நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
வெள்ளிக்கிழமை
கந்த சஷ்டி நான்காம் நாள்
இன்று
சுந்தரர் அருளிச் செய்த தேவாரம்...
நாயேன்பல நாளும்நினைப்
பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
லாகா அருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்துறையுள்
ஆயாஉனக் காளாய் இனி
அல்லேன் எனலாமே..7/1/2
நாயைப் போல கீழ்மை உடையனாகிய நான் உன்னை எனது நாள்கள் பலவற்றினும் மனத்தால் கூட நினைக்காமல் பேயாய் அலைந்து திரிந்து இளைத்தேன்; ஆயினும், இப்போது, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்று விட்டேன்..
இப்பேற்றை எனக்கு அளித்த உனக்கு, முற்காலத்தில் அடியவனாக இருந்தவன் நான்..
இந்நிலையில்
'நான் உனது அடியவன் அல்லேன் ' என, இப்பொழுது உன்னுடன்
எதிர்வழக்குப் பேசியது பொருத்தம் உடையதாகுமோ!..
நன்றி
பன்னிரு திருமுறை
***
சஷ்டி கவசத்திலிருந்து சில வரிகள்
உன்னைத் துதிக்க உன்திருநாமம்
சரவணபவனே சைலொளிபவனே
திரிபுரபவனே திகழொளிபவனே
பரிபுரபவனே பவமொழிபவனே
அரிதிருமருகா அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழநிப்பதி வாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமராபுரி வாழ் சண்முகத்தரசே...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
***



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..