நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கந்த சஷ்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்த சஷ்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 28, 2025

சஷ்டி 7

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை


பொதுவாக சிவாலயங்களின் திருவிழா மரபுகள் எப்படி இருப்பினும் கந்த சஷ்டிக்கு அடுத்த நாள் முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது..

அந்த வகையில் இன்றைய
திருப்புகழ்..

இப்பாடலின் தொடக்கத்தில் தேவகுஞ்சரியும் நிறைவில் வள்ளி நாயகியும் குறிப்பிடப்படுகின்றனர்..


திருமகள் உலாவும் இருபுயமு ராரி
திருமருக நாமப் ... பெருமாள் காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் ... பெருமாள் காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் ...... பெருமாள் காண்

மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவுகதிர் காமப் ... பெருமாள் காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் ... பெருமாள் காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் ... பெருமாள் காண்

இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் ... பெருமாள் காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி
கௌமாரம்

நாளும் ஒலிப்பேழையில் 
கேட்டு மகிழ்கின்ற பாடல் இது.


ஓம் சிவ சுப்ரமண்யாய
**

திங்கள், அக்டோபர் 27, 2025

சஷ்டி 6

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
திங்கட்கிழமை

இன்று
கந்தசஷ்டி

ஸ்ரீ முருகப்பெருமான்
தஞ்சை பெரிய கோயில

மதிகெட் டறவாடி மயங்கி அறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப அத்
திதி புத்திரர் வீறடு சேவகனே.. 50

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. 51
கந்தரனுபூதி
நன்றி கௌமாரம் 


நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டிதஸாமீ நமோநம ...
வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்..

ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...
 வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய 
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ... 
 பெருமாளே..


வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாச கணமும்

வெங்கழு குடன்கொடி பருந்து செம் புவனத்தில் வெம்பசி ஒழிக்க வந்தே

ஆதார கமடமும் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரி எலாம்

அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத் தசை  அருந்திப் புரந்த வைவேல்..

தாதார் மலர்ச் சுனை பழநி மலை சோலை மலை தனிப் பரங்குன்றே ரகம்

தணிகை செந்தூர் இடைக் 
கழி ஆவினன்குடி தடங்கடல் இலங்கை அதனில்

போதார் பொழிற் கதிர் காமத் தலத்தினைப் புகழும்  அவரவர் நாவினிற்

புந்தியில மர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புங்கவன் செங்கை வேலே...
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
*

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க  வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க  செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்..
-: கந்தபுராணம் :-

அனைவருக்கும் நன்றி

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

ஞாயிறு, அக்டோபர் 26, 2025

சஷ்டி 5

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை
சஷ்டி ஐந்தாம் நாள்


ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.. 38

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.. 46
 கந்தரனுபூதி
 நன்றி கௌமாரம்


சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
திகழ் கடப்பந்
தார் கொண்ட பன்னிரு தோள்களும்
தாமரைத் தாள்களும்ஓர்
கூர் கொண்ட வேலும் மயிலும் 
நற்கோழிக் கொடியும் அருட்
கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும் 
என் கண்ணுற்றதே..
-: திரு அருட்பா :-

ஸ்ரீ வள்ளலார் ஸ்வாமிகள் தமது நித்ய வழிபாட்டின் போது தணிகாசலத் திருக்காட்சியை நிலைக்கண்ணாடியில் தரிசித்தார்..

அச்சமயம் பாடிய பாடல்களில் ஒன்று..

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

சனி, அக்டோபர் 25, 2025

சஷ்டி 4


      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை
சஷ்டி நான்காம்  நாள்


சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருபாகரனே.. 34

நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே..  36
கந்தரனுபூதி


பாதி மதிநதி போது மணிசடை
     நாதர் அருளிய ... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ... மணவாளா

காதும் ஒருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு .... மருகோனே

காலன் எனையணு காமல் உனதிரு
     காலில் வழிபட ... அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ... சிறைமீளா

ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
     சூழ வரவரும் ... இளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனில் ... உறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
 நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

வெள்ளி, அக்டோபர் 24, 2025

சஷ்டி 3

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை
சஷ்டி மூன்றாம் நாள்


காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே. 22

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே.. 24
கந்தரனுபூதி


வசனமிக வேற்றி ... மறவாதே
     மனதுதுய ராற்றி ... லுழலாதே

இசைபயில்ஷ டாக்ஷ ... ரமதாலே
     இகபரசெள பாக்ய ... மருள்வாயே

பசுபதிசி வாக்ய ... முணர்வோனே
     பழநிமலை வீற்ற ... ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி ... மிகவாழ
     அமரர்சிறை மீட்ட ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

வியாழன், அக்டோபர் 23, 2025

சஷ்டி 2

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வியாழக்கிழமை
சஷ்டி இரண்டாம் நாள்


முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே..15

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடணனே.. 21
கந்தரனுபூதி


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ... வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
     வினைமாதர் தந்தம் ... வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
     கொடிதான துன்ப ... மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
     குறைதீர வந்து ... குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
     வழிபாடு தந்த ... மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
     வடிவேலெ றிந்த ... அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
     மடியாரி டைஞ்சல் ... களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
     அலைவாயு கந்த ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

புதன், அக்டோபர் 22, 2025

சஷ்டி 1

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
புதன் கிழமை
சஷ்டி முதல் நாள்


ஆடும் பரி வேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.. 1

உதியா மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா  அபயா அமரா பதிகாவல சூர பயங்கரனே.. 18
கந்தரனுபூதி


சந்ததம் பந்தத் ... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ... திரியாதே

கந்தனென் றென்றுற் ... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ... றிடுவேனோ..

தந்தியின் கொம்பைப் ... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

வியாழன், நவம்பர் 07, 2024

தமிழ் மாலை 6

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 21
வியாழக்கிழமை

கந்த சஷ்டி
ஆறாம் நாள்
சூர சம்ஹாரப் பெருவிழா

ஸ்ரீ அருணகிரிநாதர
அருளிச்செய்த
திருப்பாடல்கள்


தலம் சேலம்

தனதன தானத் தனதன தானத் தனதன தானத் ...  தனதான

பரிவுறு நாரற் றழல்மதி வீசச் சிலைபொரு காலுற் ... றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக் குழல்தனி யோசைத் ... தரலாலே

மருவியல் மாதுக் கிருகயல் சோரத் தனிமிக வாடித் ... தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத் தருள்முரு காவுற் ... றணைவாயே..

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத் தொடுகும ராமுத் ... தமிழோனே

கிளரொளி நாதர்க் கொருமக னாகித் திருவளர் சேலத் ... தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத் தனிமயி லேறித் ... திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக் கிளையவி நோதப் ... பெருமாளே..
-: திருப்புகழ் :-

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே.. 40
-: கந்தரலங்காரம் :-

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே..51
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

புதன், நவம்பர் 06, 2024

தமிழ் மாலை 5

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 20
புதன் கிழமை

கந்தசஷ்டி
ஐந்தாம் நாள்

ஸ்ரீ அருணகிரிநாதர
அருளிச்செய்த
திருப்பாடல்கள்


தலம் கருவூர்

தனதானத் தனதான 
தனதானத் ... தனதான

மதியால்வித் தகனாகி 
மனதாலுத் ... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான 
பரயோகத் ... தருள்வாயே

நிதியேநித் தியமேயென் 
நினைவேநற் ... பொருளானோய்
கதியேசொற் பரவேளே 
கருவூரிற் ...  பெருமாளே..
-: திருப்புகழ் :-

நாள் என் செயும்வினை தான் என் செயும் எனை நாடிவந்த
கோள் என் செயுங்கொடுங் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.. 38
-: கந்தரலங்காரம் :-

உதியா மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
பதி காவல சூர பயங் கரனே.. 18
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்
ஃஃ

தஞ்சை பூச்சந்தை
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத
சுப்ரமண்யர் தரிசனம்




திருச்செந்தூரில்
தங்கரதம்
 

 நன்றி நன்றி

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

செவ்வாய், நவம்பர் 05, 2024

தமிழ் மாலை 4

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 19
செவ்வாய்க்கிழமை

கந்த சஷ்டி
நான்காம் நாள்

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிச்செய்த
திருப்பாடல்கள்


தலம் தஞ்சை

தந்தன தானன ... 
தனதான

அஞ்சன வேல்விழி ... மடமாதர்
அங்கவர் மாயையி ... லலைவேனோ
விஞ்சுறு மாவுன .. தடிசேர
விம்பம தாயரு ... ளருளாதோ
நஞ்சமு தாவுணு .. மரனார்தம்
நல்கும ராவுமை ... யருள்பாலா
தஞ்சென வாமடி ... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ... பெருமாளே..
-: திருப்புகழ் :-

 பால் என்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையற்கண்
   சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
      வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே... 30
-: கந்தரலங்காரம் :-

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே.. 24
-: கந்தரநுபூதி :-
 நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

திங்கள், நவம்பர் 04, 2024

தமிழ் மாலை 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 18
திங்கட்கிழமை

கந்த சஷ்டி
மூன்றாம் நாள் 

ஸ்ரீ அருணகிரிநாதர
 அருளிச்செய்த
திருப்பாடல்கள்


தலம் எண்கண்
 (திருவாரூருக்கு அருகில்)

 தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த ... தனதான

சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
சண்ப கஞ்செ றிந்தி லங்கு ... திரடோளுந்

தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ... மயிலேறித்

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
சென்ற சைந்து கந்து வந்து ... க்ருபையோடே

சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து செம்ப தம்ப ணிந்தி ரென்று ... மொழிவாயே

அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன் அங்க முங்கு லைந்த ரங்கொள் ... பொடியாக

அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் ... மருகோனே

இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி டும்ப ரன்ற னன்பில் வந்த ... குமரேசா

இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு எண்க ணங்க மர்ந்தி ருந்த ... பெருமாளே..
-: திருப்புகழ் :-

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூடஅ முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே..15
-: கந்தரலங்காரம் :-

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே.. 15
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

ஞாயிறு, நவம்பர் 03, 2024

தமிழ் மாலை 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 17
ஞாயிற்றுக்கிழமை

கந்த சஷ்டி இரண்டாம் நாள்

அருணகிரிநாதர
 அருளிச்செய்த
திருப்பாடல்கள்


தலம் எட்டிக்குடி
(திருத்துறைப்பூண்டிக்கு அருகில் )

தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
     தனதத்த தனதத்த .. தனதானா

கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த 
கயலொத்த மலரொத்த .... விழிமானார்

கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு 
கதிர்முத்து முலைதைக்க ... அகலாதே

மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
மிடிபட்டு மடிபட்டு ... மனமாழ்கி

மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
மிகநட்பொ டருள்தற்கு ... வருவாயே..

தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட .... னுயிர்போகச்

சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி 
தருசக்ர தரனுக்கு ... மருகோனே

திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த ... புதல்வோனே

செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற ... பெருமாளே..
-: திருப்புகழ் :-

தேரணி இட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி இட்டு அணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்து அரக்கர் 
நேரணி இட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப் பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.. 3
-: கந்தரலங்காரம் :-

 
கெடுவாய் மனனே கதி கேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.. 7
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

சனி, நவம்பர் 02, 2024

தமிழ் மாலை 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 16
சனிக்கிழமை

கந்த சஷ்டி
முதல் நாள்


இன்று முதல் அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்பாடல்களுடன்
கந்தசஷ்டி சிறப்புப் பதிவுகள்

அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி


தலம் அவிநாசி

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
 
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே... 1
-: கந்தரலங்காரம் :-
 
ஆடும் பரி வேல்  அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.. 1
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

வெள்ளி, நவம்பர் 01, 2024

ஆறுமுகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 15
வெள்ளிக்கிழமை


நாளை 
கந்த சஷ்டி விரதம்
ஆரம்பமாகின்றது


கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்தில்
கான்ற மணிக்கு விலையுண்டு

தத்துங் கரட விகடதட தந்திப் 
பிறைக் கூன் மருப்பில் விளை
தரளந் தனக்கு விலையுண்டு
தழைத்து கழுத்து வளைந்த மணிக்

கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு
கொண்டல் தரும் நித்திலம் தனக்குக்
கூறுந்தரமுண்டு உன் கனிவாய்

முத்தம் தனக்கு விலை உண்டோ
முருகா முத்தம் தருகவே
முத்தம் சொரியும் கடல் அலைவாய்
முதல்வா முத்தம் தருகவே..
-: பகழிக்கூத்தர் :-

மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. . 22
-: கந்தரலங்காரம் :-


பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலும் 
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள்வாய் செய்ய வேல்முருகா 
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றில் நிற்குங் கந்தா இளங்குமரா அமராவதி காவலனே.. 79
-: கந்தரலங்காரம் :-

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

செவ்வாய், நவம்பர் 21, 2023

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 5
செவ்வாய்க்கிழமை


கந்த சஷ்டி ஆறாம் நாளை முன்னிட்டு அருகிருக்கும் அரசூர் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயிலில் சனிக்கிழமை காலை யாக பூஜையுடன் மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது..











தஞ்சையில் கரந்தை  எனப்படும் தொன்மையான தலமாகிய கருந்திட்டைக்குடியின் ஸ்ரீ வசிஷ்டேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் சூரசங்காரம் சிறப்புடன் நடைபெற்று மறுநாள் ஞாயிறன்று மாலை ஆறு மணிக்கு மேல் யாகபூஜையுடன் ஸ்ரீ சுப்ரமணியர் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.. 

திரளான பக்தர்கள் தரிசிக்க -  ஆயிரம் பேருக்கு மேல் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது..









திருக்கல்யாண விருந்து

ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்   
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்  
தன்கடன்னடி யேனையுந் தாங்குதல்  
என்கடன்பணி செய்து கிடப்பதே..
-: திருநாவுக்கரசர் :-
**
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***