நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 20, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கார்த்திகை
வெள்ளிக்கிழமை

இன்று
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த தேவாரம்

தலம் திரு ஆனைக்கா


வானைக்காவில் வெண்மதி
  மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித்
  தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை
  அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு
  ஏதும் ஏதம் இல்லையே... 3/53/1


வானில் உள்ள இருளைப் போக்கும் வெண்மதியின் பிறை தனைச் சடையில் தாங்கி, தேன் போன்ற மொழி பேசும் உமாதேவியைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, திரு ஆனைக்காவில் வீற்றிருந்தருளும் பெருமானைச் சரணாக வாழ்பவர்களுக்கு (தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாமல்) பிற துணை வேண்டும்படியான பெரிய துன்பம் எதுவும் வருவதற்கு இல்லை..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..