நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 09, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வெள்ளிக்கிழமை

திருஞானசம்பந்தர் அருளிச்செய்த தேவாரம்


தலம்
திருக்கோளிலி
 (திருக்குவளை)

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.. 1/62/1

மட மனமே! 
உலகின்  நாள்கள் கழிவதற்கு முன்னரே நீலகண்டனாகிய சிவபெருமானுக்கு அடிமை பூண்டு அவனிடத்து அன்பு செய்வோம். 

பெருமானது திருநாமங்களை காதாரக் கேட்பாயாக. 

அவ்வாறு கேட்பின் நமது சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். 

துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு 
கோள் வினைகளை நீக்கி அருள் புரிகின்ற பெருமான் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்..

அவனை உணர்ந்து கொள்வாயாக...

ஓம் நம சிவாய
***

5 கருத்துகள்:

  1. காத்து நிற்பாய் வாழவைப்பாய் நீலகண்டா... ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
  2. திருக்கோளிலி இறைவனின் தேவாரத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. பாடல்பாடி கோளிலி எம் பெருமானை வணங்கினோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருஞான சுவாமிகளின் தேவாரம் பாடி திருநீலகண்டரை பணிந்து வணங்கி கொண்டேன். அவன் நாமம் தினமும் சொல்வதால் பேரின்ப மகிழ்ச்சியே கிடைக்கும். அதலால் தினம் அவன் நாம்ம் சொல்லி, அவனருளை வேண்டி நிற்போம்.

    ஓம் நம சிவாய....
    ஹர ஓம் நம சிவாய..
    ஓம் நம சிவாய....
    ஹர ஓம் நம சிவாய...

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..