நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 23, 2022

கார்த்திகை நாள்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி ஏழாம் நாள் (22/7)
கார்த்திகை நட்சத்திரம்
ஆடிக் கார்த்திகை எனப்படும்
நன்னாள்..


சரவணப் பொய்கையில் 
முருகப் பெருமான்
தோன்றியதும்
 அவனுக்குப்
 பாலூட்டுவதற்காக அம்பிகையே 
ஆறு கன்னியராகி வந்தாள் என்பது 
அருணகிரிநாதர்
நமக்குக் காட்டுகின்ற
திருக்குறிப்பு..

கன்னியர் அறுவரொடு
அறுமுகனை வணங்கி விரதம் 
மேற்கொண்டு
எல்லாப் பாவங்களில்
இருந்தும் நீங்கியிருப்பது
நமது பண்பாடு..

அருணகிரிநாதர்
அருளிச்செய்த
திருப்புகழுடன்
இன்றைய பதிவு..


தனதன தாத்தன தனதன தாத்தன 
தனதன தாத்தன ... தந்ததான

விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிட ... அன்புமேன்மேல்

மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
விழைவுகு ராப்புனை ... யுங்குமார

முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை 
முலை நுகர் பார்த்திப ... என்றுபாடி

மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
முழுதும லாப்பொருள் தந்திடாயோ..

பரகதி காட்டிய விரகசி லோச்சய 
பரமப ராக்ரம ... சம்பராரி

படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
பகவதி பார்ப்பதி ... தந்த வாழ்வே

இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
எழுகிரி யார்ப்பெழ ... வென்றவேலா

இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய 
எழுகரை நாட்டவர் ... தம்பிரானே..
(நன்றி: கௌமாரம்)

இந்த எழுகரை நாடு என்னும் தலம் குடகு மலைச் சாரலில் என்றும் ஈழத்தில் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன..
**

உனது திருக்கோலம் ஒன்றே இலக்கு எனும் ஒருமித்த சிந்தையொடு உன்னையே நினைந்து மனம் உருகித் துதித்துப் பலவாறு வாழ்த்தி,

கண்களில் நீர் நிறைந்து வழிந்திட  மேன்மேலும் அன்பு பெருக்கி, இரவும் பகலும் வேறெந்த சிந்தனையும் இலாது,

விருப்பமுடன் குரா மலரை மாலையாக
அணிந்து கொள்ளும் குமரனே முருகனே.. ஆறெழுத்துடைய ஐயனே.. சரவணபவனே.. 

கார்த்திகைக் கன்னியரின் திருமுலைப் பால் அருந்திக் களித்த அழகனே..

என்றெல்லாம்,
வாய்மொழி குழறும் படிக்கு உன்னைப் பாடித் தொழுது ஓயாமல் அழுது -
யான் உன்னால் ஆட்கொள்ளப்பட வேண்டும்..

அந்நிலையில்,
உலக மாயையைக் கடந்த மெய்ஞானத்தை அடியேனுக்குத் தந்தருளல் வேண்டும்!..

உபதேச மொழியின் வழியாக எனக்கு மோட்ச வீட்டைக்
காட்டிய பராக்ரமனே!.. மலைகளுக்கு அரசன் ஆனவனே!.. மிக்க வீரத்தினை உடையவனே!..

மன்மதன் சாம்பலாகும்படிக்கு அவனை நெற்றிக் கண் கொண்டு நோக்கிய பசுபதியாகிய சிவ பெருமான் புகழ்ந்து அணைந்த பகவதி எனும் பார்வதியாள் பெற்றளித்த பெரு வாழ்வே,

நீ அமரர்களுக்காக போர் நடாத்தியபோது
ஓயாத இரைச்சல் உடைய அலைகடல்  தீப்பற்றிக் கொண்டு எரிந்தது.. அதைக் கண்ட அசுரர்கள் அஞ்சி நடுங்கினர்.. அலறிக் கதறினர்.. 

கிரெளஞ்ச மலைத் தொடர் ஆர்ப்பரித்து அதிர்ந்து அழிந்தது..

இப்படியாக, 
அசுரர்களை அழித்து வெற்றி கொண்ட வேலவனே!..

தேவர்களை அவர்களது உலகில் நிறைவாகக் குடியேற்றியவனே!..

எழுகரை நாடு எனப்படும் தலத்தில் எழுந்தருளிய எம்பெருமானே!..

எங்களையும் நோய் நொடிகளில் இருந்து காத்தருள்வாயாக!..

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
வீரவேல் முருகனுக்கு அரோகரா..
***

13 கருத்துகள்:

  1. காத்தருளே கந்தவேளே ...   ஓம் முருகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வண்ண மயில் முருகனையும், வள்ளி, தெய்வானை முருகனையும் தரிசித்து கொண்டேன். அருணகிரிநாதர் அருளிசெய்த பாமாலை படிக்க மனதுக்கு இனிதாக உள்ளது. முருகா சரணமென நாளும் "அவனை" மனதாற நினைக்கும் அருளை "அவன்" தந்திட வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும்
      பிரார்த்தனைக்கும்
      நன்றி..

      முருகா.. முருகா..

      நீக்கு
  3. இதுக்குக் கருத்துச் சொல்லி இருந்தேன். 2 முறை. போகலை. அதுக்குள்ளே மின்சாரமும் போய்விட்டது.:( அருணகிரிநாதரின் திருப்புகழுக்கும் விளக்கத்திற்கும் நன்றி. இங்கே நேற்றிலிருந்து வயலூருக்குப் பால்குடங்கள் போன வண்ணம் இருக்கின்றன. முருகனின் வேல் அனைவரது வினைகளையும் அடியோடு தீர்க்கட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும்
      பிரார்த்தனைக்கும்
      நன்றியக்கா..

      நீக்கு
  4. சரவணப் பொய்கையில் அவதரித்து நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் வேல் அழகனை வணங்கி நிற்கிறேன். பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. திருப்புகழை பாடி , விளக்கமும் படித்து தரிசனம் செய்து கொண்டேன் கார்த்திகை பாலனை.
    நோய்,நொடி இல்லாமல் நலமாக வைக்க வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும்
      வேண்டுதலுக்கும்
      நன்றி..

      முருகா.. முருகா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..