நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 17, 2019

வீர வணக்கம்கோழைகளின் கொடூரத் தாக்குதலினால் 
எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியிருக்கின்றனர்..
மூர்க்கர்களின் வெறியாட்டம் கண்டு - என்றைக்கு இந்தப் படுபாவிகளின் கொட்டம் அடங்குமோ என்று அனல் பட்ட புழுவாகத் துடிக்கின்றனர் -  நல்லோர்கள்..

இந்த கொடூரத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டாடிக் களிக்கும் ஈனர்களைக் காணும் போது நெற்றிக் கண்ணை ஈசன் எப்போது திறப்பான்?... என்றிருக்கின்றது... 

We salute you, brave sons of Mother India': 
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ..
சர்வேசா...
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை...


இம்மண்ணுக்காக
தம்முயிர் துறந்த வீரர்கள் அனைவருக்கும்
நெஞ்சார்ந்த அஞ்சலி...

பாரதத்தாயின் தீரப் புதல்வர்கள் அனைவரும்
வீர சுவர்க்கம் எய்திட வேண்டி நிற்போம்...

ஜெய்ஹிந்த்
ஃஃஃ 

25 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  பதறவைத்த, நெஞ்சம் நெகிழ வைத்த செய்தி.

  வீர வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 2. நேராக எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் இப்படியொரு கோழைத்தனமான செயலில் ஈடுபடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதுகெலும்பு இல்லாத கோழைகள்.. ஆயினும் நம்மவர்கள் விழிப்புடன் இல்லை என்று மூர்க்கர்கள் ஏளனம் செய்கின்றனர்...

   நீக்கு
 3. ஆனந்தம் கொண்டாடிக்களித்த ஈனர்கள் நல்லவேளை என் கண்ணில் படவில்லை. மனம் கொதித்திருக்கும். சித்து சொல்லி இருப்பதே ஜீரணிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கண்ணில் பட்டிருந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது.. அவர்களது ஒற்றுமையே தனியொரு விதமானது...

   நீக்கு
 4. முதலில் போட்டிருந்த இடுகை எர்ர் கொடுத்தது, இந்தச் சம்பவத்தை நீங்க எழுதலையேன்னு நினைத்தேன்.. எழுதிட்டீங்க.

  புல்லுருவிகளும் நம் மக்களோடு கலந்திருப்பது இயற்கைதானே. சித்துவெல்லாம் ஒரு மனிதனா? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் பிறவிகளைச் சேர்ந்தவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயிரோடு விளைந்த களைகள்.. ஒரே நோக்கம் பாரதத்தை அழிக்க வேண்டும் என்பதே...

   நீக்கு
 5. அரசாங்கம் 10% இட ஒதுக்கீடு தேசப் பாதுகாப்பாளரின் (அதுவும் சிப்பாய் லெவலில் இருப்பவர்களுக்கு மட்டும், அதாவது 70% க்கு) கொடுக்கணும். தியாகம் செய்த வீரனின் வீடு இப்படி எண்ண வைத,த்து.

  அதிமுக அரசு பண உதவி, வேலை கொடுத்தது பாராட்டத்தக்கது

  பதிலளிநீக்கு
 6. என்னென்னமோ சொல்லத் தோணுது! ஆனால் என்ன பயன்? பாவம், பல இளைஞர்கள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்திருக்கின்றனர். அனைவருக்கும் மனமார்ந்த அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு
 7. மனதைப் பதறவைத்த செய்தி அது. மிகவும் கொடூரமான இவர்களுக்கெல்லாம் மனசாட்சி மனம் என்பதே இருக்காதோ என்று தோன்ற வைக்கும் நிகழ்வு.

  அத்தனை வீரர்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலிகளும் சல்யூட்களும்.

  இதைக் கொண்டாடியும் களித்தனரா? அடப் பாவிகளா!

  பார்த்தீங்களா தீவிரவாதியின் அப்பா சொல்லிருக்கார்...தனக்கு தன் மகன் இப்படி ஒரு தீவிரவாதியாக இருப்பதென்பதே தெரியவில்லை...சென்ற வருடம் அவன் திடீரென்று போர்ட் எக்ஸாம் எழுதாமல் காணமல் போய்விட்டதாகவும் அவன் இப்படி ஒரு தீவிரவாதியாகியிருப்பான் என்றும் தெரியாது என்று...இந்த அப்பாவை நினைத்தாலும் மறுபுறம் கஷ்டமாகத்தான் இருக்கு...அதுவும் இது போன்ற கிராமத்தில் எல்லைப்பகுதியில் எங்கோ ஒதுக்குப் புறத்தில் வாழும் அம்மா அப்பாக்களின் அறியாமையை நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே உடன் வேலை செய்யும் இந்தியன் ஒருவன் தனது மகிழ்ச்சியை ஊரில் உள்ளவனுடன் பகிர்ந்து கொண்டான்...கண்ணால் கண்டேன்... காதால் கேட்டேன்..அவர்கள் தான் சொல்கிறார்களே - அழித்து விடுவோம் என்று!...

   நீக்கு
 8. உயிர்களின் மதிப்பு விலை பேசப்படும் பதட்டமான நிலையில் நம் வீரர்கள் எத்தனை மன உறுதியுடன் பணியாற்றுகிறார்கள் எல்லைகளில் இல்லையா? இதை நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது. எல்லையில் பணியாற்றும் நாட்டைக்காக்கும் படை வீராராய் உருவாவதற்கும் நல்ல மனம் வேண்டுமே! ஜெய்ஜிந்த்!

  கீதா

  பதிலளிநீக்கு
 9. தேசம் காக்கும் வீரர்களுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்...

  பதிலளிநீக்கு
 10. ஈனச்செயல் புரிந்தோரை பின்லாடனைப் பிடித்து அழித்தமாதிரிஅழிக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்து ஏற்புடையது ஆனாலும் நம்முடைய அரசியல் வாதிகள் விட மாட்டார்கள்....

   நீக்கு
 11. எல்லை காக்கும் பணி என்பது எத்தனை உயர்ந்த பணி! அதுவும் தம் உயிரையே பணயம் வைத்து குடும்பத்தாய்ப் பிரிந்து இப்படியான வீரர்களுக்கு இப்படி உயிர் மாய்வது எத்தனை கொடிய துன்பம்! மனதில் இறைவா! எத்தனையோ கொடியவர்கள் கொலை புரிந்து நாட்டில் சுதந்திரமாக உலவி ஆட்சியும் செய்து, வெளிநாடவருக்கு தாரையும் வார்த்து வரும் போது இப்படி நம் நாட்டைக் காக்கும் இந்த வீரர்களுக்கு இப்படியான கொடிய மரணம் ஏன்? என்று கேட்கத் தோன்றுகிறது..

  வீரர்களுக்கு வீர வணக்கமும், அஞ்சலிகளும் !

  ஜெய்ஹிந்த்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அத்தனைக்கும் காரணம் பாழாய்ப்போன அரசியல்...
   அவனும் அடங்க மாட்டான்.. இவனும் அடக்க விடமாட்டான்...

   நீக்கு
 12. வீரவணக்கம் .
  எல்லைபணி தியாகபணி.
  எல்லையை பாதுகாக்கும் பணி வீரர்களுக்கு வீர வணக்கங்கள், அஞ்சலிகள்.
  அவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதலையும் தேருதலையும் இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு