நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 21, 2023

இடைமருது

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 4
 திங்கட்கிழமை

காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
நான்காவது திருத்தலம்

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திருஇடைமருதூர்


இறைவன்
ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ பிரஹத் குஜாம்பிகை

தீர்த்தம் அமிர்த தீர்த்தம், காவிரி
தல விருட்சம் 
மருத மரம்


பிரம்மாண்டமான சுதை நந்தி இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று..

ஸ்வாமி, அம்பாள்  சந்நிதிகள் கிழக்கு நோக்கியவை..


இருபத்தேழு நட்சத்திர லிங்கங்கள் இங்கு விளங்குகின்றன...


அம்பாள், விநாயகர், முருகன், மஹாவிஷ்ணு, லக்ஷ்மி, காளி, சரஸ்வதி, வேதங்களுடன் வசிஷ்டரும் வழிபட்ட தலம்..

வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற தலம்..


மூகாம்பிகை - எனவும் அம்பிகை தனி சந்நிதி கொண்டிருக்கின்றாள்..

தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்ற தலம்..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் ஆறும் நாவுக்கரசர் திருப்பதிகங்கள் ஐந்தும் சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன..

இளவரசி அம்முனு பாயி
தஞ்சையை மராட்டிய மன்னர் பிரதாப் சிங் ஆட்சி செய்த காலத்தில் அவரது மாமன் மகளான இளவரசி அம்முனு பாயி என்பவர் மன்னரை மணந்து கொள்ள வேண்டி - தன்னைப் போலவே - 1853 ல் செய்து வைத்த பாவை விளக்கு இந்தக் கோயிலில் இன்றும் திகழ்கின்றது..

குடந்தையில் இருந்து நகரப் பேருந்துகள் இயங்குகின்றன..

சில ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தை  தரிசித்திருக்கின்றேன்..
**

பொழில் அவன் புயல் அவன் புயல் இயக்கும்
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும்
கழல் அவன் கரியுரி போர்த்து உகந்த
எழில் அவன் வளநகர் இடைமருதே..1/110/5
-: திருஞானசம்பந்தர் :-

வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாடநின் றாடும் புனிதனார்
ஏதந் தீர்க்கும இடைமருதா என்று
பாதம் ஏத்தப் பறையும்நம் பாவமே..5/14/9
-: திருநாவுக்கரசர் :-

குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
கற்றி லேன்கலை கள்பல ஞானங்
கடிய வாயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்எனக்கு உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.. 7/60/6
-: சுந்தரர் :-

இடைமரு துறையும் எந்தாய் போற்றி
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. பிரம்மாண்ட நந்தி கவர்கிறார்.  கோவிலைப் பார்க்கும் ஆவல் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நிறைய திரைப்படங்களின் பாடல் காட்சிகள் இந்தக் கோயில் பிரகாரத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளன..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திருவிடைமருதூர் - போக வேண்டும் என்பது என் பட்டியலில் உண்டு.

    பிரம்மாண்டமான நந்தி - அந்தத் தூண்கள் வரிசை செம அழகு, கவர்கின்றது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் இன்னும் அழகாக இருக்கும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  3. அறுபதுகளிலேயே திருவலஞ்சுழியில் தாய்மாமா கல்யாணத்துக்கு வந்தப்போ இங்கெல்லாம் போனோம். அதன் பின்னரும் சில/பல முறைகள் போயிருக்கோம். நல்ல ஊர். இதுவும் ஒப்பில்லா அப்பன் கோயிலும் பலமுறை பார்த்தாச்சு. இந்த ஊர்த் தேர்த்திருவிழா மிகப் பிரபலமாகப் பேசுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அக்கா..

      நீக்கு
  4. யாரானும் மெதுவா நடந்தா திருவிடைமருதூர்த்க் தேர் அசையறாப்போல் என்பார்கள்.. இப்போதைய என் நடை அப்படித் தான் இருக்கு! :(

    பதிலளிநீக்கு
  5. அடிக்கடி போய் வந்த கோவில்.பதிகங்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..