நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 06, 2026

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 நான்காம் வெள்ளி

திருப்புகழ்
திரு ஆவினன்குடி


 தனனா தனந்ததன தனனா தனந்ததன
 தனனா தனந்ததன ... தனதான

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
     செவிமீதி லும்பகர்செய் ... குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
     செயலேவி ரும்பியுளம் ... நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
     மடியேனை அஞ்சலென ... வரவேணும்

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
     அருள்ஞான இன்பமது ... புரிவாயே..

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றும் அரி
     ரகுராமர் சிந்தைமகிழ் ... மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
     நலமான விஞ்சைகரு ... விளைகோவே

தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
     திறல்வீர மிஞ்சுகதிர் ... வடிவேலா

திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
     செகமேல்மெய் கண்டவிறல் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா முருகா
ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..