நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2023

சொல்லரும்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 3
முதல் ஞாயிற்றுக்கிழமை


கண்ணெடுத்துப் பார்க்க வேண்டும் 
கைகொடுத்துக் காக்க வேண்டும்..
முன் நடக்கும் வேளையிலே அம்மா 
முந்தி வந்து வாழ்த்த வேண்டும்..

வேழவனும் அருகிருக்க 
வேலவனை அரவணைத்தாய்
வேம்புடைய ஐயனுக்கு அம்மா
உன்மடியில் இடம் கொடுத்தாய்..

சொல்லரும்பு சூட்டுதற்கு அம்மா 
சூட்சுமங்கள் சொல்ல வேண்டும்..
நல்லதொரு சொல்லெடுக்க அம்மா
நா நயங்கள் சேர்க்க வேண்டும்..

பெற்றெடுத்துப் பெயரும் வைத்தாய் 
அம்மா பேரழகாய் வளர்த்தெடுத்தாய்
உற்றதொரு அறிவுடனே அம்மா
உச்சந்தலை வகிடெடுத்தாய் 


ஊனோடு உயிராகி  உள்ளிருந்து 
மொழி கொடுத்தாய்.. அம்மா
பக்கத்திலே நீயிருந்து இந்தப் 
பாலகனை வளர்த்தெடுத்தாய்..

நான் நடக்கும் வழியினிலே
நல்ல மலர் பூத்திருக்க
பூத்திருக்கும் பூக்களையும்
எந்தன் விழி பார்த்திருக்க..

அம்மா நீ அருள்புரிவாய்
ஆதரித்து நலந்தருவாய்
வந்தாரும் வாழ்ந்தாரும்
வாழ்த்துகின்ற வடிவழகே..

வல்வினைகள் வருத்தாமல்
வந்தவழி செல்ல வேண்டும்..
வாசல்நடை தேடிவந்து அம்மா
நானும் உன்னைப் பாட வேண்டும்..

ஆயிரங்கண் உடையவளே
அருள்மாரி பொழிபவளே
அன்பு கொண்டு பாடுகின்றேன்..
ஆதரவில் வாழுகின்றேன்..

கேட்டதுவும் குறைவு என்றால்
தந்ததுவும் நிறைவு அன்றோ..
தாய் முகத்தில் தயவிருக்க
தாள்மலரைப் போற்றுகின்றேன்..
**
ஆடி அமாவாசையன்று
திரு ஐயாற்றில்
அப்பர் ஸ்வாமிகளுக்கு
கயிலாயத் திருக்காட்சி


காணொளியாளருக்கு நன்றி..
*
ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம் சக்தி 
ஓம்
***

18 கருத்துகள்:

  1. இணைந்து நானும் பணிகின்றேன்.  இறைஞ்சுகிறேன்.  என்னையும்தான் உன்னருளால் காத்திடுவாய் அம்மா.இன்பங்கள் பெருக வேண்டாம்.  துன்பங்கள் குறைந்தால் போதும் .நீ இல்லை என்று கேட்டே ஜென்மம் முழுவதும் புளிக்கிறது.    இருக்கிறாய் என்று ஒருமுறை காட்டிவிடேன்.  காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மேலதிக பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கவிதையை மிகவும் ரசித்தேன். உணர்ச்சிப் பெருக்கில் உதித்த கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை,
      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஓம் சக்தி ஓம்
    காணொளி கண்டேன் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  4. கவிதையை மிகவும் ரசித்தேன் துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  5. காணொளியும் கண்டேன் தரிசனம் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அம்மன் மேல் தாங்கள் இயற்றிய தங்களின் பாமாலை மிகச் சிறப்பாக உள்ளது. வரிகள் இயல்பாக பக்திப் பெருக்கோடு வந்து அமைந்துள்ளது. கவிதையை பாடி நானும் அன்னையை பரிபூரணமாக சரணடைந்து விட்டேன். அன்னை எல்லோருக்கும் நல்லதை தந்திட பிரார்த்தனையும் செய்து கொண்டேன். ஓம் சக்தி, பராசக்தி. 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // அம்மன் மேல் தாங்கள் இயற்றிய தங்களின் பாமாலை மிகச் சிறப்பாக உள்ளது.//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நிகழ்ச்சி முழுதையும் நேற்று ஜோதி தொலைக்காட்சி மூலம் கண்டு களித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  8. கவிதை அருமையாக இருக்கிறது.
    காணொளி அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது.
    ஜோதி தொலைக்காட்சியில் பார்த்தேன், கயிலை காட்சியை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..