நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 22, 2022

ஐந்து வீட்டு சுவாமி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
உடன்குடி - செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமிகள் கோயிலில் அடுத்த தரிசனம் -

ஸ்ரீ வயணப் பெருமாள் சந்நிதி..

ஸ்ரீ வயணப்பெருமாள்
ஸ்ரீ பெரிய சுவாமியிடம் பக்தி கொண்ட நெசவுத் தொழிலாளி ஒருவர் ஆண், பெண்  குழந்தைகளைக் கண்டடுத்து வளர்த்து வந்தார்..

குழந்தைகள் வளர்ந்து திருமணப் பருவத்தை அடைந்தனர்..

பிள்ளைகளை வளர்த்தவர்கள் இவர்களுக்கு கலியாணம் செய்து வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டதைக் கேட்ட பிள்ளைகள் இருவரும் மனம் கலக்கமுற்றனர். 


முற்பிறப்பில் நாம் யாரென்று அறியாத இவர்கள் நம்மை  கணவன் மனைவியாக ஆக்கப் பார்க்கிறார்களே என்று வருத்தமுற்று ஸ்ரீ பெரிய பிராட்டி  அம்மனையும் ஸ்ரீ பெரிய சுவாமியையும் வணங்கியபடி தம்மை வளர்த்தவரது நெசவுக் கிடங்கில் பதுங்கினர்.. 

அப்போது பெரியபிராட்டி அம்மன் அவர்கள் இருவரையும் அரவணைத்துக் கொண்டாள். இருவரும் தெய்வ வடிவம் பெற்றனர்.. 

அவர்களே ஸ்ரீ வயணப் பெருமாளாகவும், ஸ்ரீ அனந்தம்மாளாகவும்  பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்...

ஸ்ரீ பெரிய சுவாமி சந்நிதிக்குத் தெற்குப் பக்கமாக ஸ்ரீ வயணப் பெருமாள் சந்நிதி அமைந்திருக்கின்றது.. 
 
ஸ்ரீ அனந்தம்மாள்
ஸ்ரீ வயணப் பெருமாள்
சந்நிதிக்குப் பக்கவாட்டில் 
ஸ்ரீ அனந்தம்மாள் சந்நிதி..

ஸ்ரீ வயணப் பெருமாள் ஸ்ரீ அனந்தம்மாள் இருவருக்கும் திருமுகம் பதித்து பூடங்களாக ( பதிவுகளாக) அமைக்கப்பட்டுள்ளது..


ஸ்ரீ வயணப் பெருமாளுடைய பீடம் - (சந்நிதி) மண்டபத்தில் அமைந்துள்ளதால் வலம் சுற்றி வரலாம்.. 

ஸ்ரீ அனந்தம்மாள் சந்நிதியின் பீடம் வலம் செய்ய இயலாதபடிக்கு அமைக்கப்பட்டுள்ளது..

இங்கே ஸ்ரீ அனந்தம்மாள் சந்நிதியில் வளையல்கள் காணிக்கை செய்யப்படுகின்றன..

பதிவிலுள்ள படங்கள் அவர்களது தளத்தில் இருந்தும் Fb யில் இருந்தும் பெறப்பட்டவை...

அவர்களது வலைத் தளத்தில் - 
அனந்தம்மாள் தசபதிகம் என்றொரு நூலைக் கண்டேன்.. சொற்படங்களாக  இருந்த அதிலிருந்து ஒரு பாடல் இன்றைய பதிவில்..

பதிகம் முழுவதிலும் 
ஸ்ரீ பார்வதியின் வடிவமாகவே வர்ணிக்கப் படுகின்றார் - அன்ந்தம்மாள்..

தசபதிகத்தை
இயற்றியவர் யார் என்ற விவரம் இல்லை..

கொண்ட கொண்ட கோலம் எல்லாம் உனது கோலம்
கூறுகின்ற வேதாந்தம் உனது கோலம்
அண்டர்களும் முனிவர்களும் உனது கோலம்
ஆதியந்தம் ஆனதுவும் உனது கோலம்
தொண்டரடி பிறைசடையார் உனது கோலம்
சூத்திரமும் சாத்திரமும் உனது கோலம்
தொண்டர் மனத் திருவே தையலாளே அடியேன்
தாசானு தாசனம்மா உன் சரணம்தானே.. (4)

ஐந்து வீட்டு சுவாமிகளே 
போற்றி போற்றி!..
***

14 கருத்துகள்:

 1. ஐந்து வீட்டு ஸ்வாமிகளை வணங்கிப் பணிவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐந்து வீட்டு சுவாமிகள் அனைவருக்கும் அருள் புரியட்டும்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்....

   நீக்கு
 2. பதில்கள்
  1. ஐந்து வீட்டு சுவாமிகள் அனைவருக்கும் அருள் புரியட்டும்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஐந்து வீட்டு சுவாமிகள் அனைவருக்கும் அருள் புரியட்டும்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

   நீக்கு
 4. பதிவு அருமை. பகிர்ந்த பாடலும் அருமை.
  ஐந்து வீட்டு சுவாமிகள் வரலாறு அருமையாக இருக்கிறது.
  படங்கள் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐந்து வீட்டு சுவாமிகள் அனைவருக்கும் அருள் புரியட்டும்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. மிக மிகப் புதிய அருமையான ஐந்து வீட்டு ஸ்வாமிகளின் வரலாறு படிக்கப் படிக்கச் சிலிர்க்கிறது. அறிமுகத்துக்கு மிக்க நன்றி. _/\_

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐந்து வீட்டு சுவாமிகள் அனைவருக்கும் அருள் புரியட்டும்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இன்றைய பதிவும் அருமை. சுவாமிகளின் படங்கள் நன்றாக உள்ளது ஐந்து வீட்டு சுவாமிகளின் தரிசனம் பக்தியுடன் பெற்றுக் கொண்டேன். இதுவரை அறியாத கோவிலின் வரலாற்று தகவல்களை தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐந்து வீட்டு சுவாமிகள் அனைவருக்கும் அருள் புரியட்டும்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. ஸ்ரீவயணப் பெருமாள், ஸ்ரீஅனந்தம்மாள் பற்றிய கதை படங்கள் எல்லாம் ரசித்தேன். நல்ல தகவல்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐந்து வீட்டு சுவாமிகள் அனைவருக்கும் அருள் புரியட்டும்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..