நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 26, 2022

ஆரூர் மூலட்டானம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று
புரட்டாசி எட்டாம் நாள்
மஹாளய அமாவாசை

ஆலய தரிசனம்


ஆரூர்
திரு மூலட்டானம்

இறைவன்
ஸ்ரீ புற்றிடங்கொண்டார்
அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை

தலவிருட்சம்
பாதிரி
தீர்த்தம்
கமலாலய திருக்குளம்

சைவ மரபில்
பூங்கோயில் எனப்படும் 
திருத்தலம்

கமலாலயத் திருக்குளத்தின் 
கீழ்க்கரையில் மஹாளய தர்ப்பணம்
வழங்கி விட்டு
மேற்கு வாசல் 
வழியே நுழைந்து  
ஸ்ரீகமலாம்பிகையின் 
ஞான பீடத்தை தரிசனம் செய்து 
விட்டு வலமாக வந்து 
திரு மூலட்டான தரிசனம்..

ஸ்வாமி எழுந்தருளாத 
கீழைக் கோபுர 
வாசலைத் தவிர்த்து 
மேலை வாசல் வழியாகவே 
வெளியேறினோம்..

நேர் வரிசையில் நவகிரகங்கள்
திருமூலட்டானம்

ஸ்ரீ ஜேஷ்டா தேவி

ஸ்ரீ கமலையின் சந்நிதியில்

காணிக்கை மண்டபத்தில்


திருக்குளத்தின்
படிக்கட்டுகள்
மிகவும் குறுகியவை..
அவற்றில் பாசி வேறு.. 
இது இயற்கை ஆதலால் 
திருக்குளத்தில் நீராடவில்லை..
கிழக்கு முகமாக நின்று செய்யவேண்டும் 
என்பதால் நூறு நூறு பக்தர்கள்..
குளக்கரையில் 
இயல்பான வாகனப் 
போக்குவரத்து..
வழக்கமான
நெரிசல்..


விண்டவெள் ளெருக் கு அலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவன் இருந்தவூர்
கெண்டைகொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத வோ
ஓசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தண் ஆரூர் என்பதே.. 2/101/2
-: திருஞானசம்பந்தர் :-

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிகை ஏந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.. 6/34/1
-: அப்பர் ஸ்வாமிகள் :-

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப் பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்து அணி
ஆரூரானை மறக்கலுமாமே.. 7/59/1
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் :-

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

 1. இங்கும் தாண்டிச் சென்ற கோவில்கள்தோறும் கூட்டம்.  நேற்றைய அமாவாசையுடன் மாளயபட்சம் இந்த வருடம் நிறைவுபெற்றது.  புரட்டாசி தொடர்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தியாகேசர் திருவருள் எங்கும் நிறைக..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்....

   நீக்கு
 2. சித்திரையில் போனப்போ இளங்கோயில் போக முடியலை! எங்கே! நடக்கவே கஷ்டமா இருந்ததே! :( அருமையான தகவல்களுடன் கூடிய சிறப்பான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அருமையான தகவல்களுடன் கூடிய சிறப்பான பதிவுக்கு நன்றி.//

   தியாகேசர் திருவருள் எங்கும் நிறைக..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. அத்தனை படங்களும் அருமை. திருவாரூர் ஆலய தரிசனம் நன்றாக உள்ளது. கோபுர தரிசனமும், நேர் வரிசையில் அமைந்த நவகிரகங்களின் தரிசனமும் பெற்றுக் கொண்டேன். துவஜ்ஸ்தம்பம் படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. இறை தரிசனத்துடன் சிறப்பாக கழிந்த மாஹாளய அமாவாசைக்கு மகிழ்ச்சி. சிவாய நம ஓம்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கோபுர தரிசனமும், நேர் வரிசையில் அமைந்த நவகிரகங்களின் தரிசனமும் பெற்றுக் கொண்டேன்..//

   தியாகேசர் திருவருள் எங்கும் நிறைக..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. தியாகேசர் திருவருள் எங்கும் நிறைக..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

   நீக்கு
 5. தரிசித்து கொண்டேன் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தியாகேசர் திருவருள் எங்கும் நிறைக..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

   நீக்கு
 6. அப்பர், சுந்தரர் தேவாரம் பாடி திருவாரூர் கோயிலை தரிசனம் செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தியாகேசர் திருவருள் எங்கும் நிறைக..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. // படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.//

   தியாகேசர் திருவருள் எங்கும் நிறைக..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..