நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 24, 2022

ஸ்ரீ ராமசந்த்ரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஸ்ரீ சுபகிருது வருடம் 
புரட்டாசி முதல் சனிக்கிழமை


இன்றைய தரிசனம்
வடுவூர்
(வகுளாரண்யம்)
ஸ்ரீ கோதண்டராமர்

ஸ்ரீ சீதாபிராட்டியுடனும்
இளையபெருமாள்
சொல்லின் செல்வனொடு
ஸ்ரீகோதண்டராமனாக
புஷ்பக விமானத்தின் கீழ்
கிழக்கு நோக்கிய
திருக்கோலம்..


ஒருசமயம் 
ஸ்ரீ ராமபிரான் தன்னைத்
தானே வடிவமைத்து - தன்னை வேண்டி நின்ற முனிவர்களிடத்தில் தந்தருளினார்..


ஸ்ரீ ராமன் தந்தருளிய திருமேனிகளை முனிவர்களது காலத்திற்குப் பின் - தனக்குள் ஆகர்ஷித்துக் கொண்டாள் பூமாதேவி..

 அந்தத் திருமேனிகள் தாம் தற்போது வடுவூரில் எழுந்தருளியிருப்பவை..


இன்னருள் நல்கும் இராமபிரானின் திருமுக தரிசனம் பார்க்கப் பார்க்கத் திகட்டாதது.. 

ஐந்து நிலைகள் கொண்ட ராஜ கோபுரத்துடன் விளங்கும் இந்தக் கோயிலில் மூலமூர்த்தியாக ஸ்ரீ கோதண்டராமன்..

இந்தத் தலத்தைத் தென் அயோத்தி என்றும் கூறுவர். 

வடுவூரிலுள்ள இந்தக் கோவில் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிக்கு உரியதாக இருந்தது..


மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமியைத் தரிசித்த பின் இந்த ராம பிரானைத் தரிசிப்பது சம்பிரதாயம்..

ஸ்ரீ ராமபிரான் இங்கு எழுந்தருளியதற்குக் காரணம் தான் என்ன?..

என்ன காரணம் ? - எனில், அது அவன் ஒருவனுக்கே தெரியும்!..

ஆயினும்,
அந்த வரலாற்றை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்..


திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள தலைஞாயிறு என்ற இடத்தில் ராமர், சீதை, லக்ஷ்மணன், அனுமன் ஆகிய மூர்த்திகள் மண்ணுக்குள் மறைந்து கிடப்பதாகத் தஞ்சை மன்னர் சரபோஜி கனவு கண்டார்..

தஞ்சையில் இருந்து தலைஞாயிறு கிராமத்திற்குச் சென்றதும் அங்கே கருடன் வட்டமிட்டு அடையாளம் காட்டியது.. 


கவனமாக விக்ரகங்களை மீட்டெடுத்து வரும்போது இந்த வடுவூரில் இரவு தங்கும்படி நேரிடுகின்றது.. மக்கள் திரண்டு வந்து ராம தரிசனம் செய்கின்றனர்.. 

பொழுது விடிந்ததும் மன்னர் தஞ்சைக்குப் புறப்பட்டபோது மக்கள் ஸ்ரீ ராமனை எங்களுக்கே கொடுத்து விடுங்கள் என்று கண்ணீருடன் நின்றனர்.. 


அது கண்டு அதிர்ந்த மன்னர் அவ்வண்ணமே வடுவூர் ஸ்ரீவேணு கோபாலன் கோயிலில் பிரதிஷ்டை செய்கின்றார்..

அன்றிலிருந்து மக்களின் அபிமானத் தலம் ஆனது வடுவூர்..

தஞ்சாவூர் மன்னார்குடி வழித் தடத்தில் 20 கிமீ., தொலைவில் உள்ளது வடுவூர்..


நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.. 12
பாயிரம்
-: ஸ்ரீ கம்ப இராமாயணம்:-
(பதிவின் படங்கள்
இணையத்திலிருந்து)

காட்சித் தொகுப்பு காணொளி
தஞ்சையம்பதி


ஓம் ஹரி ஓம்
***

11 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

   நீக்கு
 2. மிகச் சமீபத்தில் இந்தக் கோவில் தரிசனம் வாய்க்கப்பெற்றேன். இங்கு இராமர் மட்டும்தான் எழுந்தருளினார். பிறகுதான் மற்றவர்கள் (லக்ஷ்மண சீதா...) சேர்க்கப்பட்டனர். எங்கள் பிளாக்குக்காக, இந்தக் கோவில் படங்களெல்லாம் சேர்த்து எழுத ஆரம்பித்திருக்கிறேன். ராமர் புன்னகை எங்கும் காண வாய்க்காதது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படித்தான் எல்லா தளங்களும் சொல்கின்றன..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி நெல்லை..

   நீக்கு
 3. என் மாமியாரின் ஊர் இதுதான். எனவே சில தடவைகள் சென்றிருக்கிறேன்.

  படங்களும் தகவல்களும் சிறப்பு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. புரட்டாசி முதல் சனியன்று எம்பெருமானின் அற்புத தரிசனம் கிடைக்கப் பெற்றேன். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் படங்களும், கோவிலைப் பற்றிய பதிவும் வெகு அருமையாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.. நன்றி..

   நீக்கு
 5. பதிவு அருமை.காணொளி படத் தொகுப்பு அருமை.
  பாடல் பகிர்வு அருமை.
  ஓம் ஹரி ஓம்

  பதிலளிநீக்கு
 6. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

  ஓம் ஹரி ஓம்..

  பதிலளிநீக்கு
 7. மிக அருமை. ஶ்ரீராமன் அழகு மனதைக் கொள்ளை கொள்ளும். நாங்களும் மன்னார்குடி போயிட்டு வந்தப்புறமாவே இங்கே போனோம். ஶ்ரீவேணுகோபாலனும் அழகாக இருப்பான். ஆனாலும் ஶ்ரீராமர் வந்தப்புறமா வேணுகோபாலனுக்கு அவ்வளவு மவுசு இல்லையோனு தோணும். :)

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..