நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2023

அன்னபூரணி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 12
செவ்வாய்க்கிழமை


சிவ மரபில் காசியும்  கங்கையும் கயிலாயமும் ஈசனின் திருவிழிகளுக்கு ஒப்பானவை.

காசியின் தரிசனத்தால் தான் - தமிழகத்தில் 
சிவகாசி, தென்காசி சிவகங்கை
என்றெல்லாம் ஊர்கள் அமைந்தன..

தஞ்சை மேல ராஜ வீதியில் காசி விஸ்வநாதர் - என இரண்டு கோயில்களும், கயிலாய நாதர் கோயில் என ஒன்றும் மணிகர்ணிகேஸ்வரர் கோயில் - என,  ஒன்றும்  அமைந்துள்ளன..

பூக்காரத்தெரு ஸ்ரீ சுப்ரமண்யர் கோயிலில் உப சந்நிதிகளாக ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன..

அடுத்துள்ள, 
கரந்தையில் காசி விஸ்வநாதர் பெயரிலும் 
புன்னை நல்லூரில் கயிலாய நாதர் பெயரிலும் 
அன்னப்பன் பேட்டையில் - ஸ்ரீ அன்னபூரணி உடனுறை கயிலாய நாதர் பெயரிலும் கோயில்கள் உள்ளன..


தஞ்சையில் மிகப் பழைமையான கொங்கணேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ அன்ன பூரணிக்கு தனி சந்நிதி உண்டு..

மேலும், 
தஞ்சை தெற்கு ராஜ வீதியிலும் கணபதி நகரிலும் ஸ்ரீ அன்னபூரணி அம்மனுக்கு கோயில்கள் உள்ளன..

பிரஹதீஸ்வரர் கோயில் தீர்த்தத் குளத்தின் பெயர் சிவகங்கை..

திரு ஐயாறு ஸ்ரீ பஞ்ச நதீஸ்வரர் கோயில் உள் திருச்சுற்றில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சந்நிதிகள் அமைந்துள்ளன..

காசி என்றாலும் கயிலாயம் என்றாலும்
கங்கை என்றாலும்
அன்னபூரணி என்றாலும்
புண்ணியம் என்றாகின்றது..

அவ்வண்ணமே எங்கும்
நிறையட்டும்.
*


இன்று
திரு ஓணத் திருநாள்

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்
 
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

 1. கொங்கணேஸ்வரர் கோவிலுக்கு சிறுவயதில் பெரும்பாலான வெள்ளிக்கு கிழமைகள் சென்று வருவோம்.  அப்பா எங்கிருந்தோ ஒரு தாயத்தை கையில் கட்டியிருந்தார்.  வெள்ளிதோறும் அதற்கு கொங்கணேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சந்நதியில் வைத்து பூஜை செய்து கொண்டு வரவேண்டும்.  ஆனால் இப்போது நினைக்கையில் கொங்கணேசரா கோவில் வலது புறமாக இறங்கும் துர்க்கை அம்மன் சன்னதி, மற்றும் அந்த குருக்கள் தவிர வேறு நினைவில் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக செய்திகளுக்கும்
   மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்....

   நீக்கு
 2. தஞ்சையின் புகழ் வாய்ந்த, பெருமை வாய்ந்த கோவில்கள் பற்றிய விவரங்கள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 3. ஓணம் திருநாள் நல் வாழ்த்துகள் துரை அண்ணா.

  நம் வீட்டிலும் பண்டிகை ஆச்சு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓணத் திருநாள்
   நல் வாழ்த்துகள் ..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி சகோ..

   நீக்கு
 4. தஞ்சையில் கரந்தையில் திரு ஐயாறில் உள்ள காசி விஸ்வநாதர், விசாலாட்சி கோயில்கள் அன்னப்பேட்டையில் அண்ணபூரணி கோயில் என்று காசிக்கு நிகரான கோயில்கள் விவரங்கள் நன்று.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. இந்தக் கோயில்களைப் பற்றி தனியே பதிவுகளைத் தருவதற்கு முயற்சிக்கின்றேன்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நீக்கு
 5. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   வாழ்க வையகம்

   நீக்கு
 6. ஓணம் திருநாள் வாழ்த்துகள். திருச்செந்தூர் ஆண்டவன் அருளால் நலமே பயக்கப் பிரார்த்தனைகளும் கூட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓணத் திருநாள்
   நல் வாழ்த்துகள் ..

   தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..

   நன்றி அக்கா..

   நீக்கு
 7. அன்னபூரணி என்றாலே புண்ணியம்.
  அருமையான விளக்கம் .
  அன்னபூரணியை வேண்டி புண்ணியம் பெறுவோம்.
  திருஓணத்திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும்
   ஓணத் திருநாள்
   நல் வாழ்த்துகள் ..

   தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 8. 'காசி என்றாலும் கயிலாயம் என்றாலும்
  கங்கை என்றாலும்
  அன்னபூரணி என்றாலும்
  புண்ணியம் என்றாகின்றது'
  இவற்றை எல்லாம் வணங்கும் பாக்கியம் அவனருளாலே கிடைக்க வேண்டும்.

  நாங்கள் உங்கள் பகிர்வில் கண்டு வணங்கி மகிழ்கிறோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..