நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 05, 2026

மகாமகம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
வியாழக்கிழமை

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஸ்ரீ மங்களாம்பிகை

பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை  நிகழ்கின்ற பெருவிழாவாகிய மகாமகம் எதிர்வரும்
ஸ்ரீ பிலவங்க வருடம் மாசி மாதம் வியாழக்கிழமை  இருபத்தாறாம் நாள் (9 மார்ச் 2028) 

- என்று திருக்குடந்தை சிவாச்சாரியார்களாலும் பட்டாச்சாரியர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது..

பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை பிரஹஸ்பதியாகிய குரு -  சிம்ம ராசியில் வரும் காலத்தில், மாசி மாதத்தின்
மக நட்சத்திரத்தில் நீராடுகின்ற நன்னாளே  மகாமகம்...
அன்று பௌர்ணமியும் நிகழும்..

குடந்தை
ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்
தேவாரம்..

ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்தும் உருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்த னாரே.. 6/75/10
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..