நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 07, 2024

தமிழ் மாலை 6

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 21
வியாழக்கிழமை

கந்த சஷ்டி
ஆறாம் நாள்
சூர சம்ஹாரப் பெருவிழா

ஸ்ரீ அருணகிரிநாதர
அருளிச்செய்த
திருப்பாடல்கள்


தலம் சேலம்

தனதன தானத் தனதன தானத் தனதன தானத் ...  தனதான

பரிவுறு நாரற் றழல்மதி வீசச் சிலைபொரு காலுற் ... றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக் குழல்தனி யோசைத் ... தரலாலே

மருவியல் மாதுக் கிருகயல் சோரத் தனிமிக வாடித் ... தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத் தருள்முரு காவுற் ... றணைவாயே..

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத் தொடுகும ராமுத் ... தமிழோனே

கிளரொளி நாதர்க் கொருமக னாகித் திருவளர் சேலத் ... தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத் தனிமயி லேறித் ... திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக் கிளையவி நோதப் ... பெருமாளே..
-: திருப்புகழ் :-

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே.. 40
-: கந்தரலங்காரம் :-

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே..51
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

2 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..