நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 03, 2023

தை வெள்ளி 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 20
 மூன்றாவது
வெள்ளிக்கிழமை

அம்பிகையின் திருப்பெயர்கள் 
பலவும் பயின்று வரும் அற்புதத் திருப்பதிகம் இது..


சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலசு
லோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
சுலட்சணி சாற்றரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோதரி அமலை
ஜெக ஜால சூத்ரி அகில ஆத்ம காரணி வினோத சய 
நாரணி அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி
கௌமாரி உத்துங்க கல்யாணி புஷ்ப அஸ்தி ராம்புய
பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவ சாமிமகிழ் வாமி அபிராமி உமையே!..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவுந் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.. 69


தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே.. 73


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி  சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.. 77


உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.. 84

பார்க்கும் திசை தொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார் குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே.. 85
-: ஸ்ரீ அபிராமபட்டர் :-
-::-

ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

 1. அன்னை அபிராமி எங்களையும், உங்களையும், அனைவரையும் காக்க பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவரையும் அன்னை காத்தருள வேண்டும்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. அபிராமியின் தரிசனம் நன்று
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வளமுடன்..
   மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஓம் சிவாய நம..

   மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. பெயரில்லா03 பிப்ரவரி, 2023 12:40

  தனம் தரும் - பாடல் மனப்பாடமான பாடல். அபிராமியின் கடைக்கண் பார்வை நம் எல்லோர் மீதும் பட்டு எல்லோரும் நலமுடன் மகிழ்வுடன் இருக்க வேண்டும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அபிராமியின் கடைக்கண் பார்வை நம் எல்லோர் மீதும் பட்டு எல்லோரும் நலமுடன் மகிழ்வுடன் இருக்க வேண்டும்.. //

   அவ்வண்ணமே பிரார்த்தனை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. அபிராமி சதகம், அபிராமி அந்தாதி பாடி அபிராமியை துதித்து கொண்டேன். எல்லோருக்கும் எல்லா நலன்களையும் அன்னை அருள பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எல்லோருக்கும் எல்லா நலன்களையும் அன்னை அருள பிரார்த்திப்போம்.//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. அபிராமி திருவடிகளே சரணம்.
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. சரணம்.. சரணம்..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ..

   நலம் வாழ்க..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..