நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 12, 2023

வரகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 29
    ஞாயிற்றுக்கிழமை


வரகு (Proso millet)

வரகு தான் - கோபுரக் கலசங்களுக்குள் இட்டு நிரப்பப்படுவது.. ஏனெனில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் இது உயிர்ப்புடன் இருக்கக் கூடியது..

பற்பல வருடங்களுக்குப் பிறகு கலசங்கள் பிரிக்கப்படும் போது அதிலிருக்கும் வரகு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஆகட்டுமே!.. - என்ற தீர்க்க தரிசனம் நமது முன்னோர்களுக்கு..


வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியனவும்  தாதுப்பொருட்களும் நிறைந்துள்ளன. 

மூட்டுவலியைக் குறைக்கின்றது. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டுகின்றது..

கண் தொடர்பான நோய்களைத் தடுக்கின்றது.
நிணநீர் சுரப்பிகளைச் சீராக்குகின்றது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது..


குறிப்பாக பெண்கள் வரகினை பலவிதமாக சமைத்து சாப்பிடுவது நல்லது..

பல தாதுக்களைத் தன்னுள் கொண்டிருக்கும் வரகு - காலை உணவுக்கு மிகவும் சிறந்தது. 
(தகவல்கள் - நன்றி : விக்கி)


சிறு தானியங்களின் பயன்பாடு குறித்து மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு
ஐயா நம்மாழ்வார் அவர்களே முக்கிய காரணம் என்பதில் ஐயம் இல்லை.. இந்த அளவில்
வரகு மற்றும் ஏனைய சிறு தானியங்களுக்கு மீண்டும் தேடல் அதிகமாகிப் போனதால் - ஊருக்கு ஒரு விலை - ஊருக்குள் கடைக்கு ஒரு விலை என்று ஏவாரம் களைகட்டி இருக்கின்றது..

அது ஒருபுறம் இருக்கட்டும்..

இன்று எளிய முறையில் வரகரிசிக் கஞ்சி செய்முறையைக் கவனிக்கலாம்..

" என்ன தேடறீங்க?.. "

" இங்கே இருந்த செய்முறைக் குறிப்பு!.. "

" வாத்தியாரே!..
அதைத் தான் எபிக்கு அனுப்பி வைத்தாயிற்றே..
நாளைக்கு காலையில அங்கே போய்ப் பாருங்க!.. "
***

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
***

22 கருத்துகள்:

 1. "வரகரைக்கறதும்....    வந்து நிக்கறதும்...  வா வா என்கிறதும்...   வரமாட்டேன் போ என்கிறதும்...    சுக்காங் குத்துறதும்... சோறு கொதிக்கிறதும்.."  என்று சிறு குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவார்கள்.  முதலில் வருவது வரகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   இப்படியான பாட்டை இப்போது தான் கேட்கிறேன்...

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. கும்பாபிஷேக கலசத்திலிருந்து எடுக்கப்படும் பழைய வரகை என்ன செய்வார்கள்  இப்போதெல்லாம்?  வீணடித்து விடுவார்களா?  இல்லை (தனியாக) பயிரிட்டு பார்ப்பார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீணடிப்பது இல்லை.. மீண்டும் பயிர்ச் செலவு ஆகிவிடும்..

   பஞ்சம் வந்துற்றபோது கோயில் கலச்ங்களைப் பிரித்து வரகு எடுத்து பயன் படுத்திக் கொள்ளலாம் என்றொரு சம்பிரதாயம் இருக்கின்றது என்று படித்திருக்கின்றேன்..

   தங்களது கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 3. ஹிஹிஹி...   நாளைய எபி பதிவு லீக் ஆகிவிட்டதா?!!!   டீஸர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் இது வேறொரு நாளுக்கான பதிவு - சமையற் குறிப்புடன்..

   நீங்கள் சமையல் குறிப்பினை ஏற்றுக் கொண்டதும் பதிவின் போக்கு மாறி விட்டது..

   மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 4. எபியில் நாளைய பதிவின் முன்னறிப்பு அருமை ஜி

  தகவல்கள் சிறப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. பெயரில்லா12 பிப்ரவரி, 2023 10:28

  துரை அண்ணா நம் வீட்டில் வரகின் வரவு பல வருடங்களுக்கு முன்னரே. ஆமாம் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்தான் மீண்டும் புத்துயிர் பெற வைத்தவர் சிறு தானியங்களுக்கு

  இன்னிக்குக் கூட நம் வீட்டில் பிஸி பேளா வரகுபாத்!!!!

  வரகுக் கஞ்சி, வரகரிசி தயிர் சாதம்,வ்ரகரிசி பொங்கல், என்று அரிசி வைத்துச் செயதற்குப் பதிலாக வரகரிசி வைத்துச் செய்வது. சிறுதானியங்கள் நம் வீட்டில்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில வருடங்களாக நானும் வரகு கட்சி!..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. பெயரில்லா12 பிப்ரவரி, 2023 10:28

  அட! நாளை எபி யில் உங்கள் கைவண்ணமா!! ;அருமை!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.. பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் நானும் வித்தை காட்டுகின்றேன்...

   மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நீக்கு
 7. பெயரில்லா12 பிப்ரவரி, 2023 10:38

  வரகு தானியம் பற்றி நல்ல பகிர்வு.

  ஆகா! திங்கள் எ பி பகிர்வு வெளியாகிவிட்டதே :)

  மாதேவி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 8. வரகு பற்றிப் படித்தவுடன் வாங்கணும்ணு தோணிடுச்சு. இந்த வாரம் வரகரிசி பாயசம்.

  கடவுளே..நாளை கட்சியில் வெங்காயம் பூண்டு ஸ்லாம் போட்டிருக்கக்கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கடவுளே..நாளை கட்சியில் வெங்காயம் பூண்டு ஸ்லாம் போட்டிருக்கக்கூடாது.. //

   இவை சேர்க்கப்பட்டிருந்தாலும் உங்கள் விருப்பத்தின் பேரில் நீக்கி விடலாம்... அதனால் பாதகம் இல்லை..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 9. கைக்குத்தல் அரிசி எங்க கிடைக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயந்திரக் கை குத்தல்
   தான்..

   எங்கும் கிடைக்கின்றது..

   மகிழ்ச்சி . நன்றி..

   நீக்கு
 10. மாயவர்த்தில் மாரிஅம்மன் கும்பாபிஷேகத்தின் போது கோவில் கோபுர கலசத்திற்கு தானியங்களை இட அழைத்து இருக்கிறார்கள். கேழ்வரகு போட்டு இருக்கிறேன் நான்.
  ஒரு கலசம் வரகு, ஒரு கலசம் திணை, கம்பு , நெல் எல்லாம் போடுவார்கள். 12 வருடம் வரை அந்த தானியங்கள் கெடாது என்பார்கள். அதன் பின் அதை தங்கள் விவாசய நிலத்திற்கு வாங்கி போவார்கள். வரகு, கேழ்வரகு எல்லாம் மின்னல் இடியை தாங்ககூடியது என்பார்கள்.

  உங்கள் வரகு கஞ்சி நாளை வருவதற்கு இன்று முன்னோட்டம் அருமை.

  எங்கள் வீட்டில் வரகு கஞ்சி, வரகு தயிர் சாதம், வரகு பொங்கல் எல்லாம் செய்து சாப்பிடுவோம். கொஞ்சம் சாப்பிட்டாலும் பசி தாங்கும்.
  அதிகம் உடல் உழைப்பு செய்பவர்களுக்கு தகுந்த உணவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெளிவாக சொல்லியிருக்கின்றீர்கள்... எங்கள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது வரகு தான் நிரப்பினோம்...

   நமது சமய சடங்குகளில் எல்லாமே அர்த்தம் உள்ளவை தான்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..