நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 10, 2022

அன்றும் இன்றும்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கீழ்க் காண்பது சோழ மண்டலத்தின் திலகமும் தமிழகத்தின் வாழ்வாதாரமும் ஆக விளங்கும், 
காவிரிப் பெருநதியில்  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அடித்தளமிடப்பட்ட கல்லணை.. 

அடித்தளமிட்டவர் சோழ மா மன்னர்
ஸ்ரீ கரிகாற் பெருவளத்தான்..இதுவும் அப்படித்தான்.. 
ஆயிரத்து நூறு ஆண்டுகளாக தஞ்சை மண்ணின் கம்பீரம்.. எதிரிகளை எல்லாம் வென்று அடக்கிய பிறகு வேறு வேலையில்லாமல் இருந்த நேரத்தில் ஸ்ரீ ராஜராஜ சோழ மா மன்னரால் எழுப்பப்பட்ட கோயில்.. வடக்கே நர்மதை நதிக்கரையில் இருந்து கொண்டு வரப்பட்ட லிங்க பாணம்..


இன்றைக்குச் சரியாக 1112 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட இக்கோயிலுக்கு
ஸ்ரீ ராஜராஜேஸ்வரம் என்று  பெயர் வைத்து விட்டுப் போயிருக்கின்றார் மன்னர்.. 


இக்கோயிலைப் போலவே இன்னொரு கோயிலும்  கட்டப்பட்டது.. அது கங்கை கொண்ட சோழ புரத்தில்..


கங்கையில் இருந்து நீரெடுத்து வந்து இந்த ஊரையும் கோயிலையும் 987 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியவர் சக்ரவர்த்தி ஸ்ரீ ராஜேந்திர சோழர் .. இவரது தந்தையின் பெயர் ஸ்ரீ ராஜராஜ சோழர்.. மேலே உள்ளவை சரித்திரம்.. 
கீழே காணப்படுபவை
சம்பவம்..
(செய்தித் துணுக்கு)
நன்றி : தினமலர்
*
நாடு நலம் பெறவும்
நல்லோர் மேன்மையுறவும்
வேண்டிக் கொள்வோம்..
***

18 கருத்துகள்:

 1. சிறப்பான தகவல்கள் படங்கள் திறக்கவில்லை பிறகு காண்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 2. ஆயிரம் ஆண்டுகள் தாங்கியும் நிற்கும் கட்டிடக்கலை.  ஐம்பது ஆண்டுகள் கூட தாங்காத திராவிட மாடல்கள்...  யார் சிறந்தவர்?  யார் முன்னேறியவர்?  யார் சிறந்த ஆட்சியாளர்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // யார் சிறந்தவர்? யார் முன்னேறியவர்? யார் சிறந்த ஆட்சியாளர்?.. //

   எதுக்கு வீண் வம்பு?..
   கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விடுவோம்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 3. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என தலைநோக்குடன் ஆட்சி செய்து மக்களுக்கும், தங்கள் பின்தோன்றல்களான நமக்கும் நன்மைகள் செய்த அவர்கள் எங்கே, 
  அவர்கள் செய்த நன்மைகளையும் அடைத்து நாசம் செய்து ஆட்சி செய்யும் இப்போதைய நம் ஆட்சி எங்கே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொலைநோக்குடன் என்று அடித்தால் தொலைநோக்குடன் என்று வந்திருந்தாலும் அதுவும் சரியாகவே இருக்கிறது!

   நீக்கு
  2. // மக்கள் தொண்டே மகேசன் தொண்டு..//

   எல்லாம் நன்மைக்கே!..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 4. பதில்கள்
  1. கொடுமையிலும் கொடுமை..

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
   தனபாலன்..

   நீக்கு
 5. இரண்டு ஒப்பீடும் அருமை.

  நான் தஞ்சைப் பகுதியில் பல கோவில்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். அதில், சரி பண்ணுகிறேன் என்ற போர்வையில் உள்ளே சிமிண்ட் தூண், பழைய கல்தூணை மாற்றி அல்லது அதை ஒட்டி சிற்பங்கள் அழியும்படி சிமெண்ட் தூண்கள், கலர் பெயிண்டுகள் அடிப்பது என்று ஒரே கூத்துதான்.

  நீங்க என்னவோ 100 ரூபாய் மதிப்பு என்றால், 90 ரூபாயையும் குடியிருப்பு கட்ட செலவழிப்பார்கள் என்று நினைக்கறீங்க (10 ரூபாய் கட்டுபவருக்கான லாபம்). 40 ரூபாய் லஞ்சம், 10 ரூபாய் கட்டுபவருக்கான லாபம், 20 சதத்துக்கு மேல், கட்டுமானப் பொருட்கள் வாங்குவதில் முறைகேடுகள் நடப்பதால், தரம் குறைந்த கட்டுமானப்பொருட்கள். அப்புறம் எப்படி குடியிருப்புகள் சரியா இருக்கும்? நீங்க நம்பமாட்டீங்க. ஜெ, ஏழைகளுக்காக கான்க்ரீட் வீடு கட்டிக்கொடுத்திருக்காங்க (ஒரு ஊர்ல சில பயனாளிகள்). அவை இன்றும் நன்றாக இருப்பதை நான் தஞ்சைப் பகுதிகளில் பல இடங்களில் கண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கட்டுமானப் பொருட்கள் வாங்குவதில் முறைகேடுகள் நடப்பதால், தரம் குறைந்த கட்டுமானப் பொருட்கள்.. //

   உண்மை இதுதான்.

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நெல்லை..

   நீக்கு
 6. காலத்தை கடந்து நிற்கும் கோவில்கள், அணைக்கட்டுக்கள். எல்லாம் மன்னரின் புகழ் பாடுகிறது.
  அவர்களின் மாளிகைகள் நிலைக்கவில்லை, ஆனால் அவர்கள் கட்டிய கோவில்களும் அவர்களின் சமுதாய பணிகளும் அழியா வரம் பெற்று சாட்சியாக நிற்கிறது.
  இப்போது கட்டப்படும் கட்டிங்கள் நிலையை நினைத்தால் மனது வேதனை அடைகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // காலத்தை கடந்து நிற்கும் கோவில்கள், அணைக்கட்டுக்கள். எல்லாம் மன்னர்களின் புகழ் பாடுகின்றன..//

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 7. ராமன் பொறியியல் படித்தானா? எனக் கேட்டுப்பொறியியல்காரர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களின் நிலைமை அன்றைய பொறியியலே படிக்காத மன்னர்கள் கட்டியவற்றை விட மோசமாகத் தானே இருக்கு! ராஜராஜ சோழனையோ/ராஜேந்திர சோழனையோ இவர்கள் கொண்டாடாவிட்டாலும் அவர்கள் செய்த் தொண்டுகள் பற்றிய சிறப்பான தகவல்களைத் தரும் கல்வெட்டுக்களையாவது அழிக்காமல் விட்டு வைக்கலாம். :(

  பதிலளிநீக்கு
 8. // அன்றைய பொறியியலே படிக்காத மன்னர்கள் கட்டியவற்றை விட //

  பொறியியல் என்னும் படிப்பை விட மேம்பட்ட தொழில் நுட்ப அறிவு அன்றைக்கு இருந்திருக்கின்றது..

  தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

  பதிலளிநீக்கு
 9. படங்கள் அத்தனையும் அற்புதம்!! மிக அழகு நந்நீஸ்வரர். கோயில் படங்கள் எல்லாம் அழகோ அழகு அருமையாக எடுத்திருக்கீங்க துரை அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
 10. அடுத்த செய்தியைப் பார்த்ததும்தான் பதிவின் சாராம்சம் புரிந்தது. பாருங்க எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும் காலத்தை வென்ற வரலாறு. இப்ப இருக்கு பாருங்க....கட்டப்படும் மேம்பாலங்கள் இடிந்து விழுதல் அடுக்குமாடிகள் விழுதல், கூரைகள் விழுதல் உயிர்பலி என்று

  பழசையாவது நல்லா வைச்சுக்கலாமே அதுவும்?

  கீதா

  பதிலளிநீக்கு
 11. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் .காண்போரை ஆச்சரியப்பட வைக்கும் கட்டிடக்கலை கள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..