நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

காசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 30, 2023

ஸ்ரீ காசி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 13
புதன் கிழமை


 
உத்தரகாண்ட் மாநிலத்தின் கங்கோத்ரியின் கோமுகியில் பிறக்கின்ற பாகீரதி நதியானது, தேவப்பிரயாகை எனுமிடத்தில் அலக்நந்தா நதியுடன் கலந்து கங்கை ஆகின்றது..

கங்கை நதியின் கரையில் தான் புனித காசி நகர் அமைந்துள்ளது..

நன்றி: விக்கி (விக்கியில் இருந்து பெறப்பட்ட செய்திகளின் தொகுப்பு..)

மேற்கில்  இருந்து பலமுறை  படையெடுத்து வந்த முரடர்கள் 1025 ல் சோமநாதபுரத்தை முற்றாக அழித்தனர்.. 

அந்த மூர்க்கர்களை - எதிர்த்து சண்டையிட்ட  மன்னர்கள் வெகு சிலரே.. 

காலத்தின் கொடுமையால்
செல்வ வளம் மிகுத்திருந்த காசி நகரும்
வீழ்த்தப்பட்டது.. 

ஆதி விஸ்வேஸ்வரர் மந்திர் எனப்பட்ட  விஸ்வநாதர் கோயிலை அந்நியர்கள் கொள்ளையடித்துத் தகர்த்தனர்..
.இக்கொடுமை நிகழ்த்தப்பட்ட ஆண்டு 1194..

1230 களில் மீண்டும்
கட்டப்பட்ட விஸ்வநாதர் கோயில் 1500 களில் மீண்டும் தகர்க்கப்பட்டது..

மீண்டும் 1585 ல் - 
விஸ்வநாதர் கோயிலை  ராஜா மான் சிங் கட்டினார்..

1669 ல், முகலாய அரசன் ஔரங்கசீப்பு - விஸ்வநாதர் கோயிலை இடித்து விட்டு இடிக்கப்பட்ட   கோயிலின் 
சிருங்கார் கௌரி மண்டபத்தின் கிழக்குப் பக்கத்து சுவரை ஆதாரமாகக் கொண்டு மேற்குப் பக்கத்தில் அவனது கொள்கைக்கு ஏற்றதாக ஒன்று கட்டப்பட்டது.. அதற்கு க்யான்வாபி எனப் பெயரும் வைக்கப்பட்டது.. 
(இந்தப் பெயரை அவன் வைத்தானோ அவனுக்குப் பின்னால் வந்த வேறு எவனும் வைத்தானோ..)


காசி விஸ்வநாதர் கோயிலை 
மீண்டும் கட்டி எழுப்பி நமக்களித்தவர்  - மராட்டியப் பேரரசின் இந்தூர் ராணி 
மாதரசி ஸ்ரீமதி அகல்யா பாய் ஹோல்கர்.. 

ஸ்ரீமதி அகல்யா பாய்  அவர்களால் காசி க்ஷேத்திரம் மீண்டும் புனரமைக்கப்பட்ட ஆண்டு 1780..

சீக்கியப் பேரரசின் மன்னர் ரஞ்சித் சிங்.. அவரது பட்டத்தரசி ஸ்ரீமதி தாதர் கௌர் - கோயிலின் விமானத்தை அலங்கரிப்பதற்காக  பெருமளவில் தங்கத்தை நன்கொடையாக வழங்கிய ஆண்டு 1835..


தமிழகத்தின் நாட்டுக்கோட்டை நகரத்தார் -
விஸ்வநாதர் கோயிலின் அருகே புதிய இடம் வாங்கி 
விசாலாட்சியம்மன் கோயிலை எழுப்பி  (1893) கும்பாபிஷேகம் செய்வித்த ஆண்டு 1908 (பிலவ தை 25)..

காசியில் கங்கை நதியின் 
தசாஸ்வமேத படித்துறையில் இருந்து  விஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதற்கான வழி மிகவும் குறுகியது..  அந்நிய படையெடுப்பாளர்களால் வசப்படுத்தப்பட்டு குறுக்கப்பட்டிருந்த இந்த வழி - நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் சீரமைக்கப்படவே இல்லை.. 

நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு பற்பல இன்னல், எதிர்ப்புகளைக் கடந்து மேற்கொள்ளப்பட்ட (2019) புனர்மைப்பின் போது - 

ஸ்ரீ கங்கேஷ்வர் மகாதேவ் கோயில், ஸ்ரீ மனோகரேஸ்வர் மகாதேவ் கோயில், ஸ்ரீ விநாயகர் கோயில், மற்றும் ஸ்ரீ கும்ப மகாதேவ் கோயில் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட  பழைமையான கோயில்கள் 
பல நூற்றாண்டு கால ஆக்ரமிப்பிலிருந்து  - இடிந்த நிலையில் மீட்கப்பட்டன.. 

கங்கைக் கரையில் இருந்து ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் வரைக்கும் சந்நிதி வழிநடை சீரமைக்கப்பட்ட ஆண்டு 2021..

இதனால நாட்டுக்கு என்ன பயன்?.. -  என்று பிறவிக் குணம் மாறாமல் பற்பல ஜந்துக்களும் ஊளையிட்டு கொண்டு திரிகின்றன.. 

அந்த ஜந்துகளுக்கும்  படியளந்து கொண்டிருப்பவர்கள் - காசி விஸ்வநாதரும் - அன்னபூரணியும் தான்!.. - என்பது குறிப்பிடத்தக்கது..
**
காணொளி வடிவமைப்பு தஞ்சையம்பதி


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2023

காசியம்பதி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 28 
 ஞாயிற்றுக்கிழமை


திருத்தலம்
காசி (வாரணாசி)


இறைவன்
ஸ்ரீ விஸ்வநாதர்
ஸ்ரீ விஸ்வலிங்கம்


அம்பிகை
ஸ்ரீ விசாலாட்சி 
ஸ்ரீ அன்னபூரணி


தீர்த்தம் - கங்கை 
தல விருட்சம் - வில்வம்

இந்நாட்டின்
புனிதங்களில் முதன்மையானது..

கங்கைக் கரையில் அமைந்துள்ள திருத்தலம்..

மோட்சபுரிகள் ஏழினுள் முதலாவது.. 
மற்றவை - அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, உஜ்ஜைனி (அவந்தி), துவாரகை..

இத்தலத்தில் உயிர் துறக்கும் (ஈ, எறும்பு முதல்) அனைத்து உயிர்களுக்கும்  முக்தி நலம் அருள்கின்றான் பரமன்..


பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் முதலாவதான தலம்..

தேவியின் காதணிகள் விழுந்ததால் சக்தி பீடங்களில் இத்தலம் மணிகர்ணிகா பீட்ம்..

வாரணா, ஹசி எனும் இரண்டு நதிகளுக்கு இடையே அமைந்திருப்பதால் வாரணாசி எனவும் புகழ்வர்.. 

காசியின்  விஸ்வலிங்கம் மரகத மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது..

கல்விக்கும் நல்லறிவிற்கும் அதிபதியான புதன் இங்கே வழிபட்டு உய்ந்தனன் என்பது ஐதீகம்..


இங்கே ஆன்மாக்கள் அனைத்தையும் தன் மடியில் கிடத்தி - வையத்தில் வாழ்ந்த களைப்பின் வாட்டம் தீர தனது முந்தானை கொண்டு ஸ்ரீ விசாலாட்சி விசிறி விடுகின்றாள் என்பது ஆன்றோர் வாக்கு..

ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு ராம பிரானின் ஆணைப்படி சிவலிங்கம் எடுக்க வந்த அனுமனுக்கு தன்னுடைய அனுமதியின்றி சிவ லிங்கத்தை அடையாளம் காட்டியதற்காக கருடனுக்கும் பல்லிக்கும் சாபம்  அளித்தார் - கால பைரவர். 

அதனால் தான் வாரணாசியில் இப்போதும் கருடன் பறப்பதில்லை.. பல்லி சப்தமிடுவதில்லை..

இந்தத் திருத்தலத்திற்கான திருப்பதிகம் நமக்குக் கிடைக்கவில்லை.. 

ஆயினும்,
ஞானசம்பந்தப் 
பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும் திருவூர்த் தொகையினுள் குறித்திருக்கின்றனர்..

சிவ மரபினைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இத்தலமே இலக்கு..

ஆனால் அந்நிய
ஆக்ரமிப்பாளர்களால் மிக அதிக அளவில் சேதப்படுத்தப்பட்ட தலமும் இதுவே.. 

வகைப்படுத்தப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் காசியும் ஒன்று.. வீரம் இருந்தும் எந்த ஒரு நாட்டின் மீதும் படை செலுத்தாத ஒரே நாடு.. 

ஆயினும், காசியம்பதிக்கு மாற்றார் செய்த கொடுமைகள் கொஞ்சம் அல்ல.. 

அதனை வாய் விட்டுச் சொல்வதற்கும் நமக்கு உரிமை இல்லை..


பல நூற்றாண்டு ஆக்ரமிப்பில் இருந்த பல பகுதிகள்  மீட்கப்பட்டு - கங்கைக் கரையில் இருந்து ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் வரைக்கும் சந்நிதி வீதி சீரமைக்கப்பட்ட ஆண்டு 2021..

இதனை சற்று விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம்..

புனித காசிக்கு இணையாக 
தமிழகத்தில் ஆறு தலங்கள் போற்றப்படுகின்றன..

" ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூரம்  அர்ஜுனம் சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்திர ஸமான ஷட்

- என்ற ஸ்லோகத்தின்படி காசியம்பதிக்கு நிகரான தலங்கள் - 
திருவெண்காடு, திரு ஐயாறு, மயிலாடுதுறை, திரு இடைமருதூர், சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம் - என்பன..

இத்தலங்களின் 
சிறப்புகளை அடுத்து வரும் பதிவுகளில் சுருக்கமாகக் காண்போம்..

இத்தலங்கள் ஆறினையும் குறித்து 
எளியேன் எழுதிய பாடல் இது..

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..
**
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***