நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 31, 2022

கணபதி 2

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 15
புதன்கிழமை


நாடெங்கிலும்
ஸ்ரீ விநாயக சதுர்த்தி
*

பழந்தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இல்லை.. 

விநாயகர் சிலையே வாதாபியில் இருந்து நரசிம்ம பல்லவரின் (AD 630 - 668) தளபதி பரஞ்சோதி என்பவரால் கொண்டு வரப்பட்டது தான்.. 

அதற்கு முன் விநாயகரை இங்கு யாருக்கும் தெரியாது..

இப்படியெல்லாம் இங்கே சொல்லி உருட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்..

காஞ்சி மாநகர்..

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு
மகேந்திர பல்லவர் (AD 600 - 630) ஆட்சி நடத்துகின்றார்..

இவரது மகனே மாமல்லன் எனப்பட்ட  நரசிம்ம வர்மன்..

மகேந்திர பல்லவரின் காலத்தில் சமண சமயத் துறவி ஒருவர் மனம் மாறி மீண்டும் சிவநெறியினைச் சார்ந்து விட்டார்.. பெயரும் திருநாவுக்கரசர் என்றாகி விட்டது..

கொல்லாமை வழியில் நிற்கின்ற ஏனைய சமணத் துறவிகள் கொதிக்கின்றனர்..

நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பம் இல்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்கொய்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே .. 6/98/1

- என்றபடி அங்கே திருநாவுக்கரசர்..

" ஓடிப் போனதும் இல்லாமல் பாட்டு வேறயா!.. " 

- என்று பொங்கி எழுந்த சமணர்கள் - மனம் மாறிப் போன திருநாவுக்கரசர் மீது அடக்கு முறையை ஏவி விட்டு அவரைக் கொன்று விடுவதற்கு முயற்சி செய்கின்றனர்.. 

வழக்கம் போல் சிவசமய அன்பர்களின் கூக்குரல் மகேந்திரனின் காதுகளில் விழாததால் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கின்றனர்..

மகேந்திர பல்லவரும் சமணத் துறவிகளுக்கு உடன் நிற்க - அரசனது ஆணையினை எதிர்க்கின்றார் திருநாவுக்கரசர்.. 

அவரைக் கட்டி இழுத்துச் செல்வதற்காக வந்திருக்கும் தளபதி அவரது கால்களில் விழுந்து கேட்டுக் கொள்கிறான்.. 

" தாங்கள் இப்போது வரவில்லை எனில் எனது உயிருக்கு ஆபத்து.. "  - என்று..

அந்த வார்த்தைகளால் மனம் இரங்கிய திருநாவுக்கரசர் திரும்பவும் காஞ்சிக்குச் சொல்கின்றார்.. மன்னன் விதித்த தண்டனைகள் நிறைவேற்றப்படுன்றன..

ஆனால்,
அத்தனையும் தோல்வியில் முடிகின்றன.. 

இறுதியாக கல்லுடன் பிணைக்கப்பட்டு  கடலுக்குள் தள்ளப்படுகின்றார் திருநாவுக்கரசர்.. 

இறைவன் அருளால் கருங்கல்லானது தெப்பமாகி மிதக்கின்றது.. திருப்பாதிரிப் புலியூருக்கு அருகில்
திருநாவுக்கரசரும்
கரையேறுகின்றார்..

விவரம் அறிந்த மகேந்திர பல்லவர் மனம் வருந்தி திருநாவுக்கரசரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தானும் சைவ சமயத்திற்குத் திரும்புகின்றார்..

அடைக்கப்பட்ட சிவாலயங்கள் திறக்கப்படுகின்றன.. இடித்துத் தள்ளப்பட்ட கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டன..

தான் சைவ சமயத்துக்குத் திரும்பியதை -  கல்வெட்டாகப் பதிவு செய்து வைக்கின்றார்
மகேந்திர பல்லவர்.. அந்தக் கல்வெட்டு திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் இருக்கின்றது..


திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்களே தேவாரம் எனப்பட்டவை.. அவற்றில் ஈசனின் திருமகனாகிய
கணபதியைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார்..

மகேந்திர பல்லவரின் மகன் நரசிம்ம வர்மன்  சாளுக்கிய நாட்டுடன் 642 ல் போர் தொடுத்து அந்நாட்டைக் கைப்பற்றுகின்றான்.. வெற்றியின் சின்னமாக தலைநகர் வாதாபியில் இருந்த கணபதி விக்ரகத்தைப் பெயர்த்துக் கொண்டு வருகிறார் படைத் தளபதியான பரஞ்சோதி..

பரஞ்சோதி விநாயகர் சிலையைக் கொண்டு வந்த பிறகு தான் தமிழகத்துக்குக் கணபதியைத் தெரியும் என்றால் -

நரசிம்மனின் தந்தை மகேந்திர பல்லவர்
காலத்திலேயே திருநாவுக்கரசரால் கணபதி சொல்லப்பட்டது எப்படி?..

642 ல் நரசிம்ம பல்லவன் வாதாபியை வெற்றி கொண்ட பிறகு அங்கிருந்த கணபதி விக்ரகத்தைப் பெயர்த்துக் கொண்டு வந்தாரே தளபதி பரஞ்சோதி இவரே பின்னாளில் சிறுதொண்டர் என, நாயன்மார்களுள் ஒருவராக வைக்கப்பட்டார்.. 

இவர் - தான் கொணர்ந்த கணபதி விக்ரகத்தை தனது சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியின் சிவ ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார்..

அந்த கணபதியைக் கீழுள்ள படங்களில் காணலாம்..


இந்த  சிவ ஆலயத்துக்குப் பெயர் கணபதீஸ்வரம்..
கணபதி விக்ரஹம்  இவ்வூருக்கு வருவதற்கு முன்னரே  கணபதீஸ்வரம் என்ற பெயர் வந்தது எப்படி ?..

ஸ்ரீ வாதாபி கணபதி
திருச்செங்காட்டங்குடி
கஜமுகன் என்ற அசுரனுடன் கணபதி போரிட்ட போது சிந்திய ரத்தத்தால் மண் சிவந்து போனது.. அதனால் செங்காட்டங்குடி.. அசுரனை  வெற்றி கொண்டு அழித்த பிறகு, 


கணபதி இங்கே இருந்து சிவபூஜை நிகழ்த்தினார்.. அதனால் உண்டான கோயில் 
கணபதீஸ்வரம் என்றானது..
ஊர் - செங்காட்டங்குடி
கோயில் - கணபதீஸ்வரம்..

ஞானசம்பந்தப் பெருமான் இங்கே திருப்பதிகம் பாடியபோது கணபதீஸ்வரம் என்றே பாடுகின்றார்..


வாரேற்ற பறையொலியுஞ்
சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோடு
ஓங்கியசீர் விழவோவாச்
சீரேற்ற முடைத்தாய
செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான்
கணபதீச் சரத்தானே..1/61/2

கணபதீஸ்வரம் 
மேவி விளங்குகின்ற கணபதி
நம்மை என்றென்றும்
காத்து அருள் புரிவாராக!..

ஓம் கம் கணபதயே நம

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. பொறுமையான ஆராய்ச்சி.  பெருமையான ரிசல்ட்.  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.  ஓம் கணபதயே நம..

    பதிலளிநீக்கு
  2. அரியாத விடயம் அறிந்தேன் நன்றி

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. இன்னும் சற்று பின்னோக்கி ஆய்வு செய்ய வேண்டும்...

    முருகா... (இங்கு முதன்மை) ?

    பதிலளிநீக்கு
  4. ஆரம்ப வரிகளை வாசித்ததும் என்னடா இது புதுக்கதையாக இருக்கிறதே என்று தோன்றியது அப்புறம் புரிந்தது செருகல்கள் என்று.

    வாதாபி கணபதிம் பஜே! என்ற கிருதியின் அர்த்தம் புரிந்தது. இது இதுவரை அறியாத ஒன்று.

    விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. நல்ல விளக்கங்கள். வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. அருமையான கட்டுரை. நல்ல தகவல்கள். ஏற்கெனவே பல முறை படிச்சிருக்கேன். என்றாலும் இவை இன்னமும் தொடர்வது வேதனையே! எப்படியானால் என்ன? மக்கள் விநாயகனை ஒதுக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  8. நல்லதோர் ஆராய்ச்சி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.



    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..