நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 01, 2022

ஆடிப்பூரம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆடிப்பூரம்..
மங்கலம் மிகுந்த
நன்னாள்..


சூடிக் கொடுத்த
சுடர்க் கொடி என்று
பூதேவி
 திரு அவதாரம் செய்த
நாள் இன்று..


திரு ஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தருளிதாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!..
***

சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலசுலோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
சுலட்சணி சாற்றரும் கருணாகரி

அந்தரி வராகி சாம்பவி அமர தோதரி அமலை செக சால சூத்ரி அகிலாத்ம காரணி வினோத சய நாரணி
அகண்ட சின்மய பூரணி

சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி கௌமாரி உத்துங்க கல்யாணி புஷ்ப அஸ்த்ராம் புயபாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி

வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர் 
திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..
-: அபிராமி பட்டர் :-
**
இல்லங்கள் தோறும்
மங்கலங்கள் பெருகி
சகல சௌபாக்கியங்களுடன்
வாழ்வதற்கு
இந்நாளில் வேண்டி
நிற்போம்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. சகல சௌபாக்கியங்களும் அருள அன்னையை வேண்டி நிற்போம். ஆடிப்பூர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      ஆடிப்பூர நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  2. அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      ஆடிப்பூர நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  3. அன்னை அனைவருக்கும் மங்கலங்கள் அருளப் பிரார்த்திக்கிறோம். இன்று இங்கேயும், ஶ்ரீவில்லிபுத்தூரிலும் அமர்க்களப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..

      ஆடிப்பூர நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      ஆடிப்பூர நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  5. அருமை!

    இன்று திரு ஆடிப் பூரத்திற்கு 'அக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் செய்துவைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பி!!! என்று சொல்லி அக்காரஅடிசில் செய்து படைத்து சாப்பிட்டாச்சு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி சகோ..

      ஆடிப்பூர நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  6. ஆடிப்பூரத்திற்கு அவல் பாயாசம் செய்து ஆண்டாளை, கோவிந்தனை வணங்கி விட்டேன். நான் போட்ட பழைய (ஸ்ரீவில்லிப்புத்தூர் பதிவுகளை பார்த்து ஆண்டளை வணங்கி கொண்டேன். )கோவில்களுக்கு அழைத்து சென்ற என் கணவருக்கு நன்றி சொல்லி கொண்டேன்.

    ஆடிப்பூர நல் வாழ்த்துக்கள்.
    படங்கள் பாடல் பகிர்வு அருமை.
    பாடலை படித்து தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      தங்களது கருத்து மனதை நெகிழ்விக்கின்றது..

      அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஆடிப்பூர தினத்திற்கான சிறப்பு பதிவு அருமை. அழகான தெய்வீக படங்கள் அனைத்தையும் பார்த்து, ஸ்ரீ ஆண்டாளையும், ஸ்ரீ மன்நாராயணனையும் நமஸ்கரித்து கொண்டேன். பாடல்களையும் பாடி மகிழ்ந்தேன். நேற்று நாக சதுர்த்தியும் கூட.... அதனால் வேலைகள் சற்று அதிகமாக இருந்ததால் நேற்று பதிவுகளுக்கு வர நேரம் அமையவில்லை. தாமதமாக இன்று வந்திருக்கிறேன். மன்னிக்கவும்.

    எ. பியில் வந்திருந்த என் பதிவுக்கு வந்து அன்பான கருத்துக்கள் தந்திருந்த அனைவருக்கும் இந்த கைப்பேசியில், பதில் கருத்துடன் நன்றி தரவே தாமதமாகி விட்டது. அதனாலும் வேறு பதிவுகளுக்கு வர இயலவில்லை. தாமதமாகி விட்டது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி ..

      கைபேசியில் இயங்குவது சிரமம்.. எனக்கும் அப்படித்தான் இருக்கின்றது..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. ஆடிப் பூர வாழ்த்துகள். பாடல்கள் அருமை அன்னையவள் பாதகமலங்களை போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..