நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 10, 2022

ஸ்ரீராம ராம..

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி 27
ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீராம நவமி

பாற்கடலில் பள்ளி கொண்ட பரமன்
ஸ்ரீ ராமனாக
திரு அவதாரம் செய்தருளிய நாள்..

 வளர்பிறை நவமியன்று
உச்சிப் பொழுதில்
புனர்பூச நட்சத்திரத்தில்
ஸ்ரீ ராம அவதாரம்
நிகழ்ந்தது..


ஸ்ரீ சக்ராயுதம்
பூச நட்சத்திரத்தில் பரதனாகவும்
ஸ்ரீ ஆதிசேஷன் ஆயில்ய
நட்சத்திரத்தில்
லக்ஷ்மணனாகவும்
ஸ்ரீ வலம்புரி
மக நட்சத்திரத்தில்
சத்ருக்கனனாகவும்
அவதரித்தனர்..

இன்றைய பதிவில்
வடுவூர்
ஸ்ரீ ராம தரிசனம்..
(படங்கள் - Fb வழி)

அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ
சமைவு அற அறிந்திலம் தக்கது ஆகுக
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!.. (பால - 23/73)
-: கம்ப ராமாயணம் :-

ஸ்ரீராம் ஜயராம்
ஜயஜய ராம்
***

9 கருத்துகள்:

 1. ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.
  சகஸ்ரநாம தத்துல்யம்
  ராம நாம வரானனே..

  ஸ்ரீராமஜெயம்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  ஸ்ரீ ராம நவமியன்று அழகான வடுவூர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் படங்களை தரிசித்துக் கொண்டேன். காலை எழுந்தவுடன் திருப்தியாக அழகிய ஸ்ரீ ராம பிரானை தரிசிக்க வைத்த தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

  ஸ்ரீ ராமஜெயம். 🙏.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா! வடுவூரான் அழகே அழகு. இம்மி இம்மியாக ரசிக்கக் கொடுத்திருக்கீங்க. அனைத்தும் அழகு. சொல்ல வார்த்தைகளே இல்லை. அருமையான ராம தரிசனம்.அனைவருக்கும் ஶ்ரீராமநவமி வாழ்த்துகள். ஶ்ரீராமன் அருளால் அனைவர் வாழ்க்கையிலும் மன நிம்மதி மேலோங்கி மகிழ்ச்சி பிறக்கவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீ ராமஜெயம்
  வாழ்க வையகம்...

  பதிலளிநீக்கு
 5. ஸ்ரீராமநவமி அன்று வடுவூர் ராமன் தரிசனம் அருமை.
  ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.

  பதிலளிநீக்கு
 6. அருமையான படங்கள். தரிசனமும் நன்று.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 7. ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ....

  ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ...

  ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ....

  பதிலளிநீக்கு
 8. ஜெய் ஶ்ரீராம்.. ..

  ஶ்ரீராம நவமி அன்று சிறப்பான படங்கள்..... வடுவூர் இராமனின் தரிசனம் காணக் கிடைத்தது......

  பதிலளிநீக்கு