நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2023

சுதந்திரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 30
செவ்வாய்க்கிழமை


அனைவருக்கும்
சுதந்திரத் திருநாள்
நல்வாழ்த்துகள்
**
 
நாடு பிடிக்க வந்தவ அராபிய வம்சத்தினர்
ஏறத்தாழ எண்ணூறு வருடங்கள் நம்மை வஞ்சகத்தால் ஆட்சி செய்து - அழிந்தனர்..  

பின் வந்த ஐரோப்பியர்
வளங்களை எல்லாம் சுரண்டி எடுத்துக் கொண்டு இந்நாட்டை வறுமையில் தள்ளி விட்டுச்  சென்றனர்... 

இன்னமும் அந்தக் கொடூரர்களுக்கு அடி வருடி விடும் பலர் இந்நாட்டில் இருக்கின்றனர்..

இந்நாடு ஆப்பிரிக்க நாடுகளைப் போல மேற்கத்திய நாடுகளுக்கு நிரந்தர அடிமையாகாதபடி இறைசக்தி மீட்டெடுத்தது.. 

சுதந்திரம் பெற்ற சமயத்தில் அங்கும் இங்கும் நடத்தப்பட்ட படுபாதகங்கள் இன்றும் இணையத்தில் காணக் கிடக்கின்றன..

பெறப்பட்ட சுதந்திரம் பெரும்பாலான மனிதர்களை சுயநலம் மிக்கவர்களாக மாற்றியது..

கொடுக்கப்பட்ட 
கல்வி பெரும்பாலான  ஊழியர் லஞ்சம் வாங்குவதற்கும் பெரும் பொருள் சேர்ப்பதற்கு மட்டுமே பயன்படுகின்றது..

கொடுக்கப்பட்ட சுதந்திரத்தால் உடன் பிறந்த வியாதிகளாக பற்பல கும்பல்கள்..

இதற்கெல்லாம் 
சாட்சிகளாகத் தினந்தினமும் 
சம்பவங்கள்!..

இருப்பினும் 
வாழ்க சுதந்திரம்!..

நெஞ்சில் உரமும் இன்றி 
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே 
வாய்ச்சொல்லில் வீரரடி..
-: மகாகவி :-

வாழ்க தாயகம்




ஜாலியன்வாலா பாக்

அந்தமான் சிறை



வ.உ.சி. அவர்களை வாட்டிய செக்கு

 

ஜெய் ஹிந்த்

வாழ்க பாரதம்
வளர்க தமிழகம்.. 
***

12 கருத்துகள்:

  1. தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்கண்ணீரால் காத்தோம்! . 
    மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
    மாண்பினை இழப்பாரோ ?

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.  மெக்காலேயின் உரையின் பகுதியை வெளியிட்டது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. இனிய சுதந்திர தின வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சுதந்திர தின சிறப்புப் பதிவும், படங்களும் அருமை. படங்களும் செய்திகளும் மனதை கனக்க வைக்கிறது. இது மிகவும் கஸ்டப்பட்டு பெற்ற சுதந்திரம் என்பதை நாட்டின் மக்கள் அனைவரும் இன்றாவது உணர்ந்தால் சரிதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    வந்தே மாதரம்.
    வாழ்க பாரதம்.

    தங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மிகவும் கஷ்டப்பட்டு பெற்ற சுதந்திரம் என்பதை நாட்டின் மக்கள் அனைவரும் இன்றாவது உணர்ந்தால் சரிதான்.. ///

      சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  4. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    எங்கள் குடியிருப்பு வளாகத்தில் கொடியேற்றம் நடந்தது. குழந்தைகள் 10 மரகன்றுகளை நட்டார்கள்.

    தலைவர் யாவரும் பொது நலன் கருதி
    மீட்டு எடுத்தது சுதந்திரம் சுதந்திரம்

    தியாகங்களை செய்து நாட்டுக்காக உழைத்ததை நினைவு கூற்வோம் இன்று
    .வாழ்க ! வாழ்க ! பாரதம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தியாகங்களை செய்து நாட்டுக்காக உழைத்ததை நினைவு கூர்வோம்..///

      சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    தியாகங்களில் பூத்த சுதந்திரத்தை உணர்ந்து போற்றுவோம். நம்மால் செய்ய முடிந்த நல்லதைச் செய்வோம். வாழ்க பாரதம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தியாகங்களில் பூத்த சுதந்திரத்தை உணர்ந்து போற்றுவோம்.

      சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் மிக மிக அரிதானவை. காணக்கிடைக்காத பொக்கிஷங்கள். அருமையான பதிவுக்கும், படங்களுக்கும் மிக்க நன்றி. நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // படங்கள் எல்லாம் மிக மிக அரிதானவை. காணக்கிடைக்காத பொக்கிஷங்கள்... //

      படங்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை..

      சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..