நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

ஆயி மகமாயி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 10 
 ஞாயிற்றுக்கிழமை


ஆதி பராசக்தி திரைப் படத்திற்காக
பாரம்பர்ய மாரியம்மன் தாலாட்டினை ஒட்டி
கவியரசர் இயற்றிய பாடல்

பாடியவர் சுசீலா
இசை 
திரை இசைத் திலகம்
இயக்கம்
இயக்குனர் திலகம்


ஆயி மகமாயி ஆயிரம்
கண்ணுடையாள் 
நீலி திரிசூலி நீங்காத
பொட்டுடையாள்

சமயபுரத்தாளே 
சாம்பிராணி வாசகியே 
சமயபுரத்தை விட்டு 
சடுதியிலே வாருமம்மா..

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே..

சிலம்பு பிறந்ததம்மா
சிவலிங்கப் பாறையிலே 
பிரம்பு பிறந்ததம்மா 
பிச்சாண்டி சந்நிதியில்

உடுக்கை பிறந்ததம்மா
உருத்திராட்ச பூமியிலே 
பம்பை பிறந்ததம்மா  
பளிங்கு மா மண்டபத்தில்

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே..

பரிகாசம் செய்தவரை 
பதைபதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டு விட்டா
பக்கத்துணை நீ இருப்பே..
மேல்நாட்டுப் பிள்ளையிடம் 
நீ போட்ட முத்திரையை 
நீ பார்த்து ஆத்தி வச்சா 
நாள் பார்த்து பூஜை செய்வான்..

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே..

குழந்தை வருந்துவது 
கோயிலுக்குக் கேட்கலையோ 
மைந்தன் வருந்துவது 
மாளிகைக்கு கேட்கலையோ..

ஏழைக் குழந்தையம்மா
எடுப்போர்க்கு பாலனம்மா 
உன் தாளில் பணிந்து விட்டான்
தயவுடனே பாருமம்மா..

கத்தி போல் வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும்
வித்தை தனை யார் அறிவார்..


ஆயா மனமிரங்கு
என் ஆத்தா மனம் இரங்கு
அம்மையே நீ இரங்கு என்
அன்னையே நீ இரங்கு..
 

குழந்தை வருந்துவது 
கோயிலுக்குக் கேட்கலையோ 
மைந்தன் வருந்துவது 
மாளிகைக்கு கேட்கலையோ..
***
 
ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

  1. அம்மா..  எங்கள் மீது மனமிரங்குவாய்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா.. எங்கள் மீது மனமிரங்குவாய்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. பாடல் பகிர்வு அருமை.
    காணொளி சொல்லும் கதை அருமை. படம் பார்த்து இருக்கிறேன், மீண்டும் பார்த்தேன். புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.ஆவணி ஞாயிறு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  3. பாடல் வரிகளைப் பார்த்ததும் மெட்டு ஓரளவு நினைவுக்கு வந்துவிட்டது

    நல்ல பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அருமையான பாடல். திரையில் இந்தப்பாடல் காட்சி காணும் போது மெய்சிலிர்த்துப் போகும். இது அம்மன் தாலாட்டினை ஒட்டி வரும் பாடல் என்பதையும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அருமையான பாடல். திரையில் இந்தப் பாடல் காட்சி காணும் போது மெய்சிலிர்த்துப் போகும்.//

      உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. ஞாயிறு அன்று மகமாயி சந்நிதியில் தான் அபிஷேஹங்களைப் பார்த்துக் கொண்டும் மாவிளக்குப் போட்டுக் கொண்டும் இருந்தேன். சுமார் இரண்டு வருஷங்களுக்குப் பின்னர் இம்முறை கோயிலில் வந்து மாவிளக்குப் போடும் வாய்ப்புக் கிடைத்தது. மாரியம்மன் தாலாட்டு உள்ளே ஓடிக் கொண்டே இருக்கும். இதிலும் காணக் கிடைத்தது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..