நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 04, 2022

ஓம் சக்தி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 
மூன்றாம் ஞாயிறு


நானாட்சி
செய்து வரும் நான்மாட
கூடலிலே மீனாக்ஷி
என்ற பெயர் எனக்கு.. (2)

கங்கை நீராட்சி
செய்து வரும் வடகாசி
தன்னில் விசாலாக்ஷி
என்ற பெயர் வழக்கு.. (2)

கோனாட்சி
பல்லவர்தம் குளிர்சோலை
காஞ்சி தன்னில் காமாக்ஷி
என்ற பெயர் எனக்கு.. (2)

கொடும்
கோலாட்சி தன்னை
எதிர்க்கும் மாரியம்மன்
என்ற பெயர் கொண்டபடி
காட்சி தந்தேன் உனக்கு.. (2)

ஆறென்றும்
நதியென்றும் ஓடை
என்றாலும் அது நீரோடும்
பாதை தன்னை குறிக்கும்.. (2)

நிற்கும் ஊர்
மாறி பேர் மாறி கரு
மாறி உரு மாறி ஒன்றே
ஓம் சக்தியென உரைக்கும்.. (2)
*
திரைப்படம் : ஆதிபராசக்தி
பாடலாசிரியர் : கவியரசர்
இசை : K.V. மகாதேவன்
பாடியவர்: P. சுசீலா
ஆண்டு : 1971
காணொளி தொகுப்பு
தஞ்சையம்பதி..


ஓம் சக்தி ஓம்
ஓம்
***

15 கருத்துகள்:

 1. என்ன ஒரு இனிமையான பாடல்.. நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்றும் இனிமையான பாடல்..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. பதில்கள்
  1. ஆர்ப்பாட்டம் இல்லாத இனிமையான பாடல்..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. அன்னை மாரியம்மனை தரிசித்துக் கொண்டேன். அழகான பாடல். ஆதிபராசக்தி படம் வந்த புதிதில் அனைவரின் மனதிலும் தினமும் ஒலித்த பாடல். எனக்கு மிகவும் பிடித்த மனனமான பாடல்

  காணொளி அருமையாக உள்ளது. பாடலுக்கு ஏற்றபடி அழகாக தொகுத்திருக்கிறீர்கள். காணொளி பாடலில் வரும் அன்னைகளை தரிசித்துக் கொண்டேன். அன்னையின் அருளாசி உங்களுக்கு எப்போதும் நிரந்தரமாக இருக்கும். இந்த நல்ல நாளில் அனைவரும் அன்னையை பணிந்து மனமாற வேண்டிக் கொள்வோம். தெய்வீகமான பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த நல்ல நாளில் அனைவரும் அன்னையை பணிந்து மனமாற வேண்டிக் கொள்வோம்..//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. //www.youtube.com’s server IP address could not be found.// :(. ஆனால் பாடல் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அடிக்கடி கேட்டிருக்கேன். இந்தப் படம் போக ஆசைப்பட்டுப் போக முடியலை. :(

  பதிலளிநீக்கு
 5. யூ ட்யூப்பில் தான் முழுப்படமும் இருக்கின்றது..

  ஓய்வான ஒருநாளில் ஆர அமர பார்த்து விட வேண்டியது தானே..

  தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

  பதிலளிநீக்கு
 6. அடிக்கடி கேட்ட பாடல் மிகவும் ரசித்த பாடல் இப்போதும் ரசித்தேன் துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 7. அருமையான அம்மன் படத்தொகுப்பு இனிமையான பாடல் . மிகவும் பிடித்த பாடல். கேட்டு மகிழ்ந்தேன்.
  ஓம் சக்தி ! ஓம் சக்தி! ஓம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓம் சக்தி.. ஓம் சக்தி .. ஓம்!..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி!..

   நீக்கு
 8. நல்லதோர் அம்மன் பாடல் எங்கள் அப்பா விரும்பிப் போட்டுக் கேட்ட பாடல்..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..