நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 02, 2022

திருப்புகழ்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 17
வெள்ளிக்கிழமை 
வளர்பிறை சஷ்டி

இன்றைய பதிவில்
அருணகிரிநாதர் 
அருளிச்செய்த
திருப்புகழ்

திருத்தலம் - கருவூர்
(திருக்கருவூர் ஆனிலை)

கொங்கு நாட்டில்
திருஞான சம்பந்தப் பெருமான் 
திருப்பதிகம் அருளிச் செய்த 
தலங்களுள் இத்தலமும் ஒன்று..

இறைவன்
பசுபதீஸ்வரர்

அம்பிகை
கிருபாநாயகி
சௌந்தர்யநாயகி

தலமரம்
கொடிமுல்லை வில்வம்
தீர்த்தம்
அமராவதி ஆறு  

காமதேனு வழிபட்டதால் 
ஆனிலை..

சோழ மன்னர்களின் 
தலைநகரங்களில் 
இதுவும் ஒன்று..


தனதானத் தனதான 
தனதானத் .. தனதான

மதியால்வித் தகனாகி 
மனதாலுத் ... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான 
பரயோகத் ... தருள்வாயே..

நிதியே நித் தியமேயென் 
நினைவேநற் ... பொருளோனே
கதியேசொற் பரவேளே 
கருவூரிற் ... பெருமாளே..
(நன்றி : கௌமாரம்)


நான் எனது புத்தியினால் வித்தகன் ஆகிடவும் 
அதனால் என் மனம் நன்னெறியில் இயங்கி 
உத்தமனாகிடவும்

சிவஞானம் எனது சிந்தையில் பதிவாகும்படியும
அந்த யோக வழியை விட்டு விடாமல் பற்றிக் கொள்ளும் படியும் எனக்கு அருள் புரிவாயாக.

எனது செல்வமாக விளங்குபவனே, 
நித்யமாகத் திகழ்பவனே, 
எனது நெஞ்சகத்தில் நினைவாகி நிற்பவனே..
நலந்தரும் பொருள்களில் முதலாகி விளங்குவனே..

எனக்குப் புகலிடம் ஆனவனே எல்லாராலும் செவ்வேள் எனப் புகழப் பெறும் பரமமூர்த்தியே 
கருவூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும்
பெருமாளே!...

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
வீர வேல் முருகனுக்கு
அரோகரா..
***

15 கருத்துகள்:

 1. நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்

  புருவங்களுக் கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்

  கண்க ளிரண்டையும் கந்தவேல் காக்கட்டும்

  நாசிக ளிரண்டையும் நல்லவேல் காக்கட்டும்

  செவிக ளிரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்

  கன்னங் களிரண்டையும் காங்கேயன் காக்கட்டும்

  உதட்டி னையும்தான் உமாசுதன் காக்கட்டும்

  நாக்கை நம்முருகன் நயமுடன் காக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காக்க காக்க கனகவேல் காக்க
   நோக்க நோக்க
   நொடியினில் நோக்க..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. ‘நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளோனே’
  என்று வரவேண்டும். இத்திருப்புகழ் எனக்குச் சிறு வயதில் பாடம் ஆகியிருக்கிறது.

  வைஷ்ணவி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிழை திருத்தம் செய்து விட்டேன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. திருப்புகழ் பாடலும், விளக்கமும் நன்று

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 4. நல்ல திருப்புகழ் பகிர்வு.

  மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்

  பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே

  நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்

  கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.  நிதியேநித் தியமேயென் நினைவேநற் பொருளாயோய்
  என்று திருப்புகழ் .

  விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு
 5. நிதியேநித் தியமேயென் நினைவேநற் பொருளாயோய்
  என்று தான் இருந்தது.. அது பிழை என்று வைஷ்ணவி அவர்கள் சொல்லிய பிறகு மாற்றினேன்

  அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே.

  பதிவு அருமை மயில் வாகன, தம்பதி சமேதராக அழகன் முருகனின் படங்கள் அழகாக இருக்கிறது. திருப்புகழ் அருமை. அதன் விளக்கமும் படித்துக் கொண்டேன்.

  என் புது கைப்பேசியின் கற்றலில் பதிவுகளுக்கு வருவதற்கும், என் இன்றைய பதிவுகளுக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் பதிலளிக்க தாமதம் ஆகிறது. பொறுத்துக் கொள்ளவும்.
  ஒரிரு நாட்களில் பழகி இயல்பான நிலைக்கு திரும்பி விடுவேன். .தங்களின் விடுபட்ட பதிவுகளையும் விரைவில் படிக்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்துணை சிரமங்களுக்கு இடையேயும்

   தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. கருவூர் முருகன் திருப்புகழ் அருமை.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..