நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 11, 2023

ஆடி வெள்ளி 4


  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 26
வெள்ளிக்கிழமை


இன்று
ஆடி மாதத்தின்
நிறை வெள்ளி


சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனயை
      மாதேவி நின்னைச் சத்யமாய் நித்யம் உள்ளத்தில்
      துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோய் இன்மை கல்வி தன தானியம்
      அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி
      துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி நீ சுக ஆனந்த
     வாழ்வு அளிப்பாய் சுகிர்த குணசாலி பரி பாலி அநுகூலி
     திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் நீ தாய் அளிக்கொணாதோ மகிமை வளர் திருக்
     கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
     சிவசாமி மகிழ்வாமி  அபிராமி உமையே!.. (11)
-: அபிராமி பதிகம் :-

ஸ்ரீ பிரஹந்நாயகி தஞ்சை
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கச்சியே.. 61


தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.. 69


தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே..73

ஸ்ரீ வராஹி தஞ்சை
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிர்அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.. 77

ஸ்ரீ மூகாம்பிகை

உடையாளை ஒல்கு செம்பட்டு 
உடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு 
அடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் 
இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் 
படையாவண்ணம் பார்த்திருமே.. 84


ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.. 101
-: அபிராமி அந்தாதி :-

அனைவருக்கும் 
அன்பின் வணக்கம்..
நன்றி.. நன்றி..

அபிராமவல்லி பொற்பதங்கள் 
போற்றி.. போற்றி..

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி 
ஓம்
***

14 கருத்துகள்:

  1. அபிராமி அம்மனின் பொற்பாதங்களை சரணடைவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சக்தி ஓம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஓம் சக்தி வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. ஆடி வெள்ளியில் அபிராமியை வணங்கும் சிறப்புப் பகிர்வு. அனைவர் நலனுக்கும் அவளை வேண்டி நிற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சக்தி ஓம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    ஆடி வெள்ளி சிறப்பு பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. அருள்மிகும் அபிராமி அம்மனை பணிந்து தண்டனிட்டு வணங்கிக் கொண்டேன். அனைவருக்கும் நல்ல சௌபாக்கியங்களை அன்னை தந்திட வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் நல்ல சௌபாக்கியங்களை அன்னை தந்திட வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்வோம்..
      ஓம் சக்தி ஓம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அபிராமி பதிகம், அபிராமி அந்தாதி பாடல்களை பாடி வணங்கி கொண்டேன் அபிராமி அன்னையை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி..

      நீக்கு
  6. படங்களும் பதிவும் அருமை. நானும் கடை வெள்ளியன்று திடீர் மாவிளக்குப் போட்டேன். மாரியம்மன் கோயிலுக்குப் போய்ப் போடணும். ஒரு வருஷமாகக் கூடி வருவதே இல்லை. இப்போ எப்படியும் போயிட்டு வரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் நலமாகும்..
      கவலை வேண்டாம் அக்கா..
      அம்மன் அருள்வாள்..

      ஓம் சக்தி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..