நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2023

காசியம்பதி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 28 
 ஞாயிற்றுக்கிழமை


திருத்தலம்
காசி (வாரணாசி)


இறைவன்
ஸ்ரீ விஸ்வநாதர்
ஸ்ரீ விஸ்வலிங்கம்


அம்பிகை
ஸ்ரீ விசாலாட்சி 
ஸ்ரீ அன்னபூரணி


தீர்த்தம் - கங்கை 
தல விருட்சம் - வில்வம்

இந்நாட்டின்
புனிதங்களில் முதன்மையானது..

கங்கைக் கரையில் அமைந்துள்ள திருத்தலம்..

மோட்சபுரிகள் ஏழினுள் முதலாவது.. 
மற்றவை - அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, உஜ்ஜைனி (அவந்தி), துவாரகை..

இத்தலத்தில் உயிர் துறக்கும் (ஈ, எறும்பு முதல்) அனைத்து உயிர்களுக்கும்  முக்தி நலம் அருள்கின்றான் பரமன்..


பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் முதலாவதான தலம்..

தேவியின் காதணிகள் விழுந்ததால் சக்தி பீடங்களில் இத்தலம் மணிகர்ணிகா பீட்ம்..

வாரணா, ஹசி எனும் இரண்டு நதிகளுக்கு இடையே அமைந்திருப்பதால் வாரணாசி எனவும் புகழ்வர்.. 

காசியின்  விஸ்வலிங்கம் மரகத மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது..

கல்விக்கும் நல்லறிவிற்கும் அதிபதியான புதன் இங்கே வழிபட்டு உய்ந்தனன் என்பது ஐதீகம்..


இங்கே ஆன்மாக்கள் அனைத்தையும் தன் மடியில் கிடத்தி - வையத்தில் வாழ்ந்த களைப்பின் வாட்டம் தீர தனது முந்தானை கொண்டு ஸ்ரீ விசாலாட்சி விசிறி விடுகின்றாள் என்பது ஆன்றோர் வாக்கு..

ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு ராம பிரானின் ஆணைப்படி சிவலிங்கம் எடுக்க வந்த அனுமனுக்கு தன்னுடைய அனுமதியின்றி சிவ லிங்கத்தை அடையாளம் காட்டியதற்காக கருடனுக்கும் பல்லிக்கும் சாபம்  அளித்தார் - கால பைரவர். 

அதனால் தான் வாரணாசியில் இப்போதும் கருடன் பறப்பதில்லை.. பல்லி சப்தமிடுவதில்லை..

இந்தத் திருத்தலத்திற்கான திருப்பதிகம் நமக்குக் கிடைக்கவில்லை.. 

ஆயினும்,
ஞானசம்பந்தப் 
பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும் திருவூர்த் தொகையினுள் குறித்திருக்கின்றனர்..

சிவ மரபினைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இத்தலமே இலக்கு..

ஆனால் அந்நிய
ஆக்ரமிப்பாளர்களால் மிக அதிக அளவில் சேதப்படுத்தப்பட்ட தலமும் இதுவே.. 

வகைப்படுத்தப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் காசியும் ஒன்று.. வீரம் இருந்தும் எந்த ஒரு நாட்டின் மீதும் படை செலுத்தாத ஒரே நாடு.. 

ஆயினும், காசியம்பதிக்கு மாற்றார் செய்த கொடுமைகள் கொஞ்சம் அல்ல.. 

அதனை வாய் விட்டுச் சொல்வதற்கும் நமக்கு உரிமை இல்லை..


பல நூற்றாண்டு ஆக்ரமிப்பில் இருந்த பல பகுதிகள்  மீட்கப்பட்டு - கங்கைக் கரையில் இருந்து ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் வரைக்கும் சந்நிதி வீதி சீரமைக்கப்பட்ட ஆண்டு 2021..

இதனை சற்று விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம்..

புனித காசிக்கு இணையாக 
தமிழகத்தில் ஆறு தலங்கள் போற்றப்படுகின்றன..

" ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூரம்  அர்ஜுனம் சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்திர ஸமான ஷட்

- என்ற ஸ்லோகத்தின்படி காசியம்பதிக்கு நிகரான தலங்கள் - 
திருவெண்காடு, திரு ஐயாறு, மயிலாடுதுறை, திரு இடைமருதூர், சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம் - என்பன..

இத்தலங்களின் 
சிறப்புகளை அடுத்து வரும் பதிவுகளில் சுருக்கமாகக் காண்போம்..

இத்தலங்கள் ஆறினையும் குறித்து 
எளியேன் எழுதிய பாடல் இது..

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..
**
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

26 கருத்துகள்:

  1. காசி சென்று வந்துள்ளேன் என்பதில் துளி சந்தோஷம்.  காசிக்கு இணையான நம் திருத்தலங்களில் ஒரே ஒரு இடத்திற்குதான் சென்று வந்துள்ளேன், அதுவும் முழுமையாக அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. // அதனை வாய்விட்டு சொல்வதற்கு நமக்கு உரிமை இல்லை //

    உண்மைதான்!

    பதிலளிநீக்கு
  3. ஆறினையும் இணைத்து நீங்கள் எழுதிய பாடலை பாடி காசி விஸ்வநாதரை, விசாலாட்சியை, கங்கா மாதாவை தரிசனம் செய்து கொண்டேன். ஆடி மாதம் அம்மனுக்கும் ,ஆவணி ஞாயிறு, சுவாமிக்கும் திருவெண்காட்டில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். ஆடி மாதம் சாய்க்காட்டில் விழாக்கள் நடக்கும். திருவெண்காட்டை காசிக்கும் வீசை பலம் அதிகம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிக செய்திகளுக்கு மகிழ்ச்சி..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. விரிவான செய்திகள் அருமை.படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது . அன்னபூரணி படம் ஒரு கையில் அன்ன பாத்திரத்தோடும், மறுகையில் கரண்டியுடன் இருப்பார், நீங்கள் பகிர்ந்து இருக்கும் படம் கன்யாகுமரி. அவர்தான் ஒரு கையில் அட்சைய மாலையோடும் மறு கையில் கமண்டலத்தோடும் இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னபூரணி வேறொரு ஸ்வரூபம்.. இங்கே உள்ள படம் விசாலாட்சி அம்மன் தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. காசி விஸ்வநாதர் அசுரர்களை அழிக்க தெற்கே அனுப்பிய அன்னை பகவதி தேவி என்றும், வடநாட்டில் காளிகட்டில் உள்ள காளிதேவி என்றும் புராண வரலாறு சொல்வதால் கன்னியாகுமரி படம் போட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    அசுரர்களை அழிக்க கடுந்தவம் இருந்தாள் கன்னியா குமரி என்பதால் கன்னியாகுமரி அம்மன் கையில் உத்திராட்ச மாலை, கமண்டலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கன்யாகுமரியின் வடிவம் வேறு..

      அதுபற்றி விளக்கம் பிறகு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. கன்னியாகுமரியின் வடிவம் வேறுதான். பாவாடை தாவணியில் வலக்கையில் அட்சைய மாலையில் இருப்பார். கமண்டலம் கிடையாது. தவறுக்கு மன்னிக்கவும்.
      எங்கள் வீட்டில் பெரிய படம் இருக்கிறது.
      அன்னபூரணி படம் நீங்கள் போடவில்லை. அந்த கதை தனி தான். படித்து இருக்கிறேன்.
      அன்னபூரணி, விசாலாட்சி என்று அம்மன் கீழ் போட்டு இருந்ததால் அப்படி சொல்லி விட்டேன்.

      நீக்கு
  6. ஓம் நமசிவாய வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  7. ஜோதி தொலைக்காட்சியில் அடிக்கடி காசி விஸ்வநாதரை காட்டுகிறார்கள். இப்போது புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பகுதிகளை அதில் தான் பார்த்தேன். புதிதாக வரும் சினிமாக்களில் காசியை காட்டுகிறார்கள். கங்கா மாதாவுக்கு செய்யப்படும் ஆரத்தி, எல்லாம் அடிக்கடி பார்க்கிறேன்.
    இன்று உங்கள் தளத்திலும் காசிவிஸ்வநாதர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோதி யில் சில விஷயங்களைத் தவறாகக் காட்டுகின்றனர்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ஜோதியில் உடனுக்கு உடன் திருவிழாக்களை காட்டுகிறார்கள். வரலாறுகளை நம்புவது இல்லை.
      அவர்கள் படித்தவற்றை அவர்கள் சொல்கிறார்கள்.
      நான் காசி கோவிலை அடிக்கடி பார்க்க முடிகிறது என்று சொன்னேன்.முன்பு காசிக்கு போவது மிகவும் கடினம், வாய்க்கரிசி வாங்கி கொண்டு போவார்கள் என்பார்கள். இப்போது மிக எளிதாக போய் வந்து விட முடிகிறது.

      படங்களிலும் அப்பா, அம்மா அஸ்தியை கரைக்க போவது போல காட்டுகிறார்கள் அதனால் காசியை அடிக்கடி பார்க்க முடிகிறது என்றேன்.

      நீக்கு
  8. ராவண சம்ஹாரத்திற்குப் பிறகு அனுமன் காசி சென்று சிவலிங்கம் கொண்டு வரச் சென்ற கதை அறிந்திருக்கிறேன் பதிவிலும் சொன்ன நினைவு வாலீஸ்வரர் கோயிலைப் பற்றிச் சொன்னப்ப. அதுக்குத் தேடினப்பதான் இந்தப் புராணக் கதை தெரிந்துகொண்டேன். இப்ப உங்கள் பதிவின் மூலமும்.

    சிறப்பான தகவல்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அந்தக் கதை விரிவானது..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி தனபாலன்..

      நீக்கு
  11. காசி விசுவநாதரைப் பல முறை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

    முக்தி தரும் நகர் ஏழில் உஜ்ஜயினி சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ..

      நீக்கு
  12. தென்காசி எனப் புகழ்பெற்ற தலத்தை விட்டுவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்லோகத்தில் உள்ள தலங்களை மட்டும் சொல்லியிருக்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. காசி தலம் குறித்த உங்கள் பதிவு சிறப்பு. முக்தி தரும் நகர் ஏழில் இன்னும் உஜ்ஜயினி மட்டும் சென்றதில்லை. காசி பலமுறை தரிசித்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. சாயாவனம் தவிர்த்து மற்றவை போயிருக்கேன். 98 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்/தமிழ் ஆடி மாதம் காசிக்குச் சென்று வந்தோம். அதுக்கப்புறமாப் போகப் பல முயற்சிகள் செய்தும் போக முடியலை. நாலைந்து வருஷங்கள் முன்னர் விமானப் பயணச்சீட்டு, தங்குமிடம் எல்லாம் முன் பதிவு செய்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் போக முடியலை. இனி நினைத்தும் பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..