நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
திங்கட்கிழமை
தஞ்சாவூர் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுவையான நற்செய்தி:
ஜங்ஷனில் திறக்கப்பட்டது 'ரயில் கோச் ரெஸ்டாரன்ட்'!.. 🚂
45 வருட பாரம்பரியமுடைய தஞ்சாவூரின் புகழ் பெற்ற 'ரயிலடி வி. சுப்பையா டிபன்ஸ்' (Railadi V. Subbaiya Tiffins) நிறுவனத்தினர் தங்களது புதிய ரயில் கோச் உணவகத்தை
(AC) கடந்த வெள்ளிக்கிழமை (20/02/26) அன்று தஞ்சாவூர் ஜங்ஷனின் (Thanjavur Junction) பிரதான நுழைவாயிலின் எதிர்ப்புறத்தில் கோலாகலமாகத் திறந்துள்ளனர்..
பாரம்பரிய சுவையுடைய சைவ உணவுகளை ரயில் பெட்டிக்குள் குளுகுளு என, அமர்ந்து சாப்பிடுவது மாறுபட்ட புதிய அனுபவம்! ..
ரயில் கோச் உணவகத்தின் உட்புறம் முழுவதும் தஞ்சையின் மண் வாசம் கலையழகுடன் கூடி தனித்துவமாக நிரம்பியுள்ளது..
பயணத்திற்கு முன்னோ அல்லது பிறகோ குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு இது ஒரு சிறப்பான இடம்...
படங்களுக்கு நன்றி
Fb
தஞ்சை வாழ்க..
***







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..