நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 03, 2019

அருள்வாய் குகனே..

உன்னுடைய வேலொன்றே உறுதுணையாய் வருகிறது..
வருகிறது... துணையாய் வருகிறது...

திருச்செந்தூர்
கந்த சஷ்டி நிகழ்வுகள் இன்றைய பதிவிலும் தொடர்கின்றன..
வலையேற்றிய அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

திருஐயாறு 
திருஐயாறு 
சங்கரன்கோயில்
திருப்பரங்குன்றம் 
திருப்பரங்குன்றம் 
நெல்லை
பழனியம்பதி
பழனியம்பதி
ஸ்வாமிமலை
திருத்தணிகை
வைத்தீஸ்வரன்கோயில்
சிக்கல்
வீரபாகு
கடலா.. கடல் அலையா..
பெருவாழ்வு கண்ட சூரன்
திருசெந்தூர் 
சிக்கலில் வேல் வாங்கிய தருணம்..


திருச்செந்தூரில் தீப ஆராதனை..


ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியாரெல்லாம்..
-: ஸ்ரீ கந்தபுராணம் :-

வாழ்க சீர் அடியாரெல்லாம்
வேல்.. வெற்றி வேல்..
ஃஃஃ

15 கருத்துகள்:

 1. முருக தரிசனம் செய்து கொண்டேன்.   முதல் காணொளியில் என்ன விரைவாக வந்து திரும்புகிறார் முருகவேள்?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்
   தங்களுக்கு நல்வரவு...

   வேல்நெடுங்கண்ணியம்மை கொடுக்கும் போதே வேலை வாங்கிட வேண்டும்..

   அஃதன்றி..

   போனால் போகட்டும்...
   அசுரனை விட்டு விடு .. என்று
   அம்பிகை சொல்லி விட்டால்!...

   அதனால் தான் விடாதே.. பிடி!...

   நீக்கு
 2. வேலுண்டு வினைதீர்க்க, மயிலுண்டு எனைக்காக்க...

  வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை... 


  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...   கந்தவேள் முருகனுக்கு அரோகரா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கந்தவேள் முருகனுக்கு அரோகரா..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி. இந்தியாவில் இருந்தால் திருச்செந்தூர் சூர சம்ஹாரம் ஒவ்வொரு வருடமும் பார்ப்போம். இங்கே பார்க்க முடியலை. என்றாலும் உங்கள் பதிவின் மூலம் கண்டேன். சிக்கலில் வேல் வாங்குவதையும் பார்த்துக் கொண்டேன். என்ன வேகமாகத் திரும்புகிறார் சூரனை அழிக்க. திருச்செந்தூர் தீப ஆராதனை அருமை. மக்கள் கோஷம் மெய் சிலிர்க்க வைத்தது. வேல் வாங்கும்போது பின்னணியில் கேட்கும் கொட்டு சப்தமும் உடல் சிலிர்த்துப் போனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கந்தன் வேல் வாங்கும் நிகழ்வில்
   மனம் நெகிழ்ந்து அழுது விட்டேன்...

   சிக்கல் எல்லாம் தீர்ப்பான்
   சிங்காரவேலன்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அருமையான தரிசனம்.
  நீயாடும் அழகை கண்டு மனம் ஆடி வருகுதய்யா ! மனம் ஆடும் அழகை கண்டு மக்கள் கூட்டம் பெருகுதய்யா!

  சிக்கலில் முருகனும், மக்களும் ஆடுவதை பார்த்து மனம் நிறைந்து போனது.

  திருச்செந்தூர் தீப ஆராதனை காட்சி மகிழ்ச்சி.
  பகிர்வுக்கு நன்றி.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. காலை வணக்கம்
  முருகனைக் கண்டு வணங்கினேன்.
  அழகிய புகைப்படங்கள். ஆம் கடலா கடலலை மக்களா என இருக்கிறது. நேற்று நேரடி ஒளிபரப்பில் திருச்சந்தூர் சூரசம்ஹாரத்தை கண்டேன்.
  தீபாராதனை காட்சி கண்டு ஒற்றிக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 6. முருகனின் தரிசனம் நன்று ஜி
  முருகனுக்கு அரோகரா

  பதிலளிநீக்கு
 7. படங்கள் நன்று.

  அந்த அந்த ஸ்தலங்கள் பேர் படிக்கும்போது பாடல்கள் மனதில் ஓடுகின்றன.

  பதிலளிநீக்கு
 8. படங்கள் அனைத்தும் அருமை...

  சிறப்பான தரிசனம் கிடைத்தது... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 9. வேல் வாங்கும் காணொளி.... அப்பப்பா என்னவொரு வேகம்...

  படங்கள் அனைத்தும் அழகு.

  பதிலளிநீக்கு
 10. சிக்கல் பார்க்காத இடம் உங்கள்மூலம் அது நடந்தது

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..