அழிப்பான்!..
*

அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
   அநந்தமா யினுமேவினால்

அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்
   அறியாது சூரனுடலைக்

கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
   கடியகொலை புரியு மதுசெங்

கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்
   கடுக்கின்ற துங்க நெடுவேல்


தண்டந் தநுத்திகிரி சங்கு கட்கங் கொண்ட
  தானவாந் தகன்மாயவன்

தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
   தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை
   மங்கையும் பதம்வருடவே

மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்
   வாகைத் திருக்கை வேலே..
-: ஸ்ரீ அருணகிரி நாதர் :-

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு அரோஹரா!..
***
நேற்று 
திருக்கண்டியூர்
ஸ்ரீ பிரம்ம சிரக்கண்டீசர்
திருக்கோயிலில்
பிரதோஷ தரிசனம்..
அச்சமயத்தில் அப்பர் ஸ்வாமிகள் குருபூஜையன்று
ஏற்பட்ட தீ விபத்தில் 
சிக்கிக் கொண்ட  பதினொருவரின் ஆன்மாக்களும் ஈசனுடன் ஐக்கியமாவதற்கு சிவனடியார்கள் கூடி பிரார்த்தித்துக் கொண்டோம்..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

19 கருத்துகள்:

 1. அவரவருக்குத் தோன்றுவது அவரவருக்கு சரி எண்று பேசிவிட்டுப் போகிறார்கள்.  விடுங்கள், இவற்றை எல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.  மனதில் வேறு வெறுப்புகள், ஏமாற்றங்கள் இருக்கும் இவர்களுக்கு. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு.. தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. சூரியன் மேல் கோபம் கொண்டு சொந்த வீட்டின் வரவேற்பறையில் சிறுநீர் கழிப்பவர்கள் இவர்கள். அவனுங்களைப் பத்தி நமக்கு என்ன பேச்சு.

  பதிவின் படங்களும் அருணகிரி நாதரின் ஆவேசமும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. அன்பின் நெல்லை..
  தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

  இவர்களைப் பற்றி நமக்கு என்ன பேச்சு என்றாலும் எல்லா சமயங்களிலும் ஒதுங்கிப் போவது நல்லதல்லவே...

  தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 4. எது நடந்தாலும் நல்லதற்கே என்று சென்று கொண்டே இருக்க வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. தாங்கள் கூறுவதும் உண்மை தான்.. ஆனாலும் நெஞ்சு பொறுக்குதில்லையே..
   தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அவரவர் கர்மவினை வேறென்ன சொல்வது ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி.. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கர்மவினை மிகவும் கொடியது.. நின்று கொல்லும்..

   தங்களது கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. இந்த மாதிரி ஒரு செய்தி ஓடுவது கூடத் தெரியாது. நன்மைக்கே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   ஈனர்களின் இது மாதிரியான செய்திகள் காதில் படாதவரைக்கும் முகவும் நல்லது..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 7. இப்படி எல்லாம் செய்திகள் முகநூலிலா? நான் முகநூலில் இருந்தாலும் இது எல்லாம் கண்ணில் படவில்லை என்பது நல்லதுதான்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

   நீக்கு
 8. துரை அண்ணா இரு காதுகள் இருக்கிறதே! நாம் நல்லதை நினைப்போம். நல்லதைக் கேட்போம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

   நீக்கு
 9. துளசி அனுப்பியதிலிருந்து கருத்தைப் பதிய முயற்சி....என் கருத்தும் செல்லவில்லை. ஹப்பா ஒருவழியாகக் கருத்துகள் வந்துவிட்டன...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியோ.. கருத்துகள் கிடைத்து விட்டன.. மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. பிரதோஷ தரிசன படங்கள் அருமை.
  இறைவன் தான் ஆட்டிவிக்கிறார் நாம் ஆடுகிறோம். எல்லாம் அவன் செயல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..