நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 31, 2022

சதுரங்கம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

சிவபெருமான் சதுரங்கம் விளையாடியதாக தமிழக கோயில் புராணம் உள்ளது - என்று பிரதமர் அவர்கள் சொல்லியதும் போதும்,

தினமலர் இணைய தளத்தில் அந்தச் செய்திக்கான கருத்துரைகளில்  தனக்குத் தானே வேறு பெயர் வைத்துக் கொண்டு அலைகின்ற் மர்ம முகமூடிகள் -

ஸ்ரீ மோடி ஜி அவர்கள் மீது வழக்கம் போல புழுதி வாரித் தூற்றியும் அவர் கூறிய தகவலைப் பழித்தும் - 

விதவிதமாக ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன..

இறைவன் ஆடிய விளையாட்டில் அந்நிய மத அடையாளங்கள் வந்தது எப்படி?.. - என்று முகமூடி ஒருவனின் கொக்கரிப்பு வேறு..

அறிவார்ந்தவர்கள் எவரும் இது மாதிரி அடுத்தவர் விஷயங்களில் நுழையவே மாட்டார்கள்.. 


வசுசேனன் என்னும் மன்னனின் மகளாகத் தோன்றிய அம்பிகையை சதுரங்கத்தில் வென்று மணக் கோலம் கொள்கின்றான் இறைவன் - என்று சொல்லப்படுகின்ற தலபுராணமானது
 தருமபுர ஆதீனம் அமைத்து வழங்கியுள்ள பன்னிரு திருமுறைத் தொகுப்பின் கோயில் வரலாற்றுப் பகுதியில் குறிக்கப்படவில்லை.. ஆனாலும், வெளியில் தலபுராணம் இப்படி இருக்கின்றது..

இதற்கிடையில் யாரோ எழுதி வைத்த தலபுராணத்தின்  பேரில் வலைத் தளங்களில் மனம் போனபடி எல்லாம் படத் தொகுப்புப் பதிவுகள், காணொளிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன..

சதுரங்க சேனா நாயிகா -  என்பது அம்பாளின் திருப்பெயர்களுள் ஒன்று..

சதுரங்கம் என்பது சமஸ்கிருத வார்த்தை.. மன்னனின் தேர், யானை, குதிரை, வீரர் எனும் நால்வகைப் படைப் பிரிவுகளை உள்ளடக்கிய சொல்.. இதற்கு மாறாக சோழர்கள் நாவாய்ப் படையையும் வைத்திருந்தனர் என்பது கூடுதல் செய்தி..


போரில் யானை வீரன் யானை வீரனோடு தான் மோதிட வேண்டும்.. குதிரை வீரன் அவனுக்குச் சமமானவனுடன் தான் போரிட வேண்டும் என்று நால்வகைப் படைகளுக்குமாக தனித்தனி விதிமுறைகள் கடைபிடிக்கப் பட்டன.. அதுவே அன்றைய அறம்..

இறைவன் விளையாடிய சதுரங்கத்தில் அறம் இருந்தது..  மன்னர்களிடம் இந்த விளையாட்டு இருந்தபோதும் அறம் வழுவாமல் இருந்தது.. முகத்தை மூடிக் கொண்டு யுத்தம் செய்வது இந்த மண்ணின் வழக்கம் இல்லை..

ஆயுதமற்றவர்களிடமும் அபலைகளிடமும் அறவோர்களிடமும் சிறார்களிடம் வீரத்தைக் காட்டியதே இல்லை..

இப்படியான அறம் மீறப்பட்டதே இல்லையா?..

மஹாபாரத யுத்தத்தின் பதின்மூன்றாம் நாள் 
அபிமன்யுவுடன் அறமும் சேர்த்தே வீழ்த்தப்பட்டது..

வாழ்வின் எல்லா நிலைகளிலும் பொதுவான அறம் இருந்த அந்த காலகட்டத்தில் இந்த விளையாட்டு  எப்படி இருந்திருக்குமோ.. நமக்குத் தெரியாது..

அந்த விவரங்கள் இன்றக்கு யாருக்கும் தெரியாதபடிக்கு தடயங்கள் அழிக்கப்பட்டுப் போயின..

இந்த விளையாட்டை மேற்கத்தியர் கைப்பற்றிய பிறகு அதில் இருந்த அறத்தை அவர்கள் வழக்கப்படி அழித்து விட்டனர்..  

எதிர்த்துப் போராடுவதற்கு திறனற்றவர்கள் மீது ஆயுதப் பிரயோகம் செய்து அவர்களை அழித்து ஒழிப்பது ஒன்றையே தொழிலாகக் கொண்டிருந்த மேற்கத்தியர்களால் மாற்றம் செய்யப்பட்ட ஒன்றாகும் - இன்றைக்கு இருக்கும் சதுரங்க விளையாட்டு..

இதுவா அன்றைய பாரதத்தில் இருந்த விளையாட்டு?..


சதுரங்க சேனை நாயகியாகிய அம்பிகையை
சதுரங்க சேனை நாயகனாக
விளையாடி தனது  வல்லமையைக் காட்டியதாகவே இந்த தல புராணத்தினை அணுகுதல் வேண்டும்..

வழக்கம் போல 
திருப்பூவனூர் என்ற இத்தலம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது என்று ஒரு உருட்டும் சம்பந்தரும் அப்பரும் இங்கே வந்து பாட்டுப் பாடினார்கள் என்று மற்றொரு உருட்டும் உருட்டிக் கொண்டு இருக்கின்றனர்.. 

உண்மையில், கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்கின்ற வழியில் நீடாமங்கலத்தை அடுத்து ஐந்து கி.மீ . தொலைவில் அமைந்துள்ள ஊர் தான் திருப்பூவனூர்..

சாலையின் ஓரமாகவே பாமணி ஆறு.. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தூரத்தில் கோயிலின் கோபுரம் தென்படும்..

மேலும், அப்பர் ஸ்வாமிகள் மட்டுமே இக்கோயிலைப் பற்றித் திருப்பதிகம் பாடியிருக்கின்றார்..

(படங்கள் Fb ல் வந்தவை)


நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
வாரணன் குமரன் வணங்குங் கழற்
பூரணன் திருப்பூவனூர் மேவிய
காரணன் எனை ஆளுடைக் காளையே.. 5/65
-: அப்பர் ஸ்வாமிகள் :-
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. சிறப்பான தகவல்கள் ஜி
    பலவற்றை அறிந்தேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  2. என்னவோ போங்க..  ஆளாளுக்கு ஒன்றொன்று சொல்கிறார்கள்.  சாமி சதுரங்கம் விளையாடினாரோ இல்லையோ..  அரசியல்வாதிகள் நம்மோட நல்லா .விளையாடறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      இவங்க ஆடாத ஆட்டம் அல்லவா ஆடுறாங்க..

      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. மோதியைப் பிடிக்கலைனா என்ன வேணாலும் சொல்லலாம் என்பது தமிழ்நாட்டின் பொதுவான நியதி! நல்லது செய்தால் கூட அதிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      மோடி எதிர்ப்பு ஒன்று தான் குறிக்கோள்..

      அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. அறியாத தகவல்களுடன் கூடிய பதிவு. தங்கள் பதிவின் மூலம் படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.ஓம் சிவாய நம ஓம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      ஓம் நம சிவாய ஓம்..

      நீக்கு
  5. பெயரில்லா31 ஜூலை, 2022 07:41

    நல்ல தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  6. இப்படியான கதை இதுதான் புதிதாய்க் கேட்கிறேன். பலவகைக் கதைகள். எதுவாக இருந்தாலும், இருக்கட்டும். இறைவனை மட்டும் சிந்தித்து தொழுதிடுவோம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  7. விவரங்கள் அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. அம்மை அப்பன் விவரங்கள் படங்கள் எல்லாம் சிறப்பு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி துளசிதரன்..

      நீக்கு
  9. படங்கள் நன்று. பல தகவல்களும் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..