நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
வியாழக்கிழமை
கடந்த வியாழனன்று (2/10) காலையில் ஸ்ரீ விட்டல் நாதனின் தரிசனத்திற்காக தஞ்சையில் புறப்பட்டு அன்று மதியம் சென்னை வந்தடைந்தோம்..
தாம்பரத்தில் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவின் அதிஷ்டான தரிசனம்... அன்னப்ரசாதம்...
சென்னையில் உறவினர்கள் சேர்ந்து கொண்டனர்..
மாலை 6:30 மணிக்கு சென்னையில்
இருந்து மும்பை விரைவு ரயிலில் பயணித்து வெள்ளிக்கிழமை காலையில் சோலாப்பூரை அடைந்து அங்கிருந்து வேறொரு ரயில் மூலம் ஸ்ரீ பண்டரிபுரத்தைச் சேர்ந்தோம்..
சோலாப்பூரில் இருந்து பண்டரிபுரம்
76 கிமீ ..
கோயிலுக்கு அருகே
சந்திரபாகா நதிக் கரையில் ஸ்ரீ த்வாரகாநாத் மந்திர் மடத்தின் தங்குமிடத்தில் தங்கி சந்திரபாகா நதியில் நீராடி விட்டு ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த அன்ன கூடத்தில் அன்ன ப்ரசாதம்...
அதன் பின் ஓய்வு..
மறுநாள் சனிக்கிழமை..
எங்களுக்கு அனுமதி நேரம் காலை ஏழு மணி...
நீண்ட வரிசையில் சென்று சந்நிதியை அடைந்து
அவனருளால் அவன் திருவடிகளில் தலை வைத்து வணங்கி நின்றோம்...
பண்டரிநாதனின் வலப்புறம் ஸ்ரீ ரகுமாயி சந்நிதி... பிரகாரத்தில் பல சந்நிதிகள்... அவற்றுள் ஸ்ரீ சிவபெருமானின் சந்நிதியும் ஒன்று...
திருக்கோயிலுக்குள் கைத்தொலைபேசிகளுக்கு அனுமதி இல்லை..
விட்டல் நாதன் தரிசனம் கண்டபின்
மதியத்தில் அக்கல்கோட் மகானின் அதிஷ்டான தரிசனம்.. அன்னப்ரசாதம்...
பண்டரிபுரத்திலிருந்து சுமார் 115 கிமீ தொலைவில் உள்ளது அக்கல்கோட்...
மூன்று மணியளவில் அக்கல்கோட்டில் இருந்து 65 கிமீ தொலைவில்
துளஜாபூர்..
சத்ரபதி சிவாஜிக்கு வீரவாள் வழங்கிய ஸ்ரீ பவானி அன்னை தரிசனம்...
சிறு பெண் பிள்ளைகளை தேவி போல அலங்கரித்து கோயிலுக்கு அழைத்து வருகின்றனர்...
பிறகு துளஜாபூரில் இருந்து புறப்பட்டு 45 கிமீ தொலைவில் உள்ள - சோலாப்பூர்
ஸ்ரீ சித்தேஸ்வரர் தரிசனம்..
சுற்றிலும் அகழி சூழ்ந்திருக்க கோட்டைக்குள் கோயில் உள்ளது...
அங்கும் அன்ன ப்ரசாதம் வழங்கப்பட்டது..
இரவு ஒன்பதரை மணியளவில் சோலாப்பூரில் புறப்பட்டு மறுநாள் இரவு நல்லபடியாக இல்லம் வந்து சேர்ந்தோம்...
முழங்கால் வலியுடன் நடந்ததும் படிக்கட்டுகள் ஏறி இறங்கியதும் கனவு போல இருக்கின்றன..
அனைத்தும் இறையருள்...
படங்கள் நன்றி இணையம்..
விட்டல விட்டல பாண்டுரங்க...
விட்டல விட்டல பாண்டுரங்க...
***






அவன் அருளால் அவன் தாள் வணங்கி... ஆம், எல்லாம் கொடுப்பினைதான்.
பதிலளிநீக்கு