நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை
சஷ்டி கவசம் ஜீவன் உள்ளது...
அதிலிருந்து சில வரிகள்..
துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலாய் எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறு முகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக..
வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..