நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2022

வீரக்கனல் 3

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நன்றி : விக்கி

விக்கிபீடியா வழங்கிய தொகுப்புகளில்
இருந்து திரட்டப்பட்டவை..
*

ஆண் வாரிசு இல்லாத சமஸ்தானத்தைத்  தாங்களே எடுத்துக் கொள்வோம் என்று
வியாபாரம் செய்வதற்கு வந்த ஆங்கிலேயக் கூட்டம் (கிழக்கிந்திய கம்பெனி) தண்டோரா போட்டது..

வேலு நாச்சியார்
வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் வீராங்கனை. இவரே இந்நாட்டின் முதல்  விடுதலைப் போராட்ட வீராங்கனையும் ஆவார்..

அதன்படி சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றிக் கொள்வதற்காக,

25 ஜூன் 1772 ல் சிவகங்கை மீது கிழக்கிந்திய கம்பெனி நடத்திய போரில் வேலு நாச்சியாரின் கணவர் சிவகங்கை அரசர் முத்து வடுகநாத தேவர் ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித் என்பவனால்  சுட்டுக் கொல்லப்பட்டார்.. 

அதன்பின், வேலு நாச்சியார் எட்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து படை திரட்டினார்.. 


1780 ல்  படையெடுத்து வழி நெடுக வெள்ளையர்களையும் அவர்களுக்கு உறவாக இருந்தவர்களையும் வெட்டி வீழ்த்திக் கொண்டே
சிவகங்கை நோக்கி முன்னேறினார்.. 

வழியில் காளையார்கோயிலில் தளபதி ஜோசப் ஸ்மித் அடித்துக் கொல்லப்பட்டான்..
வெகு விரைவில் சிவகங்கையை நெருங்கினாலும்
கோட்டையை நெருங்க முடியவில்லை.. கடுமையான பாதுகாப்பு.. 

அதனால் ஊருக்கு வெளியே படைத் தளபதிகளான மருது சகோதரர்கள் வீரர்களுடன் தலைமறைவாகத் தங்கினர்..

அப்போது ஐப்பசி மாதம் (செப்டம்பர் 30).. அந்த மாதத்தின் நவராத்திரி விழா கோட்டைக்குள் நடந்து கொண்டிருந்தது..  மேல் தகவலுக்காக ஒற்றர் படையின் உளவாளிப் பெண்ணும் வேலு நாச்சியாரின் மெய்க்காவலருமான குயிலி என்பவள் துணிச்சலுடன் கோட்டைக்குள் சென்று வந்தாள்..

அதன்படி விஜயதசமியன்று நாச்சியார் தனது வீராங்கனைகளுடன் மாறு வேடத்தில் உள்ளே நுழைந்தார்.. பூஜைகள் முடிந்த நிலையில் மறைத்து வைத்திருந்த வாளை ஏந்திக் கொண்டு, வேல்.. வெற்றி வேல்!.. என முழக்கத்துட்ன் வெள்ளைப் படையினரைத் தாக்கினார்.. 


எதிரிகள் சுதாரித்து ஆயுதங்களை எடுப்பதற்குள் வீரமங்கை குயிலி - அம்மன் சந்நிதியில் இருந்த எண்ணெய்யில் சேலையை நனைத்து  தனக்குத் தானே தீவைத்துக் கொண்டு  அருகில் இருந்த ஆங்கிலேய ஆயுதக் கிடங்கினுள் புகுந்தாள்.. ஆயுதக் கிடங்கு தீப்பற்றி  அழிந்தது.. 

குயிலியின் இந்தத் தியாகம் வேலுநாச்சியார் மனதைக் கலங்க அடித்தது..

சிவகங்கையை மீட்டெடுத்ததும் குயிலின் நினைவாக நடுகல் வைத்துப் போற்றினார் வேலு நாச்சியார்..

ஆனாலும்,  இந்த தற்கொலைத் தாக்குதல் கற்பனையானது.. இப்படி நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை - என்றும் சில ஆய்வுகள்..

பென் ஒருத்தி தன்னைத் தானே அழித்துக் கொண்டதையும் அவளால் தமக்கு விளைந்த அவமானத்தையும் தாங்கிக் கொள்ள இயலாமல் ஆதாரங்களை முற்றாக
அழித்திருக்கலாம்  -  இந்நாட்டில் அறிவு ஒளியை ஏற்றி வைப்பதற்காக கடல்  தாண்டி வந்த வெள்ளைக் கூட்டம்.. யார் கண்டது?..
**

அந்நியரிடம் இருந்து
பாரதத்திருநாடு
விடுதலை அடைந்த
எழுபத்தைந்தாவது
வருடக் கொண்டாட்டம்
நிகழும் இவ்வேளையில்
மாவீரர்களை 
நினைவு கூர்வோம்..

ஜெய்ஹிந்த்
வாழ்க பாரதம்
வளரக  தமிழகம்
***

11 கருத்துகள்:

 1. மீண்டும் படித்து இன்புற்றேன்.  "வழியில் காளையார்கோயிலில் தளபதி ஜோசப் ஸ்மித் அடித்துக் கொல்லப்பட்டான்...   பழிக்குப்பழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.. ஸ்ரீராம்..

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தொடர்ந்து தந்த வீரக்கனல் பதிவுகளை ரசித்துப்படித்தேன். நமக்காக தங்கள் உயிரையும், தங்களது அன்பான உறவுகளையும் பொருட்படுத்தாது தியாகம் செய்து நம் மண்ணை நமக்கு மீட்டுத்தந்த வீராதி வீரர்களை போற்றி வணங்குவோம். இந்த சுதந்திர நாளில் என்று மட்டுமில்லாமல் அவர்களை எப்போதும் போற்றி வணங்குவதே நம் தலையாய கடமை என்று உணருவோம். வாழ்க அவர்களது வீரச் செயல்கள். இதைப் பதிவாக தொடர்ந்து தரும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே .

  உங்களுக்கும் இனிதான சுதந்திர தின வாழ்த்துகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்.. நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த தியாக சீலர்களை என்றென்றும் போற்றி வணங்குவது நமது கடமை..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 3. இன்றைய நாளில் இவர்களை நினைவு கூர்வது நமது கடமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்.. தியாக சீலர்களை என்றுமே மறக்கக் கூடாது..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்

   நீக்கு
 4. வேலு நாச்சியார் பற்றி மீண்டும் தெரிந்து கொண்டேன். வீர மங்கை. ஆங்கிலேயரை எதிர்த்த முதல் வீர நங்கை. எவ்வளவு மனோதைரியம்! இதை எல்லாம் இப்போது கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

  சுதந்திர தின நல் வாழ்த்துகள் அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அத்தனை நெஞ்சுரம்... சொல்லுக்குள் அடங்காத வீரம்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 5. வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு பகிர்வு அருமை. குயிலி
  அவர்களின் உயிர் தியாகம் நிறைய பேச படுகிறது.
  இன்னும் சரித்திரத்தில் இடம் பெறா உயிர் தியாகம் செய்தவர்கள் எவ்வளவு இருக்கிறது அத்தனை தியாக செம்மல்களுக்கும் வீர வணக்கம். தாய் மண்ணை மீட்க போராடி அடிமை தளையை நீக்கி சுதந்திர வாங்கி தந்த அனைவருக்கும்
  வணக்கம்.
  சுதந்திர தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊரறிந்த விவரங்களையே மறைக்க முற்படும் போது வெளியுலகில் பேசப்படாத வீரர்கள் எத்தனை ஆயிரம் பேரோ!..

   அத்தனை பேருக்கும் நமது வணக்கம்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்

   நீக்கு
 6. வேலு நாச்சியாரும் குயிலியும் என்றென்றும் பேசப்பட வேண்டியவர்கள். மறக்க முடியாதவர்கள். ஜான்சி ராணிக்கும் முன்னால் வேலு நாச்சியார் என்பது சிலர் கூற்று.

  பதிலளிநீக்கு