நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 06, 2022

அம்மையே.. அப்பா..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தஞ்சை ஸ்ரீ வீதிவிடங்கர் - கமலாம்பிகை

தஞ்சையம்பதியில் எல்லாமே சிறப்பான பதிவுகள் என்கின்றனர்.. என்றாலும் இது ஒரு சிறப்புப் பதிவு..

இன்று ஆனி ஹஸ்த நட்சத்திரம்..


போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப
காதலால் நெஞ்சம் அன்பு
கலந்திலேன் அதுதன் னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
எஞ்செய்வான் தோன்றினேனே.. 897
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-


தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயம் ஆய காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே..2/50
-: ஸ்ரீ திருஞானசம்பந்தர் :-

ஸ்ரீ வீழிநாதர் -
ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ 
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து(ம்) நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95
-: ஸ்ரீ திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ கும்பேஸ்வரர் -
ஸ்ரீ மங்களாம்பிகை
பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடு இருட் சுடரொப்பாய்
மண்ணிடை யடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே..7/29
-: ஸ்ரீ சுந்தரர் :-


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே..
-: ஸ்ரீ மாணிக்கவாசகர் :-

ஸ்ரீ பிரஹதீஸ்வரர்
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே..
-: ஸ்ரீ பட்டினத்தடிகள் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

22 கருத்துகள்:

 1. பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
  சிறப்பான பதிவுதான்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. அழகான பாடல்களுடன் இன்றைய இறை தரிசன பகிர்வும் அருமை. இறைவனை பக்தியுடன் தரிசித்து கொண்டேன். உங்கள் வலைப்பக்கத்தில் எந்நாளுமே சிறப்பு பதிவுகள்தாம். எந்நாளும் இறைவனை அருகில் காணும்படியாக நீங்கள் தினமும் தரும் பதிவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும் இனிய கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. சிறப்பான தரிசனம் நன்று ஜி

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான தரிசனம் கண்டோம்.

  பதிலளிநீக்கு
 5. கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்....பட்டினத்தடிகள் பிரார்த்தனையில் தினமும் இடம் பெறும் ஒன்று ..

  நல்ல பதிவு. சிறப்பு என்று சொல்லவும் வேண்டுமோ துரை அண்னா!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருபது வயதில் இந்தப் பாடல் மனப்பாடம்.. இரவு உறங்கச் செல்லும் போது இது பிரார்த்தனை..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

   நீக்கு
 6. சிறப்பான பதிவு. இறைவனையும் வணங்கிக் கொண்டேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

   நீக்கு
 7. தலைப்பைக் கண்டவுடன் எனக்கு 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே' வரிகள் நினைவுக்கு வந்ததால் பதிவை எட்டிப்பார்த்தேன். தாயுமானவனைப் பற்றிய சிறப்புப் பதிவு. அதில் 'அம்மையே அப்பா' பாடலையும் கண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 8. மிகச் சிறப்பான பதிவு. தஞ்சையிலும் வீதி விடங்கரும், கமலாம்பிகையும் குடி கொண்டிருப்பதை இன்றே அறிந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. எனக்கும் மணிவாசகரின் அம்மையே அப்பா! பாடல் தான் நினைவில் வந்தது. இங்கேயும் இடம் பெற்றிருப்பது இன்னமும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூலஸ்தானத்திற்கு செல்லும் முன் அர்த்த மண்டபத்தின் தென்புறமாக வீதி விடங்கரின் சந்நிதி.. இங்கே தான் நின்ற கோலத்தில் ராஜராஜ சோழன் விக்ரஹம் இருக்கின்றது.. குஜராத்தில் இருந்து மூலத் திருமேனி மீட்கப்பட்ட பின் இங்கே போலீஸ் காவல்.. படம் எடுக்க முடியாது.. இது ஆரூர் விடங்கரின் சாயலில் இருக்கும் .. இந்த விடங்கத் திருமேனி சோழனின் நேரடிப் பார்வையில் செய்யப்பட்டதாகும்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
  2. ஓஹோ! குஜராத்தில் இருந்து வந்தவர் தானா? மறந்திருக்கேன். தகவல்களுக்கூ மிக்க நன்றி.

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..