நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 15, 2022

வாழ்க நீ!..

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது எல்லா விதத்திலும்  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதிலும் தன்னால் அரசுக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்..

தன் பெயரைச் சொல்லி உறவினர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார்..

அதனால் தான் தள்ளாத வயதில் இருந்த தாயைக் கூட  தன் அருகில் வைத்துக் கொள்ளவில்லை..

தாய்க்கும், விதவைத் தங்கைக்கும் மாதாந்திர குடும்பச் செலவுகளுக்கு என்று அவர் அனுப்பி வைத்த தொகை நூறு ரூபாய்க்கும் கொஞ்சம் அதிகம்..

முதல்வராக இருந்த நேரத்தில் வீட்டின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. 
அவரது தாய் அதை மீண்டும்  கட்டித் தர சொல்லிக் கேட்டபோது இப்படிக் கூறினார் -  

" மந்திரி ஆனதும் வீடுலாம் கட்டிட்டான்.. ன்னு நாலு பேரு பேசுவான். அதெல்லாம் வேண்டாம். நீ சும்மா இருன்ணேன்.. "

பெற்ற தாயிடத்தும் விதவைத் தங்கையிடத்தும் கூட ஈவு இரக்கம் காட்டாத கல் நெஞ்சுக்கு உரியவர் - பெருந்தலைவர்
காமராஜர்..

15 ஜூலை 1903

அவருடைய பிறந்த நாள் இன்று..

 தாயும் மகனும்







இப்போது, அப்படியெல்லாம் 
ஊருக்கும் உண்மைக்கும் யாரும் பயந்து நடப்பதில்லை என்பதே உண்மை..

தொண்டு, தூய்மை, எளிமை, நாட்டுப்பற்று, தியாகம் ஆகிய நற்பண்புகளின் இருப்பிடமாகத் திகழ்ந்த பெருந்தலைவரை என்றும் நினைவில் கொள்வோம்..

பெருந்தலைவருடைய
புகழினைத்
 தலைமேற்கொண்டு
 வணங்குகின்றேன்..

வாழ்க நீ எம்மான்
மாசற்ற மாணிக்கமே!..
***

9 கருத்துகள்:

  1. அவரது பிறந்தநாளை நினைவு கூர்ந்த விதம் அருமை ஜி.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு. இவரைப்போல இனி யார் வருவார்?

    பதிலளிநீக்கு
  3. பெரும் தலைவரை போற்றுவோம்.

    படமும் வந்தது பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான தலைவர்.
    நாட்டுக்கு உழைத்த உத்தமர்.
    என்று வணங்க தகுந்தவர்.
    நினைவுகள் பகிர்வு அருமை. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    மாசற்ற தலைவருக்கும் வணக்கங்கள். வாழ்க வாழ்க! வாழ்கவே!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல பண்புகளை உடைய அரசியல் தலைவர். மக்கள் அனைவரும் மதிப்புடன் வணங்கத்தக்கவர். இவர் ஆட்சியை மறக்க முடியாது. இவரது பிறந்த நாளை நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கும், அவரின் எளிமையான படங்களை பகிர்ந்தமைக்கும் நன்றிகள். வாழ்க என்றும் அவர் புகழ். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான தலைவர் பற்றிய அருமையான பதிவு. முதல் வரியே சொல்லிவிட்டது தலைவர் யார் என்று! இப்படியான தலைவர்களை இனி பார்ப்பது அரிது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா, பெற்ற தாயிடமும், விதவை சகோதரியிடமும் ஈவு இரக்கம் இல்லாத பெருந்தலைவர் ? அண்ணா அவருக்கு இருந்திருக்குமே. ஆனால் ஆட்சியில் இருப்பதால் அதான் நீங்களே அழகா சொல்லிட்டீங்களே முதலில் இரண்டாவது பத்தியாக....இப்படியானவர்கள் இப்போது இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? பதிவு அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஒரு சிலர் அவர் தன் தாய்/தங்கையிடம் இப்படி இருந்ததைக் குறை கூறியும் பதிவிட்டிருக்கின்றனர். என்றாலும் இப்படி ஒரு மனிதர் இந்தக் காலங்களில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். என் அஞ்சலிகளும் கூட.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..