நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 07, 2022

கடைக்கண்களே..

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்றைய பதிவின்
தொடர்ச்சியாக
இன்று
அபிராமவல்லி தரிசனம்..


கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவி
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..
*

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.. 69
-: அபிராமி பட்டர் :-
**
அபிராமி உன்விழிகள்
ஆனந்த முல்லையே
அன்னையே உன்மடியில்
என்றைக்கும் பிள்ளையே
ஐயனின் அருகினில்
அருள் கொண்ட கிள்ளையே
அன்பு செய எந்நாளும் நீ
மறப்ப தில்லையே..

உனைப் போற்றி உன்பிள்ளை
தமிழ் சொன்ன நாளிலே
தடங் கண்டு நடமாடி 
நலம் பொழிக நாவிலே
தனயனின் தமிழ் கேட்டு
தாய் மகிழும் பொழுதிலே
என் நெஞ்சம் வாழுமே
என்றும் உன் நினைவிலே..

என்றுமுன் அன்பினில்
கண்களும் பனித்தன
நீ தந்த தமிழ் சொல்ல
சொற்களும் இனித்தன
வாழ்வில் இங்கு என்னையும் 
வாழ வைத்த அன்னையே
என்நெஞ்சம் எப்படி
மறந்திருக்கும் உன்னையே..

அறுபத்து ஆறென
அகவையைக் கடந்ததும்
அம்மா உன் விரல் பிடித்து
அங்கும் இங்கும் நடந்ததும்
சிவசக்தி ரூபமாய்
சிந்தையில் பொலிகவே
 செல்வனின் மொழி கேட்டு
நலம் என்றும் பொழிகவே..
*
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***

18 கருத்துகள்:

 1. அகிலம் காக்கும் அபிராமி அனைவரையும் காத்தருளட்டும்.  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. ஆனி ஹஸ்த நட்சத்திரம்.. அதனால் இரண்டு பதிவுகள் நேற்றும் இன்றும்..

   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
  அபிராமி அன்னைக்கு நீங்கள் சூட்டிய பாமாலை அருமை.
  அபிராமி அருளால் பல்லண்டு வாழ்க! ஆயிரம் கவிதைகள் தருக!

  ஓம் சக்தி! ஓம் சகதி! ஓம் சக்தி ஓம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. ஆனி ஹஸ்த நட்சத்திரம்.. அதனால் இரண்டு பதிவுகள் நேற்றும் இன்றும்..

   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

   ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 3. அபிராமி பாமாலை நன்று.

  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி ஜி..

   நீக்கு
 4. பானுமதி வெங்கடேஸ்வரன்07 ஜூலை, 2022 04:56

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அபிராமி அன்னையின் அருளால் உங்கள் வாழ்க்கையில் எல்லா சிறப்புகளும் சேரட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. அருமை ஐயா...

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி தனபாலன்..

   நீக்கு
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்/ஆசிகள். உங்கள் எண்ணங்கள் ஈடேறவும் பிரார்த்தனைகள். அபிராமி அருளால் அனைத்தும் நன்மையே தரட்டும். அருமையான பாடல் புனைந்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா அவர்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு பாராட்டுக்கு நன்றியக்கா..

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.தாங்கள் என்றும் மன/உடல் ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழ அன்னை அபிராமியை மனமாற தொழுது வணங்கிக் கொள்கிறேன். அபிராமி அந்தாதி பாடி அன்னையை தரிசனம் செய்து கொண்டேன். தாங்கள் அன்னை மேல் பாடிய கவி அருமை. பாராட்டுக்கள். கவிச் செல்வரை அன்னை கண்டிப்பாக அன்போடு காத்தருள்வாள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  காலையில் வர இயலவில்லை. அதனால் தாமத வருகை. மன்னிக்கவும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   தாமதம் என்றெல்லாம் எதுவும் இல்லை..

   அன்பின் வாழ்த்துரைக்கும் பாராட்டுக்கும் பிரார்த்தனைக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

   நீக்கு
 8. துரை அண்ணா நேற்று இப்பதிவிற்கு நான் இட்ட கருத்து ஸ்பாமில் இருக்கிறதா என்று பாருங்கள். கருத்து இங்கு காணவில்லையே....

  கீதா

  பதிலளிநீக்கு
 9. நேற்று என் பதிவிற்கு ஸ்ரீராம் இட்ட கருத்தும் அப்படித்தன ஆயிற்று. அதன் பின் அதை எடுத்துப் போட்டேன் பதிவில்...அது போல ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன் இங்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்.! அன்னை அபிராமியின் அருள் என்றும் உங்களுக்கும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும். அன்னையின் பெயர் தான் என் மகளுக்கும்.

  நீங்கள் எழுதியிருக்கும் பாடல் அருமை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   அன்பின் வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் நன்றி துளசிதரன்..

   நீக்கு