நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 19, 2022

டீ


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த சனிக்கிழமை (17/9) எங்கள் பிளாக் வழங்கிய செய்தியின் பின்ணணி தான் இந்தக் கதையின் கரு..

காலை எட்டு மணிக்கு எழுத ஆரம்பித்து மதியத்தில் முடித்து வலையேற்றி ஒழுங்கு செய்து வைத்தேன்..

சாதாரண ஏழை மக்களை - சமூகசேவை
பொது அறிமுகம் என்ற பெயரில் தங்களது ஆதாயத்துக்காக துளைத்து எடுக்கும் ஒருவர் இந்தக் கதையில் வருகின்றார்.. 

ஆஃப் பாயில் தமிழும் அரைவேக்காடு ஆங்கிலமும் கதையில் வருகின்றன.. இது என் பிழையன்று.. 

(இப்படி வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலத்தைக் கலந்து எழுதுவது எனக்குப் பிடிக்காத ஒன்று.. என்ன செய்வது?.. கதாபாத்திரத்தின் தன்மை அப்படி.. காலக் கொடுமை!..)

அவர்களது பாணியில் சொல்வதானால் -
இதயம் ஸ்ட்ராங்கா உள்ளவங்க மட்டும் இந்தக் கதையை ஸ்கிப் பண்ணிடாம  படிச்சுப் பாருங்க... 

திகிலும் மர்மமும் அதிர்ச்சியும் உங்களுக்காக காத்திருக்கின்றன... 

(உள்ளே அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை..)

அனைவருக்கும் நன்றி..


" ஒரு நாளைக்கு எத்தன டீ  சேல்ஸ் ஆகும்?.. "

" அதெல்லாம் ஏன் கேக்குறீங்க தம்பீ?.. " 

" உங்களுக்கு எவ்வளவு இன்கம் வருது.. எவ்வளவு பெனிபிட் கிடைக்குது.. ன்னு புல்லி விவரம்  போட்டுப் பார்க்கத் தான்!.. "

" போதும்.. நீங்க புள்ளி  போட்டு புள்ளி வைச்சதெல்லாம்!.. "

" ஹாய் பிரெண்ட்ஸ்..  குட்மார்னிங் .. நௌ த டைம் ஈஸ் நைன் தர்ட்டி.. இது ஒங்களோட டுபாக்கூர் சேனல் வழங்கும் ஊர் சுற்றும் உலக்கை!.. ஒருவர் ஆதரவும் இல்லாமல் உளைத்து வாலும் மக்களைப் பற்றிய நேரலை காணொளித் தொகுப்பு.. "

" நௌ வீயார் இன் ஓல்ட் கலெக்டர் ஆபீஸ் ரோட்... "

" இது போன்ற  நேரலை நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்த்து என்ஜாய் பண்ண நம்ம சேனலை உடனே சப்ஸ்கிரைப்  செய்ங்க.. மறக்காம லைக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க.. வாங்க நாம நிகழ்ச்சிக்கு உல்லே போகலாம்.. இப்போ வந்து பாத்தீங்கன்னா.. ஓல்ட் கலெக்டர் ஆபீஸ் ரோட் ரொம்பப் பிஸியாவே இருக்கு.. இந்த ரோட்ல ஒரு வயசான அம்மா!.. "

" என்னது ஒரு வயசான அம்மாவா?.. "

" நோ..நோ.. வயசான அம்மா ஒருத்தங்க மசாளா டீ சேல்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. டேஸ்ட்டும் செமய்ய் யா இருக்கு.. வாங்க புரோ... இப்போ அங்கே  போயி அவங்களோட வேலைக்கு வேட்டு வெக்கலாம்!.. "

" சொல்லுங்க மா.. உங்க பேரென்ன மா?.. "

" தஞ்சாவூரம்மா!.. "

" தஞ்சாவூரம்மா!.. நைஸ் நேம்.. அந்த ஊர் எங்கேயிருக்கு?.. "

" அது இருக்கு .. அந்தப் பக்கம்!.. "

" பாருங்க புரோ... அயிம்பது மயிலுக்கு அந்தப் பக்கம் இருந்து இங்கே வந்து டீ சேல்ஸ் பண்றாங்க.. சொல்லுங்க மா.. உங்க புருசன் செத்துப் போனதுக்கு அப்புறம்.. "

" அட.. அறிவு கெட்ட தம்பீ.. நெத்தியில குங்குமம் இருக்குறது கண்ணுக்கு தெரியலையா!..  " 

 கையில் கேமராவுடன் நின்றிருந்த மற்றவன் - " கீய்.. கீய்.. " என்று சிரித்து வைத்தான்.. 

" ஓ..   ஒங்க புருசன் உயிரோடத் தான் இருக்காரா!.. கோச்சுக்காதீங்க..  அது அலங்காரப் பொட்டு..
ன்னு நெனைச்சிட்டேன்.. "

" ஹாய் புரோ.. இப்போ வந்து பாத்தீங்க.. ன்னா!.. இந்த அம்மாவோட ஹஸ்பண்ட் உயிரோடத் தான் இருக்காராம்...  ஆனாலும் அவர் இந்த பீல்டுக்குல்ல வரலை... ஏன்.. ன்னு கேக்கலாம்!..  ஏம்மா உங்க ஹஸ்பண்ட் உயிரோட இருக்கறப்போ நீங்க வந்து இங்க வெயில் ல நின்னு மசாளா டீ சேல்ஸ் செய்றீங்க!.. இத எப்படி ஃபீல் பண்றீங்க?... " 

" அவங்களுக்கு வயசாகிட்டது.. ரொம்ப நேரம் நிக்க முடியலை.. வீட்ல இருக்காங்க.. அதுவும் இல்லாம போன மாசம்  பாழாப் போன லாரிக்காரன் விட்டு அடிச்சுட்டுப் போய்ட்டான்.. வண்டி அப்படியே நொறுங்கிப் போச்சு... இது நாப்பதாயிரம் கொடுத்து புதுசா செஞ்சது!.. "

" ஓ.. மை குட்னஸ்.. அப்பவும் எஸ்கேப் ஆயிட்டாரா!.. "

" லாரி மோதுனது டீ வண்டி மேல!.. "

" அப்படியா.. யாரும் வந்து பார்த்தாங்களா.. இழப்பீடு நிதி எதும் கொடுத்தாங்களா?..  "

" ஒரு புண்ணாக்கும் கொடுக்கலை.. கேட்டதுக்கு ரோட்ல டீ வித்ததுக்காக ஒம்மேல கேஸ் போடுவோம்.. ன்னாங்க.. நாங்க பயந்து ஒதுங்கிக்கிட்டோம்.. "

" இப்போ வந்து பார்த்தீங்கன்னா புரோ... வண்டி மேல ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டு - லாரிக்காரன் ஓடியிருக்கான்.. "

" ஒரு டீ வித்து வாழ்க்க நடத்துறது கூட எவ்ளோ கஷ்டமா இருக்கு  பாருங்க... சொல்லுங்க மா.. உங்க புல்லிங்க எத்தன பேர்.. என்ன பண்றாங்க.. காலேஜ்ல படிக்கிறாங்களா.. கம்ப்யூட்டர் புரோக்ராமரா இருக்காங்களா?.. " 

" ராமராவும் இல்லே.. லெச்சுமணாவும் இல்லே.. ஒரு பையன் தான்.. அவனும் டீக்கடை தான் வச்சிருக்கான்  மார்க்கட்... ல.. "

" ஏம்மா... ஒவ்வொருத்தர் டீ வித்து பெரிய பணக்காரங்களா ஆயிருக்காங்கலே!.. " 

" அதுக்கெல்லாம் தலையெழுத்து வேணும் தம்பி.. 
நா மந்திரி வேலை பார்த்தா கவலப்படலாம் -  எம் மவன் இன்னும் மந்திரி ஆகலையே.. ன்னு.. நாங்க எல்லாம் வெந்ததத் தின்னுட்டு விதியேன்னு கிடக்கறவங்க.. 
ஏதோ இந்த மட்டுக்கு கை காலு கண்ணு நல்லா இருக்கே... அதுவே  பெரிய வரம்.. " 

" ஹாய்.. புரோ!.. இது ஒங்களோட டுபாக்கூர் சேனல் வழங்கும் ஊர் சுற்றும் உலக்கை!. 
ஒருவர் ஆதரவும் இல்லாமல் உளைத்து வாலும் மக்களைப் பற்றிய நேரலை காணொளித் தொகுப்பு.. இப்போ வந்து பார்த்தீங்க.. ன்னா!.. "

"ஹாய் புரோ!.. மசாலா டீ சேல்ஸ் பண்ற லேடியும் பாலிடிக்ஸ் பேசறாங்க.. சொல்லுங்க மா.. இப்போ மார்க்கெட்டிங் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு?.. " 

" மார்க்கெட்டா.. அது அங்கே.. ல்ல  இருக்கு!.. " 
- இது தஞ்சாவூரம்மாவின் பதில்..

" ஓ.. அதுவும் அப்படியா!.. ஒங்க சேல்ஸ் எப்படி இருக்குன்னு கேட்டேன்.. " 

" அதுவா.. கலெக்டர் ஆபீசு இங்க இருந்த வரைக்கும் நல்லாத் தான் இருந்துச்சு.. அது ஏழு மைலுக்கு அந்தப் பக்கம் போனதும் ஏவாரம் மந்தமா ஆயிடுச்சு.. " 

" பார்த்தீங்களா புரோ... கலெக்டர் ஆபீஸ இடம் மாத்துனதால ஏற்பட்ட வலிய எவ்ளோ அளகா ஸ்ட்ராங்கா இங்கே பதிவு பண்றாங்க.. ன்னு!.. சரி.. இப்போ கொண்டு வந்திருக்கிற டீ எல்லாம் வித்துப் போனதும் வண்டிய தல்லிக்கிட்டு வீட்டுக்கு போய்டுவீங்களா.. " 

" எம் மகனுக்குப் போன் பண்ணுவேன்.. வேற ஒரு கேன் ல டீ கொண்டு வந்து கொடுத்துட்டு இந்தக் கேனை எடுத்துக்கிட்டு போய்டுவான்!.. "

" ஓகே மா!.. ஹாய் புரோ.. இப்போ வந்து பார்த்தீங்க..ன்னா.. இவங்களுக்கு நாம நம்ம சேனல் வளியா ஏதாவது ஹெல்ப் பண்லாம்..ந்னு நினைக்கிறேன்.. சொல்லுங்க மா!.  ஒங்களுக்கு  என்ன மாதிரி ஹெல்ப் வேணும்?.. கேளுங்க செய்றோம்!.. " 

" வேற என்ன வேணும்.. கலெக்டர் ஆபீசு மாறிப் போனாலும் இந்தப் பக்கம் சொசைட்டி பேங்குக்கு சனங்க வர்றதும் போறதுமா 
இருக்குதே..இருந்தாலும் சனங்களுக்கு ஒதுக்கமா போறதுக்கு தான் எடமே இல்ல.. "

" ஒதுக்கமா போறதுக்கு!.. அப்படீன்னா?.. " அவனுக்கு வியப்பு.. 

அடுத்தவன் சிரிப்புடன் சொன்னான் -  " டாய்லெட்!.. "

" அவசரத்துக்கு அந்தப் பூக்காரப் பொண்ணு கிட்ட சொல்லிட்டு பஸ்டாண்டு கக்கூஸ் க்குப் போய்ட்டு வருவேன்..  அவ பூக்கூடையயும் சமயத்துல நான் பார்த்துக்குவேன்.. "

"ஓ... இது முனிசிபாலிட்டி பிராப்லம்.. சீரியஸ் மேட்டர்.. " 

- என்று சொல்லிக் கொண்டிருந்த போது -

அங்கு வந்த போலீஸ் காவலர் இருவர் -
அவனைப் பிடித்துக் கொண்டார்கள்..

" ஒய்?.. "

" டேய்.. நீ தான ஊர் சுத்தும் உலக்கை?.. "

" யெஸ்!.. "

" ஐயா கூப்பிடுறார் நடடா.. "

அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டபடி , கையில் இருந்த ஆடியோ ரெகார்டரைப் பிடுங்கிக் கொண்டார்..

" சும்மா ஒரு டப்பா செல்போன கையில் வச்சிக்கிட்டு ரோட்ல போற வர்றவங்கள தொந்தரவு பண்ணி வீடியோவா எடுக்குறது. மத்தவங்க பொழப்பக் கெடுக்குறது.. வெட்டிப் பயலுங்களா.. சார்.. அந்த டூ வீலரோட சாவிய கையில எடுத்துக்குங்க.. அந்தப் பயலையும் தள்ளிக்கிட்டு வாங்க சார்!.. " 

" வந்தது வந்தீங்க.. ஒரு டீ குடிக்கலாமே.. சார்!.. - என்றார் தஞ்சாவூரம்மா..
***

மசாலா டீ வாழ்க..
***

16 கருத்துகள்:

 1. ஆஹா சல சலன்னு மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது பதிவை படித்து முடித்ததும். அவ்வளவு வேகமாக போனது பதிவு அருமை ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விறுவிறுப்பான கருத்துரை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி

   நீக்கு
 2. பெரிய பணக்காரங்களாக மட்டுமே ஆகி உள்ளார்கள்...? வெங்கோலனாகவும்... ம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு எதுக்குங்க ஊர் வம்பு?..

   மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே.

  பதிவு அருமை.

  /அவர்களது பாணியில் சொல்வதானால் -
  இதயம் ஸ்ட்ராங்கா உள்ளவங்க மட்டும் இந்தக் கதையை ஸ்கிப் பண்ணிடாம படிச்சுப் பாருங்க...

  திகிலும் மர்மமும் அதிர்ச்சியும் உங்களுக்காக காத்திருக்கின்றன./

  என்னவோ ஏதோவென பரபரப்புடன் படித்தேன். தங்கள் பாணியிலேயே சொல்வதானால் இன்றைய கால கொடுமைதான் இது..

  கடைசி வரி நன்றாக உள்ளது. அது ஏழைகளின் என்றும் மாறாத பாமர உள்ளம்.. ஸ்வாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன். .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // திகிலும் மர்மமும் அதிர்ச்சியும் உங்களுக்காக காத்திருக்கின்றன.. //

   அது சும்மா நகைச்சுவைக்காக எழுதினேன்..

   ஆயிரக்கணக்கான காணொளிகள் இப்படித் தான் வருகின்றன..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. இந்த சேனல் காரங்க தொல்லை தாங்க முடியவில்லைதான்.  டீ விக்கறவங்களை விடுங்க..  சினிமா விமர்சனம்ங்கற பேர்ல ஒருகும்பல் பண்ணும் அலம்பல் இருக்கே...  தாங்காது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் ஒன்றும் புரியாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தாலே யூட்யூப் வழியாக பணமும் கிட்டும் போல் இருக்கின்றது..

   பெரிய கோயில் மர்மம் என்ன என்று இவங்க கண்டு பிடித்த மாதிரி பினாத்துகின்றார்கள்..

   சொல்லப் போனால் கொடுமை...

   ஏதோ என்னால் ஆனது போலீஸ் மூலமாக ஒரு அறை..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
  2. அட? யூ ட்யூப் வழியாப் பணமும் கிடைக்குமா? புதுத் தகவல். !!!!!!!!!!!!!!!!!!!!

   நீக்கு
 5. அவர்கள் பேசும் தமில் போலவே எலுதி இருப்பதையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது தானே முக்கியம்..

   தங்கள் அன்பின் வருகையும் ரசிப்பும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 6. அவர்களின் தமிழ் கொலைதான் செம அதை கேட்கவும் பொறுமை வேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. சிரித்துவிட்டேன் சார். நன்றாக இப்போதைய நிலையை சொல்லியிருக்கிறீர்கள். ஒன்றுமே இல்லாத யுட்யூப் சானல்களின் வருமானம் பயங்கரமாக இருக்கிறது. படிப்பு சம்பந்தமாக நாம் போடுவது செல்லுபடியாவதில்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 8. ஹாஹாஹாஹா....துரை அண்ணா ரொம்ப ரொம்ப ரசித்து வாசித்தேன். உண்மையாவே அப்படியே எழுதியிருக்கீங்க. இப்படித்தான் சானல்ல (யம்மாடியோவ் இப்படி நிறைய வ்ளாக்னு சானல் வைச்சுருக்காங்க) பலரும் பேசுகிறார்கள். சும்மா ஏதோ ஒன்றை நாங்களும் பதிவு செய்கிறோம் என்று அலப்பறைகள்.

  டீ க்ளாஸை நல்லா கழுவி ஊத்தியிருக்கீங்க!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 9. அண்ணா மொழியை விடுங்கள், அது ஒரு புறம் கிடக்கட்டும்....அவங்க என்ன எடுக்கறாங்க அதுல விழுந்து விழுந்து பார்க்க என்ன இருக்கு என்பது புரிவதே இல்லை. அது போல பல சானல்கள் சும்மா தலைப்பு ஒன்று உள்ளே ஒன்னும் இருக்காது...அதையும் நீங்க நல்லா கலாய்ச்சிருக்கீங்க

  //திகிலும் மர்மமும் அதிர்ச்சியும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன//

  கீதா

  பதிலளிநீக்கு
 10. இப்போ வந்து பார்த்தீங்கன்னா, ரொம்ப நல்லா இப்போ வந்து பார்த்தீங்கன்னா எழுதி இருக்கீங்க. இப்போ வந்து பார்த்தீங்கன்னா, உங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..