நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 05, 2022

காளி வந்தாள்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

வேறு துணை எதற்கு என்று காளி வந்தாள்..
வெற்றியெங்கும் முழங்கிடக் காளி வந்தாள்
பற்றிநிற்கும் பகை முடிக்க காளி வந்தாள்
சுற்றி வரும் பிணி விரட்ட காளி வந்தாள்..


சூரனவன் தோள் துணித்த 
காளி வந்தாள்..
சூலம் கபாலங் கொண்டு
காளி வந்தாள்..
கோபங்கொண்ட குமரியளாய் 
காளி வந்தாள்..
அன்புநின்ற அன்னையளாய் 
காளி வந்தாள்..


பொங்கு வினை தீர்த்திடவே
காளி வந்தாள்
வெங்கதிரில் செந்தணலாய்
காளி வந்தாள்
தங்கமுக மங்கலமாய்
காளி வந்தாள்
மஞ்சளுடன்  குங்குமமாய்
காளி வந்தாள்..


அக்கினியில் முகம் காட்டி
காளி வந்தாள்..
ஆன்ற நலம் நல்கிடவே
காளி வந்தாள்..
அன்பு கொண்டு ஆதரிக்க
காளி வந்தாள்..
தன் முகமே  தாமரையாய்
காளி வந்தாள்..
*
ஓம் 
சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஒம்
***

18 கருத்துகள்:

  1. காளி நமைக் காக்கட்டும் காலமெல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பாடல் நன்றாக இருக்கிறது துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களின் கவிதை பாடலும் அழகு. மிகவும் நயமான சொற்களுடன் பாமாலை இயற்றியுள்ளீர்கள். பாடலை பாடி காளியை துதித்து வணங்கி கொண்டேன். அன்னை துஷ்டர்களை வதம் செய்து நல்லவர்களுக்கு இதம் தரும் நன்மைகள் பல கோடிகள் தர மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. காளி பற்றிய பாடல் பாரதியை நினைவூட்டியது. அருமையான அழகான பாடல். சொற்கட்டு அற்புதம். காளி என்பவளை முன்னெல்லாம் ஏதோ வணங்கக்கூடாத தெய்வம் என்றே சொல்லிக் கொண்டிருந்தனர். பின்னரே அதன் தாத்பரியம் புரிந்து அனைவரும் வணங்க ஆரம்பித்தனர். முன்னெல்லாம் "காளி" என்றாலே பயங்கர ஸ்வரூபியாகக் கோபமான கடவுளாகவே சித்திரித்தனர். இப்போது சகஜமான தெய்வமாக ஆகி இருக்கிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் செல்வது உண்மையே..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
    2. இன்று உங்கள் காளி பற்றிய பதிவைப் படித்த நினைவிலேயே இருந்தேன். இன்றைய தினமலர் தினசரியில் வந்திருக்கும் ஒரு செய்தி மனதைக் காயப்படுத்தி விட்டது. இந்த அறிவு ஜீவி லீனா மணிமேகலை காளி தேவியாக நடிப்பதோடு அல்லாமல் காளி சுருட்டு/பீடி/சிகரெட்? ஏதோ ஒன்று பிடிப்பதாகவும் காட்டி இது தான் காளியின் உண்மையான கதை என்றும் சொல்லி இருக்கிறார். வழக்கம் போல் இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தானே!

      நீக்கு
    3. தினமலர் இணைய நாளிதழில் நானும் பார்த்தேன்.. வருத்தம் தான்.. கல்லுக்கு நீதி சொல்ல முடியாது..

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. காளி பற்றிய கவிதை மிக அருமை.
    பிணியை விரட்டி அனைவரையும் நலமுடன் வைக்க வேண்டும் காளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. அன்பு கொண்டு ஆதரிக்கட்டும் வணங்குகிறோம் காளி அன்னையை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..