நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 25, 2022

ஸ்ரீ வைத்யநாதம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றொரு தரிசனம்

வைத்தீஸ்வரன் கோயில்
எனப்படும்
புள்ளிருக்குவேளூர்


இரவு 7:30
மழைக்கான
 அறிகுறிகளால் கோயிலில் கூட்டம் இல்லை..

திருக்குளத்து நீர்
முற்றாக இறைக்கப்பட்டு
திருப்பணி
நடக்கின்றது..
ஸ்ரீ ஜடாயு குண்டம்


பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே..
6/54
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
**

14 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இன்றைய நல்ல தினத்தில் அருமையான சிவன் கோவில் தரிசனம் பெற்று கொண்டேன். அருள் மிகும் திருநாவுகரசரின் பாடலும் பாடி, சிவாய நம ஓம்மென மந்திரம் ஜபித்து தீராத நோய்களை தீர்த்தருளும் ஸ்ரீ வைத்ததீஸ்வர பெருமானை பக்தியுடன் வணங்கி கொண்டேன். சிவனருள் உலகில் உள்ள அனைவருக்கும் கிடைத்திட வேண்டி பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தீராத நோய்களை தீர்த்தருளும் ஸ்ரீ வைத்ததீஸ்வர பெருமானை பக்தியுடன் வணங்கி கொண்டேன்.//

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. வைத்தீஸ்வரன் கோவில் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் நெடுநாளாய் இருந்து வருகிறது.  நீங்கள் படமெடுப்பபதை சந்நதியிலிருந்து குருக்கள் பார்க்கிறார்!!  அந்த நீண்ட பிரகாரங்களை பார்க்கும்போது மனதில் என்னவென்று சொல்லத்தெரியாத ஒரு ஏக்கம், ஆசை வருகிரது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் விருப்பம் விரைவில் நிறவேறுவதற்கு வேண்டிக் கொள்கின்றேன்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்....

   நீக்கு
 3. தரிசனம் நன்று வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
 4. வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம் அருமை.
  முன் வாசல் பக்கம் போகவில்லை, படம் எடுக்கவில்லை நான் போன போது. அதை உங்கள் தளத்தில் பார்த்து விட்டேன். திருக்குள வேலை இன்னும் முடியவில்லை போலும் , நாங்கள் போன போதும் பார்க்க முடியவில்லை.
  அப்பர் தேவாரம் பாடி வேண்டிக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. முன் வாசல் என்பது - கோயில் மேற்கு நோக்கியது..

   சென்னையில் இருந்து வருபவர்களை கிழக்கு வாசலில் இறக்கி விட்டு விடுகின்றனர் .

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
  2. கடைத்தெரு இருக்கும் கிழக்கு வாசலில் இறங்கி பார்த்து பார்த்து அதுதான் முன்வாசல் என்ற எண்ணம் பதிந்து விட்டது.

   நீக்கு
 5. சில கோவில்களுக்கு மாலைமயங்கிய பிறகு சென்றிருக்கிறேன். பகலில் போயிருந்தால் படங்கள் நன்றாக வந்திருக்கும் என நினைத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பகலில் போயிருந்தால் படங்கள் நன்றாக வந்திருக்கும் என நினைத்திருக்கிறேன்..//

   தாங்கள் சொல்வது மிகவும் சரி..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி நெல்லை..

   நீக்கு
 6. அருமையான தரிசனம் கிடைச்சிருக்கு. அடிக்கடி போய் வந்த கோயில். திருப்பணிகள் நடந்தப்போப் போனது தான் கடைசியாப் போனது. பின்னர் போகவே இல்லை. திருக்குளம் சுத்தம் செய்யும் நிலைமையில் தான் மோசமாக இருந்தது. எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..