நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 19, 2023

கல்யாண தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 7
 ஞாயிற்றுக்கிழமை

ஆதியில் பராசர மகரிஷி ஸ்ரீமந் நாராயணனிடம் பெற்ற அமுதத்தைத் தான் மட்டும் அருந்தாமல் இந்த வையகமும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தினால் அங்கிருந்த தடாகத்தில் கொஞ்சம் கலந்தார் முனிவர்.. அந்தத் தடாகமே அமிர்த புஷ்கரணி..

அதனை அறிந்த அசுரர்கள் அக்குளத்து நீரைப் பருகினர்.. அவர்களே தஞ்சகன்  தாண்டகன் தாரகன் என்பவர்கள்.. அதன் பின் அவர்கள் இழைத்த இன்னல்களைச் சொல்லி மாளாது.. 

பராசர முனிவர் இவ்விவரத்தைச் சொல்லி முறையிட - நாரணர்க்குத் துணையாக அம்பிகையின் திருமேனியில்  கோபாக்னி கொந்தளித்தது..

ஆங்காரத்துடன்
 கோடியம்மன் என - பேருருவம் கொண்டு வெளிப்பட்டாள்.. 

ஸ்ரீமந் நாராயணன் அசுரர்களோடு சண்டையிட அவர்கள் அமிர்த புஷ்கரணி நீரினைப் பருகி இருந்ததால் அழியாதிருந்தனர்..

இதை அறிந்த மஹா விஷ்ணு மேகமாகி அமிர்த புஷ்கரிணி நீரினை முற்றாகப் பருகி விட்டார்..

இதனால் நீலமேகப் பெருமாள் என்று இத்தலத்தில் பெயர்..

 அந்நிலையில் யானை வடிவம் கொண்டு ஓடி
தஞ்சகனை சிங்கமாகத் தோன்றி கிழித்தெறிந்தார்..

இத்திருக்கோலமே வீரநரசிங்கப் பெருமாள்.

இதைக் கண்டு அஞ்சிய தாண்டகன் பூமியைத் துளைத்துக் கொண்டு ஓடினான்..

வராகமாக வடிவெடுத்த பெருமாள் அவனையும் அழித்து ஒழிக்க  - கோடியம்மன் தாரகனின் உயிரைக் குடித்தாள்.. 

இந்த கோரத்தினைக் கண்டு நடுங்கிய தேவர்களை ஓரிடத்தில் சிறையாக வைத்து பாதுகாப்பு அளித்தார் ஸ்ரீ ஹரிஹர சுதனாகிய ஐயனார்.. 

அதனாலேயே இங்கு ஸ்வாமிக்கு சிறை காத்த ஐயனார் என்ற திருப்பெயர்.. 

ஈசன் தேவர்களுக்கு தஞ்சம் அளித்ததால் தஞ்சபுரீஸ்வரர்.. 

அசுரர்கள் அழிந்தனால் முனிவர்களும் தேவர்களும் ஆனந்தம் அடைந்து நிற்க - அம்பிகை அந்த ஆனந்தத்தையே பிரசாதித்ததால் ஆனந்தவல்லி எனப்பட்டாள்..

இறுதியாக தேவர்கள் அசுரர்களது உடலுக்கு தீ மூட்ட - அந்தத் தீயினில் ஈசன் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தினார்..  

இதனாலேயே இக்கோயிலில் ஈசனுக்கு சிதானந்தீஸ்வரர் என்ற பெயர்.. 

தஞ்சையின் மகா மயானத்தின் ஈசானிய மூலையில் இக்கோயில்..
 
இதுவே தஞ்சையின் தல புராணம்..

காலத்தால் முந்திய
இக்கோயிலில் ரோமரிஷியின் அதிஷ்டானம் உள்ளது..

கோயிலின் வடபுறமாக வடவாறும் தென் புறத்தில் அமிர்த புஷ்கரணியும் உள்ளன..

அமிர்த புஷ்கரணியின் வடகரையில் தான் தேனார்மொழியாள் சந்நிதி..

தஞ்சையில் அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் திருக்குளம் அமைந்திருக்கும் கோயில் இது ஒன்றே!.. 

மிகச் சிறிய கோயில்.. இதன் அருகில் தான் தர்ப்பண சடங்குகள் செய்கின்றனர்.. 

கோயில் குளத்தின் இன்றைய நிலை சொல்வதற்கில்லை. நேரில் பார்த்தால் தான் விளங்கும்..

 இக்கோயிலில் 
ஸ்ரீ சிதானந்தீஸ்வர ஸ்வாமிக்கும் அம்பிகை தேனார் மொழி அம்மைக்கும் கடந்த ஆண்டு நிகழ்ந்த திருக்கல்யாண வைபவங்கள் இன்றைய பதிவில்..



















ஸ்ரீ தேனார்மொழியாள் சமேத ஸ்ரீ சிதானந்தீஸ்வரர் போற்றி போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. எந்த கோயில் குளங்களை ஒழுங்காக வைத்திருக்கிறார்கள்? அர்ச்சகர் தட்டில் காசு போடாதே என்று வழியில் நிற்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தான்..
      இதே தான்!..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. சிவம் நம்மைக்காக்கட்டும்.  சீராக வைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் .. பிரார்த்திப்போம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. ஸ்ரீ தேனார்மொழியாள் சமேத ஸ்ரீ சிதானந்தீஸ்வரர் போற்றி போற்றி. திருக்கல்யாண காட்சிகள் அற்புதம்.
    இன்றைய தரிசனம் அருமை.
    பெயர் காரணங்கள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு
  4. துரை அண்னா, திருக்கல்யாணக் காட்கிகள் தரிசனம் அருமை. சுவாமியின் பெயர்க்காரணமும் தெரிந்து கொண்டேன். கோயில் குளங்கள் பலவும் மோசமாகி வருவது வேதனை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // கோயில் குளங்கள் பலவும் மோசமாகி வருவது வேதனை...//

      ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்தக் குளமும் சேர்க்கப்பட்டுள்ளது.

      எப்போது சீராகும் ?.. தெரியாது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. திருக்கல்யாணக் காட்சிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..