நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 13, 2019

சிறுகதைகள்

பொது வெளியில் எங்கள் பிளாக் தளத்தில் எனது இருபத்தைந்தாவது சிறுகதை நேற்று வெளியாகியிருக்கிறது..

பரிவை குமார் அவர்களது தளத்தில் என்னைப் பற்றி அறிந்து கொண்ட 
அன்பின் திரு ஸ்ரீராம் அவர்கள் என்னை அழைத்து அளித்த ஊக்கத்தின் விளைவே இத்தனையும்...

அன்பின் திரு ஸ்ரீராம் அவர்களுக்கும்
எங்கள் பிளாக் தளத்திற்கும் முதற்கண் நன்றி..

நாற்பது வருடங்களுக்குப் பிறகு எழுதிய
முதல் சிறுகதை - பாக்கியம்...

அந்தக் கதை வெளியாவதற்குள்
நம்ம ஏரியா தளத்தில் அப்பாவின் மகள் வெளியானது...

எனினும் எங்கள் பிளாக்கில் தொடர்ந்து வெளியானவைகளைக் கொண்டு
இருபத்தைந்தாவது கதை என்று அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்... 

2017 நம்ம ஏரியா

1 ஜூலை 2017
1) அப்பாவின் மகள்

3 அக்டோபர்2017 எங்கள் பிளாக்

15 ஆகஸ்ட் 2017 
1)  பாக்கியம்

17 அக்டோபர் 2017 
2) ராமனைத் தேடிய சீதை

2018 எங்கள் பிளாக்

13 மார்ச் 2018 
3) மாநிறம்

24 ஏப்ரல்
4) மூங்கில் பாலம்

24 ஜூலை
5) வேர்கள்

7 ஆகஸ்ட்
6) பிராயச்சித்தம்

16 அக்டோபர்
7) சாம்பலீஷ் 


23 அக்டோபர்
8) தேன்மொழி கூல்ட்ரிங்ஸ்

1 நவம்பர்
9) அம்மா காத்திருக்கிறாள் - 1

2 நவம்பர்
10) அம்மா காத்திருக்கிறாள் - 2

20 நவம்பர்
11) அன்புள்ள பாஸ்


2019 எங்கள் பிளாக்

15 ஜனவரி
12) மனசோட பேசும் மண்ணோட வாசம்

19 மார்ச்
13) டிபன் பாக்ஸ்

21 மே
14) மறுபடியும் அம்மா

18 ஜூன்
15) மனசுக்குள்ளே மகிழம்பூ

2 ஜூலை
16) தாகம்

23 ஜூலை
17) சுற்றுலா வைபோகமே

27 ஆகஸ்ட்
18) களத்து மேட்டுக் காவலன் 1

3 செப்டம்பர்
19) களத்து மேட்டுக் காவலன் 2

10 செப்டம்பர்
20) களத்து மேட்டுக் காவலன் 3

8 அக்டோபர்
21) நான் - நாகன் என்கிற..

15 அக்டோபர்
22) நான் கல்பனா

22 அக்டோபர்
23) விளக்கு வைச்ச நேரத்தில

5 நவம்பர்
24) காளியண்ணன்

11 நவம்பர்
25) பிரசாதம்இவையத்தனையும் அன்புள்ளங்கொண்ட தங்களால் ஆயிற்று..

இங்கே கண்டிப்பாக பன்னிரண்டு மணி நேரம்
வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை..

மாலை ஐந்தரை மணியளவில் அறைக்குத் திரும்பும்போது
பெரும்பாலும் இணையம் செயலற்று இருக்கும்..

அதனுடன் போராடித் தான் பதிவுகளை வெளியிடுகின்றேன்..


ஒவ்வொரு கதையைப் பற்றியும் குறிப்பு சொல்லலாம்...
ஏதோ இன்றைக்கு இணையம் சற்று கிடைத்துள்ளது...

குறுகிய நேரத்துக்குள் பதிவை எழுதிட வேண்டும்..
எனவே வேறொரு சமயத்தில் பேசலாம்

தஞ்சையம்பதியில் ஆயிரத்து நானூறு பதிவுகளைக் கடந்திருக்கிறேன்...
அதைக் கூட கவனத்தில் கொள்ள இயலவில்லை...

பல சமயங்களில் பதிவுக்கு வந்து கருத்துரை வழங்கும்
நல்ல உள்ளங்களுக்கு பதில் உரைக்க இயலாதவனாக இருக்கிறேன்..

இருந்தும் எனது தளத்தின் பதிவுகளுக்கும்
எங்கள் பிளாக்கில் வெளியாகும் சிறுகதைகளுக்கும்
தாங்கள் அனைவரும் அளிக்கும் ஊக்கமும் உற்சாகமும்
மறக்க இயலாதவை...

அவற்றாலேயே நான் நித்தமும் என்னைப் புதுப்பித்துக் கொள்கிறேன்...

இவ்வேளையில் அன்பின் நண்பர்கள் அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதில்
மகிழ்ச்சியடைகின்றேன்..


வாழ்க நலம்..
ஃஃஃ

34 கருத்துகள்:

 1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...    வாழ்த்துகள்.  அந்தந்த கதைகளின் தலைப்பைப் படிக்கும்போதே அந்தக்கதைகள் நினைவுக்கு வருவது(ம்) சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. 25 என்ன, நூறு, இருநூற்றைம்பது என்று சாதாரணமாக கடப்பீர்கள் என்று நம்புகிறேன்..   நெல்லைத்தமிழன் சொன்னதுபோல சேவை பிழிவது போல நினைத்த மாத்திரத்தில் ஒரு சிறு விஷயம் வைத்து சட்டென ஒரு கதை எழுதி விடுகிறீர்கள். உங்களுக்கென ஒரு தனி பாணியும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூற்றைம்பது இருநூறு என்றெல்லாம் இலக்கு இல்லை..

   ஆயினும் ஒரு நூறு எழுதிட வேண்டும்...

   அன்னைத் தமிழ் அருள்புரிவாளாக...

   நீக்கு
 3. உங்கள் கதைகள் அன்பில் தோய்ந்தவை.  நெகிழ்ச்சி ரகம்.  நெகட்டிவ் அம்சங்களே இருக்காது. மண்ணின் மணமும், மனங்களின் மாண்பும் பெரிதாகத் தெரியும்.  நட்பின் மேன்மை இருக்கும்.  உயர்ந்த உள்ளங்களை பற்றி இருக்கும்.  இது படிப்பபவர் மனதில் நின்றாள் அவர்கள் மானமும் அதுபோலாகிவிடும். உங்கள் பெயரைச் சொல்லாமல் வெளியிட்டால்கூட அது நீங்கள் எழுதிய அதை என்று நண்பர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துரை கண்டு மனம் நெகிழ்கின்றது..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பரிவை குமார் தளத்தில் பார்த்துதான் உங்களைத் தெரிந்துகொண்டேனா?  எனக்கு நினைவில்லை.   எப்போது முதல்முறை உங்கள் தளம் வந்தேன் என்றும் நினைவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்...
   பரிவை குமார் அவர்கள் தளத்தில் என்னைப் பற்றி நான் எழுதியிருந்தேன்..

   அதைப் படித்து விட்டுத்தான் எனது மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டு கதை எழுதும் படி உற்சாகப்படுத்தினீர்கள்...

   நீக்கு
 5. உங்களால் எங்கள் தளமும் பெருமை பெற்றது.   சுவாரஸ்யமான கதைகளை அங்கு தந்திருக்கிறீர்கள்.  நாங்களும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.  நம் நட்பும், உங்கள் ஆதரவும், நண்பர்களின் அன்பும் தொடரட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   என்னையும் எழுதத் தூண்டியவர் தாங்களே....

   தங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்...

   அன்பும் நட்பும் என்றும் வாழ்க...

   நீக்கு
 6. தஞ்சையம்பதியில் 1400 பதிவுகளைக் கடந்திருப்பதற்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  இன்னும் பதிவுகள் பெருகட்டும்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது பாராட்டுரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 7. 12 மணிநேரம் தினமும் வேலை, அதுவும் அரபுநாட்டு சூழலில் என்பதே ஆளைப் படுக்கவைத்துவிடும். இணையத்தின் சண்டித்தனம்வேறு. இருந்தும் விடாமல் மனதில் கற்பனையைக் கொணர்ந்து, எழுத்தைத் தெளித்துவருகிறீர்கள். பாராட்டிரவேண்டியதுதான்!

  கூடவே, தேர்ந்தெடுத்த - அதாவது, தமிழின் சிறந்த படைப்பாளிகள் என இலக்கியப் பைத்தியங்களால் தெளியப்படும், அந்தக்கால அசடுகளின் கதைகளையும் தேடிப் படித்து, உங்களது எழுத்துக்கு மெருகூட்டிக்கொள்வீர்களாக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு. ஏகாந்தன்...

   எவருடைய சாயலும் வந்து விடக்கூடாது என்று இப்போதெல்லாம் பிற கதைகளை வாசிப்பதில்லை....

   எங்கள் பிளாக் மற்ரும் தங்களது தளம் போன்றவை விதி விலக்கு..

   அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. ஆயிரத்து நானூறு பதிவுகளைக் கடந்ததுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். அனைத்தும் அர்த்தமுள்ள பதிவுகள். எனக்கு உங்களைச் சில ஆண்டுகளாகவே தெரியும். அப்போது நான் என் "எண்ணங்கள்" வலைப்பக்கம் திருமணம் குறித்த பதிவுகளை எழுதிக் கொண்டிருந்தேன். படித்துவிட்டுக் கடந்து விடுவேன். இவ்வளவு தமிழ் அறிவும், ஞானமும் உள்ளவர்கள் பதிவில் நாம் கருத்துச் சொல்லுவது சரியாக இருக்குமா என்னும் எண்ணம். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அக்கா...

   நான் தஞ்சை கரந்தையில் Browsing center வைத்திருந்தபோதே தங்களது தளத்தை அறிவேன்...

   இது பற்றி கூடிய விரைவில் பதிவு ஒன்றைத் தருகிறேன்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. உங்கள் கதைகள் அனைத்தையும் படித்திருந்தாலும் மீண்டும் சென்று படித்துப் பார்த்து நினைவூட்டிக்கொள்ளவேண்டும். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் நீங்கள் விடாது, கற்பனை வளம் சிறிதும் குன்றாது, அயர்ச்சி இல்லாமல், மனம் கலங்காமல் தொடர்ந்து பதிவுகளை அளித்து வருவதற்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சியக்கா...

   நீக்கு
 10. உங்களின் ஆர்வத்தைக் கண்டு வியந்து போகிறேன் ஐயா... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...

   தாங்கள் அளித்த உற்சாகம் எல்லாம் மறக்கக் கூடியதா!..

   பாராட்டுரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 11. சிறுகதை எழுதுவதில் உங்கள்பாணியே தனி மிகவும் ரசிப்பேன் எந்தமுகச் சாயமுமில்லாத படைப்புகள் மனம் நிறைந்த பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்களது வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 12. உங்களின் படைப்புகள்(கதைகள்) தொடர்ந்து வர வாழ்த்துக்கள்.
  பாராட்டுக்கள்.
  கதைகளை புத்தகமாய் மின் புத்தகம், அல்லது புத்தகமாய் வெளியிடுங்கள்.
  மண்ணின் மைந்தர்களை, கிராமத்தின் அன்பை, பண்பை, நேசிப்பை , நட்பை எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்.
  உங்களுக்கு, ஸ்ரீராமுக்கும்(எங்கள் ப்ளாக்கிற்கும்) நன்றி, வாழ்த்துக்கள்.

  ஆயிரத்து நானூறு பதிவுக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 13. வணக்கம் அய்யா.
  முதலில் 1400க்கு வாழ்த்துக்கள்.
  25 கதைகள்.
  உண்மையில் ஆச்சர்யம்.
  முதல் கதை எழுதிய போது நிறைய எழுதுங்கள் புத்தகமாக்குங்கள் என்று உங்களிடம் சொன்னேன். அதெல்லாம் வேண்டாம் என மறுத்தீர்கள். இப்பவும் சொல்கிறேன் விரைவில் புத்தகமாக பார்க்க ஆசை.
  என் தளம் மூலமாகவா ஸ்ரீராம் அண்ணா உங்களைக் கண்டடைந்தார்..? வாழ்த்துக்கள் அய்யா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   நட்பின் பாலமாக அமைந்தது தங்களது தளமே...

   வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 14. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...

   தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 15. உங்களது சிறுகதைகளை வாசிப்பது தனி அனுபவம். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 16. மிக மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அண்ணா ...

  கீதா மா கூறியது போல தங்கள் தளம் பற்றி அறிந்து படிக்கும் போது ...இங்கு கருத்துரை இடும் அளவு நமக்கு என்ன தெரியும் என்றே பல நேரம் ஏதும் கூறாமல் கடந்து விட்டேன் ...

  இப்பொழுதும் ஒரு வரிக்கு மேல ஏதும் எழுத வருவது இல்லை ..ஆனாலும் பதிவுகள் பல மனதில் பதிந்து விட்டது ....


  இன்னும் நிறைய நிறைய அன்பான கதைகள் படிக்க காத்திருக்கிறோம் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி...

   நல்லதொரு எழுத்துக்கும் நல்ல பல பதிவுகளுக்கும் உரியவர் தாங்கள்...


   அந்தக் காட்டுக்குள் ஐயனார் கோயிலைப் படம் எடுத்துக் காட்டிய விதம் கண்டு வியந்திருக்கிறேன்...

   தங்களது வருகையும் கருத்துரையும் எனக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..