நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 20, 2022

ஐந்து வீட்டு சுவாமி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***


கடந்த 29/8 அன்று
திருச்செந்தூர் - உடன்குடியை அடுத்துள்ள செட்டியாபத்து ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி தரிசனம்..

கோயிலைப் பற்றிய விவரங்களுடன் பதிவு தொடர்கின்றது..

திருச்செந்தூர் தரிசனம் செய்தபின் உடன்குடி அங்கிருந்து உவரி என்றே நான் நினைத்துக் கொண்டிருக்க விதி வேறு மாதிரியாக புன்னகைத்து வைத்தது..

உடன்குடி வழியாக ஐந்து வீட்டு சுவாமிகள் தரிசனம் என்று அறிந்ததும் மனதில் ஆனந்த அலைகள்..

இந்தக் கோயிலைப் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தெரியும்.. 


எனது மைத்துனர் (சென்னை வாசி) திருக்கயிலையை தரிசித்தவர்.. 

மயிலை திருக்கபாலீச்சரத்தை தினமும் தரிசிக்கும் வழக்கத்துடன் விடியற் காலை நடைப் பழக்கத்தையும் உடையவர்.. 

இவரது கால் திடீரென வீங்கிக் கொண்டு வேதனை கொடுக்க ஏதேதோ வைத்தியங்கள்.. ஒன்றும் பலனில்லை.. 

கோயில் அர்ச்சகர் ஒருவர் மூலமாக விஷயம் உடைபட்டது..

யாரோ யாருக்கோ கழிப்பு கழித்த பொருட்களை மிதித்ததனால் வந்த வினை என்று.. 

இந்த - கழிப்பு கழித்தல் - என்பது பில்லி, சூனியம், ஏவல் இவற்றுடன் தொடர்புடையது.. இவற்றினால் அல்லல் அடைந்தவர்களுக்கே புரியும்.. 

அப்போது யாரோ சொல்லியிருக்கின்றார்கள் ஐந்து வீட்டு சுவாமிகளைப் பற்றி..

அதன்பின் அங்கு சென்று செருப்பு காணிக்கை செய்து வழிபட்ட பின் படிப்படியாக அதிலிருந்து விடுபட்டு தற்போது நலமாக இருக்கின்றார்..

அப்போது உடன் சென்றிருந்த என் மனைவி இரண்டாண்டுகளுக்கு முன் கொரோனா தொற்றுக்கு ஆளாகிய போது உலகமெங்கும் ஓலம்.. 

அவ்வேளையில் தலைமாட்டில் நின்று காப்பாற்றியது தெய்வத்தின் அருளே.. 

உவரியும் உடன்குடியும் அருகருகே என்பதால் ஒருசேர வருவதாக வேண்டுதல்.. அதை அப்போதே - முதல் ஊரடங்கு தளர்வின் போதே நிறைவேற்றியதாக நினைத்துக் கொண்டிருந்தபோதில் - 

கோயிலில் செலுத்தியிருக்க வேண்டிய காணிக்கையை மறந்திருந்தது தெரிய வந்தது..

இதற்குப் பின், 
குவைத்தில் இருந்து திரும்பிய சில மாதங்களில் எனக்கு மோசமான உடல் நலக் குறைவு ஏற்பட்டதும் உவரி குல தெய்வக் கோயிலில் இருந்து அருள் வாக்கு வந்தது - ஆவணியில் எல்லாம் சரியாகி விடும்!.. - என்று..

அதன் பிறகு தான் இந்தப் பயணம்.. 


ஐந்து வீட்டு சுவாமி கோயிலுக்குப் போகின்றோம் என்றதுமே பரவசம்..

மாலை வேளை என்றானபடியால் அதிக படங்களை எடுக்க இயலவில்லை.. 

மேலும் கோயிலின் உள்ளே படங்கள் எடுக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டதும் ஒரு காரணம்.. 

அந்தக் குறையைப் போக்கிட திரு. ஆத்தியப்பன் என்பவரது கோயில் தளத்தில் இருந்து படங்கள் கிடைத்தன.. அவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பதிவுகளில் தருகின்றேன்..

இரவு ஏழு மணியளவில் எல்லா சந்நிதிகளிலும் நடத்தப்பட்ட பூஜையைத் தரிசித்தோம்..

தொடர்ந்து, வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது..

கோயிலின் சந்நிதிகளைப் பற்றிய செய்திகளுடன் அடுத்த பதிவு..

ஐந்து வீட்டு சுவாமிகளே 
போற்றி போற்றி!..
***

16 கருத்துகள்:

 1. தகவல்கள் பிரமிக்க வைக்கிறது தரிசனம் நன்று தொடர்ந்து வருகிறேன் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

   நீக்கு
 2. ஐந்து வீட்டு சாமிகள் கோயில் தரிசனம் செய்ய உங்கள் மனதில் ஏற்பட்ட ஆனந்த அலைகள், மற்றும் உங்கள் மைத்துனருக்கு ஏற்பட்ட இடர் அதிலிருந்து அவர் இறை அருளால் மீண்டது எல்லாம் அருமை.

  தெய்வத்தின் அருளால் வாழ்க்கை துணைவி பிழைத்த விவரம்
  எல்லாம் அறிந்து எல்லாம் இறைவனின் திருவுள்ளம்.
  நம்பினவர்களை காக்கும் கடவுள்.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // எல்லாம் இறைவனின் திருவுள்ளம்.
   நம்பினவர்களை காக்கும் கடவுள்.. //

   நிதர்சனமாகக் கண்ட உண்மை..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. என் நண்பனின் மகன் உடல் நலிவிற்கும் இதுபோன்ற குறுக்கீடுகளால் இருக்குமோ...  அவன் குணமாகவும் ஐந்து வீட்டு ஸ்வாமியின் அருள் தேவைப்படுமோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அவன் குணமாகவும் ஐந்து வீட்டு ஸ்வாமியின் அருள் தேவைப்படுமோ.. //

   விருப்பம் எனில் முயற்சி செய்யவும்..

   நண்பருடன் கலந்து கொள்ளவும்..

   ஐந்து வீட்டு ஸ்வாமிகள் துணை.

   நீக்கு
 4. படிக்கும்போதே சிலிர்க்கிறது .நம்பினவர்களை காக்கும் தெய்வம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. //நம்பினவர்களைக் காக்கும் தெய்வம்..//

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி .

   நீக்கு
 5. ஐந்துவீட்டு சாமி . புதியதாய் அறிகிறேன். இரு பகுதிகளும் வாசித்தேன். உங்கள் அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. இறைவனின் திருஅருள் உங்களுடன் இருக்கும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி துளசிதரன்..

   நீக்கு
 6. படங்கள் நல்லா இருக்கு அண்ணா. மூன்றாவது படம் அழகு.

  உங்களின் மைத்துனரின் அனுபவங்கள் ஆச்சரியம். இப்படி சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு. இப்போது உங்கள் மைத்துனரின் அனுபவம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைவிடப் பயங்கரமான
   அனுபவங்கள் எல்லாம் இருக்கின்றன..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

   நீக்கு
 7. ஐந்து வீட்டு சாமி பற்றி இப்போத் தான் கேள்விப் படுகிறேன். இதற்கு அடுத்ததை முதலில் வாசித்துவிட்டேன் போல. இதற்கு முன்னால் உள்ளதையும் போய்ப் பார்க்கிறேன். ஐந்து வீட்டு சாமி அனைவரது வாழ்விலும் ஆரோக்கியமும் மனமகிழ்ச்சியும் பெருகச் செய்யட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஐந்து வீட்டு சுவாமி அருளால் அனைவரது வாழ்விலும் ஆரோக்கியமும் மனமகிழ்ச்சியும் பெருகட்டும்..//

   நமது பிரார்த்தனையும் அதே தான்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..