நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 24, 2023

முருகா..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 12
 வெள்ளிக்கிழமை


முருகன் அடியார்கள் அனைவருமே 
அறிந்திருக்கும் பாடல் - இது..


இதுநாள் வரைக்கும் இந்தப் பாடலை - தனிப்பாடல் என்றே நினைத்திருந்தேன்.. யூடியூப்பில் கண்டதும் தரவிறக்கம் செய்து பதிவில் வழங்கியுள்ளேன்..

அபூர்வ திருடன் (1958) எனும் திரைப்படத்தில்
திரு S.தக்ஷிணாமூர்த்தி அவர்களது இசையில் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அவர்களது பாடல்..

பாடியிருப்போர் -
TM. சௌந்தரராஜன்  குழுவினர்


முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா..

முறை கேளாயோ குறை தீராயோ..
மான் மகள் வள்ளியின் மணவாளா..

உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா..

மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழி 
தான் புகல்வாய்..

அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே…
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்..

ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
சிவமே பதாம்புஜம் 
தேடி நின்றோம்..

தவசீலா ஹே.. சிவபாலா..
தவசீலா ஹே.. சிவபாலா..
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா..

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா..

உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா..

உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா..

உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா!..
***

16 கருத்துகள்:

 1. மிக இனிமையான பாடல்.  இது திரைப்படத்தில் வரும் பாடல் என்பதை நான் அறிவேன்.  படம்பெயர்த்தான் அடிக்கடி மறந்து போகும்.  நீலமலைத்திருடன் என்று நினைவுக்கு வரும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல வருடங்களுக்கு முன்பு தனிப்பாடல் தொகுப்பில் இதனைப் பார்த்ததில் இருந்தே இதே நினைவு தான்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  நலமா? அருமையான பாடல். இந்தப்பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். மேலும் நானும் தங்களால் இன்று இந்தப் பாடல் பற்றிய தகவல் தெரிந்து கொண்டேன். முருகனருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும். முருகா சரணம்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு நல்வரவு...

   வெகு நாளாகி விட்டது..

   நலம் தான் .. தாங்களும் நலம் தானே..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. அருமையான பாடல் ஜி இரசித்து கேட்டேன்.

  பதிலளிநீக்கு
 4. மிகவும் பிடித்த பாடல் முன்பு வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல். விரும்பி கேட்டேன், பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 5. மனதை ஆர்ப்பரிக்கும் பாடல்... ஆகா...

  பதிலளிநீக்கு
 6. காலையில் மனதுக்கு இனிமையான, சிந்தையைக் கந்தன் வசம் திருப்பும் பாடல்.

  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 7. வெள்ளி நாளில் முருகனை துதிக்கும் பாடல்.சிறுவயதில் கேட்ட பாடல் அப்புறம் கேட்டதில்லை.

  அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 8. மிகவும் இனிமையான பாடல் துரை அண்ணா. அழகான பாடல். கேட்டு ரசித்த பாடல்...இப்போது மீண்டும் கேட்டு ரசித்தேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் இனிமையான அழகான பாடல்.. இது திரைப்பட பாடல் என்று இப்போது தான் அறிகின்றேன்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   வாழ்க நலம்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..