நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 3
திங்கட்கிழமை
முதல் சோமவாரம்
சகல சிவாலயங்களிலும்
நூற்று எட்டு
சங்குகளால் அபிஷேகம்
நடத்தப்படுகின்ற நாள்..
இன்றைய
தரிசனம்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்.,
தஞ்சாவூர்
ஸ்வாமி
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்
தேவர்களுக்கு தஞ்சம் அளித்துக் காத்தருளிய இத்தலத்தில்
குபேரன் வழிபாடு செய்து மீண்டும் செல்வங்களைப் பெற்றதாக தல புராணம்..
அஷ்ட லக்ஷ்மி
மண்டபத்தில் குபேர தரிசனம்
ஸ்ரீ ஐயப்பனுக்கு நேர் எதிராக நவக்கிரகங்கள்..
ஸ்வாமி அவர்களை அடக்கி ஆள்வதாகவும் தோஷங்களை விலக்குவதாகவும் ஐதீகம்
ஸ்ரீ சிவவாக்கிய சித்தர்
**
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11/8
-: திருநாவுக்கரசர் :-
மயிலாடுதுறைக் காவிரியில்
கடைமுக தீர்த்தவாரி
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..