நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தஞ்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஞ்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 12, 2026

நூற்றாண்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
 சனிக்கிழமை


இன்று 
எனது தந்தை 
திரு ந. துரைராஜன் அவர்களின் நூறாவது பிறந்த நாள் 12/9/1926...


அவரது நல்லாசிகளுடன்
அவர் தாள் வணங்கிக் கொள்கின்றோம்...

நலம் வாழ்க
***

திங்கள், ஆகஸ்ட் 31, 2026

வாழ்க நலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
திங்கட்கிழமை


சென்ற ஞாயிறன்று -  காலை ஏழு மணியளவில் தஞ்சையில் இருந்து 
சாரளபள்ளி -  நாகர்கோயில் அதிவேக விரைவு ரயில் மூலம் மதியம் திருநெல்வேலியை அடைந்து  அங்கிருந்து வ்ண்டி மாறி மதியம் 2:30 மணியளவில் திருச்செந்தூர் கோயிலைச் சென்றடைந்தோம்... 

கைத்தலபேசிகளை ஒப்படைப்பது போன்ற சம்பிரதாயங்களுக்குப் பின் ,
மாலையில் கடலில் இறங்கினோம்... 

என்னால் கடலில் (அலை வேகத்துடன்)  நிற்க முடியவில்லை.. புரோக்ஷணம் செய்து கொண்டேன்... மனைவியும் மகனும் நீராடினர்..

கடலில் நீராடி விட்டு நாழிக் கிணறு தீர்த்தம்... 

தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கவாட்டில் விசைத் தெளிப்பு முறை (sprinkler) புதிதாய் அறிமுகம்..

அங்கிருந்து கரையேறி உடை மாற்றிக் கொண்டு ஆதார் அட்டையைக் காட்டி விட்டு மூத்தோர் வரிசையில் நின்றோம்... திருக்கோயில் வளாகத்தில் கூட்டம் என்றாலும் கோயிலுக்குள் நெரிசல்  இல்லை..

அடுத்த இருபது நிமிடங்களில் முருகன் அருளால் நெரிசல் இன்றி மணியடி மண்டபத்தில் வைத்து ஸ்வாமி தரிசனம் கிடைத்தது...

மணியடி மண்டபம் என்பது கருவறையின் வாசல்..

ஸ்வாமிக்குத் தங்கக் கவசம் சாற்றப்பட்டிருந்தது..

இதனை எதிர்பார்க்கவே இல்லை... எல்லாம் அவனது திருவருள்..

உள்வலம் வந்து ஸ்ரீ வள்ளி நாச்சியாரையும் ஸ்ரீ தேவ குஞ்சரியையும் தரிசனம்  செய்து கொண்டு வெளித்திருச்சுற்றில்  ஸ்ரீ மகா கணபதியையும் வட புறத்தில் ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாளையும் தரிசனம் செய்து விட்டு கொடிமர நம ஸ்காரம் செய்து கொண்டோம்...

இரவு கோயில் நடை வெளியில் உறக்கம்...

அதிகாலையில் எழுந்து குளித்தபின் மீண்டும் சந்நிதியில் முருக தரிசனம் செய்து - நல்லருள் புரிவாய் முருகா - என்ற வேண்டுதலுடன் உவரி ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமி கோயில் நோக்கிப் புறப்பட்டோம்...

இந்த வருடமும் வள்ளிக் குகை அடைத்துக் கிடந்தது.. 

மேலும் கோயிலில் இருந்து சற்று தூரம் மூவர் அதிஷ்டான  தரிசனம் செய்வதற்கும் 

ஐயா  வைகுண்டர் கடலில் இருந்து மீண்டு வந்த அவதாரப் பதியை தரிசனம் செய்வதற்கும் - 
முழங்காலைப் பிடித்திருக்கின்ற வலி விடவில்லை...

மிச்சமிருந்த மின்சக்தியைக் கொண்டு ஒரே ஒரு படம் மட்டும் எடுத்தேன்...

ஐயன் அருளால்
அடுத்த ஆண்டு எல்லாம் குறைவற நடக்கும் ... 

கோயிலில் இருந்த இரண்டு நாளும் திருக்கோயிலின் அன்னப்பிரசாதம்...

வேறென்ன வேண்டும்!..

வாழ்க நலம்...

ஸ்ரீ ஷண்முக நாதன
 

   சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்

   மால் பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்

      வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

         கால் பட்டழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.. 40 
-: கந்தரலங்காரம் :-

 முருகா முருகா
***

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2026

கொடை விழா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 13
ஞாயிற்றுக்கிழமை
 

நிகழும் ஆவணி மாதத்தின் இரண்டாம்  செவ்வாய்  ( 25/ ஆகஸ்ட் ) அன்று - 
திருச்செந்தூரில் இருந்து நாற்பது கிமீ தொலைவில் அமைந்துள்ள உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் எங்கள் குல தெய்வத்தின்  வருடாந்திரக் கொடை விழா நடைபெற உள்ளது...

இறையருள் துணை கொண்டு இன்று காலை நாங்கள் உவரிக்குச் செல்கின்றோம்...

இவ்வேளையில் பதிவுலகத்தில்  -
 அன்பின் ஜீவி அண்ணா, ஸ்ரீராம், நெல்லைத் தமிழன், கௌதம் ஜி, வெங்கட் நாகராஜ், சந்திரசேகர், ஏகாந்தன், வல்லியம்மா, கீதாக்கா, கீதாரங்கன், கோமதி அரசு. பானுமதி வெங்கடேஸ்வரன், கமலா ஹரிஹரன், மாதேவி -

ஆகிய அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்...

திருவிழா நேரம்... மின்சக்தி கொள்கலன் எதையும் உடன் எடுத்துச் செல்லவில்லை... 

ஒளிப்படங்கள் எடுப்பதற்கு  கைத்தலப்பேசி எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ பார்ப்போம்...

நலம் வாழ்க
***

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2026

நடை பயணம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆவணி முதல் நாள்
செவ்வாய்க்கிழமை


நிகழும் தமிழ் மாதத்தின் (ஆடி 31 )
கடைசி ஞாயிறன்று (16/8/26) தஞ்சை மாநகரில் உள்ள முருகன் கோயில்களை  அறு படை வீடுகளாகப் பாவித்து அந்த  கோயில்களுக்கு பக்தர்கள் நடைபயணமாக சென்று தரிசனம் செய்த நிகழ்வில் நானும் என் மனைவியும் கலந்து கொண்டு நல்ல முறையில் தரிசனம் செய்தோம் ..

இதற்கு திதி நட்சத்திரம் என்று எதையும் கணக்கில் கொள்வதில்லை.. கடைசி ஞாயிறு தான் கணக்கு..

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் படங்களுடன் பதிவிட்டு சென்ற ஞாயிறன்று முன்னோட்டமும் சொல்லி இருக்கின்றேன்..

காலை ஏழரை மணியளவில்
தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயில் வாசலில்
தரிசனம்... கோயிலின் உள்ளே எல்லாம
 செல்லவில்லை... காலையிலேயே பெருந்திரளான வெளியூர் மக்கள்..

தொடர்ந்து - 
முதலாவதாக வாசல் மேல (அலங்கம்)..


மேல அலங்கம் ஸ்ரீ முருகன் கோயிலில் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக்கோலம்..
இது சிறிய அளவிலான கட்டுமலைக் கோயில்.. 

இக்கோயிலில் ஆறு படை வீடுகளின் திருமேனிகளும் விளங்குகின்றன...

கீழ்தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள்.. அருகில்  ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்.. இரண்டு கோயில்களிலும் மகிழ்வான  தரிசனம்...

இரண்டாவதாக வடக்கு வாசல் வடக்கு அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்..

மேற்கு நோக்கிய கோயில்.. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய பூஜை..

மூன்றாவதாக கீழவாசல்
குறிச்சித்தெரு ஸ்ரீ  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக்கோலம்..

நான்காவதாக கீழவாசல்
ஆட்டுமந்தைத் தெரு பால தண்டாயுதபாணி ஸ்வாமி.. 
மேற்கு நோக்கிய கோயில் ..

ஐந்தாவதாக கீழவாசல்
அரிசிக்காரத் தெரு  சுப்ரமணிய ஸ்வாமி ... 

இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக்கோலம்.. இங்கு ஸ்வாமிக்கு யானை வாகனம்...  இதுவும் மேற்கு நோக்கிய கோயில்..  

ஆறாவதாக பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயில்..
மாலை ஐந்து மணியளவில் இக்கோயிலை அடைந்தோம்... 

இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக் கோலம்.. 

கோயிலுக்கு எதிரில் காவிரி புது ஆறு...

இந்த ஆறு கோயில்களில் மேல அலங்கம் கோயிலைத் தவிர்த்து ஏனைய கோயில்கள் அனைத்திலும் திருச்சுற்றில் சிவ சக்தி சந்நிதிகள் குறிப்பிடத்தக்கவை..

இதன் பின்னும் 
உடல் நலம் உடையவர்கள்
தொடர்ந்து நடந்து மீண்டும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம் செய்து நடைபயணத்தை நிறைவு செய்வர்... 

அங்கே  - 
நடைபயணமாக வந்திருக்கும் பக்தர்களுக்கு திருஷ்டி கழித்து தோஷ நிவர்த்தி செய்யப்படும் என்பது புதிய செய்தி..

நாங்கள் பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயிலுடன் நடைபயணத்தை நிறைவு செய்து கொண்டோம்..

கல்யாணத்  திருக்கோலம் கொண்டு சந்திர பிரபையில் எழுந்தருளிய முருகப்பெருமானுடன் -
நடைபயணமாக வருகின்ற பக்தர்களை அந்தந்தப் பகுதி மக்கள் அரோகரா முழக்கமிட்டு வரவேற்று மகிழ்ந்தனர்..

வழி நெடுகிலும் நீர் மோர் குளிர் பானங்கள் என வழங்கினர்...

பங்காரு காமாக்ஷி அம்மன் ஆலயத்தின் சார்பிலும் ராஜராஜ சமய சங்கத்தினர் 
சார்பிலும் காலை உணவு சிறப்பாக வழங்கப்பட்டது..

விழா ஒருங்கிணைப்பினர்  நவமணி மண்டபத்தில் மதிய உணவு
அளித்தனர்..

நான் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டேன்..

ஐந்தாவது கோயிலில் 
நடை பயணமாக வந்தோர்க்கு  - 
கேசரி, வடை, பால் என, முருகனடியார்கள் வழங்கி மகிழ்ந்தனர்..

ஆறு திருக்கோயில்களிலும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் சந்தனக் காப்பு - என  வைபவமாக இருந்தது...


கைத்தலபேசியில் மின் சக்தி குறைவானதால் விரிவாக படங்கள் எடுக்க முடியவில்லை.. 

வழியில் மேலராஜ வீதியில் ஸ்ரீ சங்கர நாராயணர் கோயில்,  காமாக்ஷி அம்மன் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், கொடி மரத்து மூலை மாரியம்மன், கீழவாசலில் யோக நரசிம்மர் கோயில் வெள்ளைப்  பிள்ளையார் கோயில் என தரிசனம்..

கொங்கணேஸ்வரர் , ஐயன் குள விஸ்வநாதர் , விஜய ராமர் , மூலை ஆஞ்சநேயர், கொடி மரத்து மூலை மாரியம்மன் - கோயில்களில் திருப்பணி நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது..

இடையில் குறிச்சித் தெரு முருகன் கோயிலில் ஒருமணி நேர ஓய்வு மட்டுமே...

இந்த அளவில் - 
முழங்கால் வலியுடன் ஏறத்தாழ எட்டு கிமீ தொலைவைக் கடந்ததே அற்புதம்..



நலம் யாவும் முருகன் செயல்..

வழித்துணை வருவான்
வடிவேல் முருகன்

முருகா முருகா
***

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2026

முருகனருள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 31
ஞாயிற்றுக்கிழமை


இன்று ஆடி 31... தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிறு. (16/8/26)

இன்றைய தினம்
 தஞ்சை மாநகரில் உள்ள முருகன் கோயில்களை   ஆறுபடை வீடுகளாகப் பாவித்து அந்த  கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்ய இருக்கின்றனர் ..

இதற்கு திதி நட்சத்திரம் என்று எதையும் கணக்கில் கொள்வதில்லை.. கடைசி ஞாயிறு தான் கணக்கு..

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்  பதிவிட்டுள்ளேன்...

காலை ஆறரை மணியளவில்
தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம்...

தொடர்ந்து - 
முதற்கோயில் மேல வாசல்..
மேல அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்.. வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்..
இது சிறிய அளவிலான கட்டுமலைக் கோயில்.. கீழ்தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள்.. அருகில்  ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்..

இரண்டாவதாக வடக்கு வாசல் வடக்கு அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்..

மேற்கு நோக்கிய கோயில்.. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய பூஜை..

மூன்றாவதாக கீழவாசல்
குறிச்சித்தெரு ஸ்ரீ  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்..

நான்காவதாக கீழவாசல்
ஆட்டுமந்தைத் தெரு பால தண்டாயுதபாணி ஸ்வாமி கோயில்.. 
மேற்கு நோக்கிய 
கோயில் ..

ஐந்தாவதாக கீழவாசல்
அரிசிக்காரத் தெரு  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்.. இங்கு ஸ்வாமிக்கு யானை வாகனம்...  இதுவும் மேற்கு நோக்கிய கோயில்..  

ஆறாவதாக பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயில்..
மாலை ஆறு மணியளவில் இக்கோயிலை அடைவர்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்.. கோயிலுக்கு எதிரில் காவிரி புது ஆறு...

இதன் பின்னும் 
உடல் நலம் உடையவர்கள்
தொடர்ந்து நடந்து மீண்டும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம் செய்து நடைபயணத்தை நிறைவு செய்வர்... 

பாதயாத்திரையாக வருகின்ற 
ஆயிரக்கணக்கான பக்தர்களை அந்தந்தப் பகுதி மக்கள் வரவேற்று மகிழ்வர்..

வழி நெடுகிலும் நீர் மோர் குளிர் பானங்கள் என வழங்குவர்.

மூன்று வேளையும் அன்னதான உபசரிப்பு என்பது சிறப்பு... 

ஆறு திருக்கோயில்களிலும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் சந்தனக் காப்பு - என  வைபவமாக இருக்கும்...


வழித்துணை வருவான்
வடிவேல் முருகன்

முருகா முருகா
***

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2026

அந்நாளில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி 
செவ்வாய்க்கிழமை


 1919 ல்  ஆங்கிலேய நிர்வாகத்தின் வரைபடம்..

அந்த காலக்கட்டத்தில் தென்னிந்தியா
 தமிழகம், கர்நாடகா , கேரளா, ஆந்திரா என விளங்கியது..

இதில் சேராமல் மைசூர் சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் சமஸ்தானம் ஆகியவை  தனியாக இருந்தன.

மெட்ராஸ் மாகாணம் எனப்பட்ட தமிழகத்தின் பகுதிகள் ஜில்லாக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த ஜில்லாக்கள் :-

வட ஆற்காடு
தென் ஆற்காடு 
தஞ்சாவூர் திருச்சி 
மதுரை ராமநாதபுரம் 
திருநெல்வேலி 
கோவை நீலகிரி 
செங்கல்பட்டு 
சென்ன என்பன..

இன்றைய பதிவில்
அந்நாளைய 
தென்னகத்தின் வரைபடம்.. 
 
நன்றி Fb


வாழ்க நலம்
***

ஞாயிறு, மார்ச் 29, 2026

வாருங்கள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 ஞாயிற்றுக்கிழமை

தஞ்சையின் சிறப்புகள்

(படங்களைப்  பெரிதாக்கி மகிழவும்)




தஞ்சையில் அமைந்துள்ள அருங்காட்சியகங்கள்..

🔹 சோழர் அருங்காட்சியகம் 
( தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம் )
கட்டப்பட்டு வருகின்றது.

🔸 நாட்டுப்புற பண்பாட்டு அருங்காட்சியகம் (தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம்)

🔹 உணவு அருங்காட்சியகம் 
(திருச்சி சாலை)

🔸 இராசராசன் அருங்காட்சியகம் 
(மணி மண்டபம்)

🔹 தஞ்சாவூர் அருங்காட்சியகம் (பழைய நீதிமன்ற சாலை)

🔸 இராயல் அருங்காட்சியகம் (அரண்மனை)

🔹 நடராஜர் அருங்காட்சியகம் 
(அரண்மனை)


மேலே உள்ள குறிப்புகள் தகவலுக்காக மட்டுமே...

தொலைவு  மற்றும் ஏனைய வசதிகள் பற்றித் தெளிவுபடுத்திக் கொள்ளவும்..

 படங்களுக்கு நன்றி
தஞ்சையின் பெருமை

வாழ்க நலம்
***

திங்கள், பிப்ரவரி 23, 2026

ரயில் டிபன்ஸ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
திங்கட்கிழமை


தஞ்சாவூர் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுவையான நற்செய்தி: 

தஞ்சாவூர் ஜங்ஷனில் திறக்கப் பட்டுள்ளது 'ரயில் கோச் ரெஸ்டாரன்ட்'!.. 🚂

45 வருட பாரம்பரியமுடைய தஞ்சாவூரின் புகழ் பெற்ற 'ரயிலடி வி. சுப்பையா டிபன்ஸ்' (Railadi V. Subbaiya Tiffins) நிறுவனத்தினர் தங்களது புதிய ரயில் கோச் உணவகத்தை 
(AC) கடந்த வெள்ளிக்கிழமை (20/02/26) அன்று  தஞ்சாவூர் சந்திப்பு நிலைய - பிரதான வாயிலின் எதிர்ப்புறத்தில் கோலாகலமாகத் திறந்துள்ளனர்..

பாரம்பரிய  சுவையுடைய சைவ உணவுகளை ரயில் பெட்டிக்குள் குளுகுளு என, அமர்ந்து சாப்பிடுவது  மாறுபட்ட புதிய அனுபவம்! ..

ரயில் கோச் உணவகத்தின் உட்புறம் முழுவதும் தஞ்சையின்  மண் வாசம் கலையழகுடன் கூடி தனித்துவமாக நிரம்பியுள்ளது..







ரயில் பயணத்திற்கு முன்னோ அல்லது பிறகோ குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு இது ஒரு சிறப்பான இடம்...

படங்களுக்கு நன்றி
Fb

 தஞ்சை வாழ்க..
***

புதன், டிசம்பர் 10, 2025

அழகே அழகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
கிழமை 

அமரர் சில்பி அவர்களது
கை வண்ணம்..
சில ஓவியங்கள்

தஞ்சை



மதுரை



தில்லை


திருப்பரங்குன்றம்


திரு அண்ணாமலை


 நன்றி
 
நன்றி

ஓம் நம சிவாய
**

சனி, மே 24, 2025

கணக்கு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 10
சனிக்கிழமை

Fb யில் வந்த கணக்கு இது.. சற்றே அலங்காரங்களுடன்!..          


நேர்மையான  அலுவலர் அவர்..

அவருக்கு குடும்பச் சொத்தின் மதிப்பாக பல லட்சங்கள் கிடைத்தன...

அதை எதில் முதலீடு செய்வது எப்படி 
முதலீடு செய்வது
என்று அவருக்குப் புரியவில்லை..
கணிதப் பேராசிரியையான
அவரது மனைவி முழுப் பணத்தையும்  பத்திரமாக - தான் வைத்திருந்து தருவதாகச் சொல்லி தன்னிடம் கொடுக்கும்படி கேட்டார்..

அதில் - கணவருக்குத் துளியும்  விருப்பமில்லை.. 

சில நாள் குழப்பத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையில்   சமாதான உடன்படிக்கை ஆயிற்று..

ஒன்பது அதிர்ஷ்ட புள்ளிகள் கொண்ட பட்டியல் கணவரிடம் தரப்பட்டது..

அதன்படி அவர் அதிலிருந்து ஒரு எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்..  

அதை மனைவியின் வழிகாட்டுதலில் கணக்கிட்டு கிடைக்கும் கூட்டுப் புள்ளியின்படி கணவன் மனைவி இருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அதன் சாராம்சம்...

இருதரப்பிற்கும் சம்மதம்..

1.. 2.. 3.. 4.. 5.. 6.. 7.. 8.. 9..

அதன்படி
கணவர் ஒன்பதிற்குள் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்து மனைவி சொன்னபடியே கணக்கிட்டார்..

கணக்கின் முடிவில்
விடையும் வந்தது... 

விடையைக் கண்டு பதறிப் போன கணவர் வேறொரு எண்ணைத் தேர்ந்தெடுத்து கணக்கிட்டார்..

அதுவும் நீர்க்குமிழி ஆயிற்று..

மறுபடியும் வேறொரு எண்ணை முயற்சிக்க -  அதுவும் வாண வேடிக்கை ஆயிற்று..
 
முடிவில் பெட்டிப் பணம் முழுதும் மனைவியின் கைகளுக்கே சென்றது..

எப்படி டா?..

இப்படித் தான்...

நீங்களும் முயற்சித்து முடிந்தால் இருவருக்கும் நல்வழி காட்டலாமே!..

முதலில் பட்டியலில் உள்ள விஷயங்கள் :. 

1) தான தர்மங்கள்
2) வைரக் கற்கள்
3) தங்க நகைகள்
4) வயலை வாங்கி மனைகளாக்கி விற்றல்
5) புதிய வீடு கட்டுதல்
6) பிரியாணிக் கடைகளுக்காக  கோழிப் பண்ணை 
7) ஒப்பனைப் பொருட்கள் வாங்குதல்
8) சேமிப்பு பாத்திரங்கள்
9) இல்லத்தரசியிடம் ஒப்படைத்து விடுதல்..

ஒன்றிலிருந்து ஒன்பதிற்குள் ஒரு  எண்ணை எடுத்துக் கொள்ளவும்..

அதை மூன்றால் பெருக்கவும்..

வரும் விடையுடன் மூன்றைக் கூட்டவும்..

விடையை மூன்றால் மீண்டும் பெருக்கவும்....

இப்போது இரண்டு இலக்க எண் விடையாய்க் கிடைத்திருக்குமே!..

அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டவும்..

கையில் கிடைத்திருக்கும்
அந்த எண் தான் உங்களது முதலீட்டின் இலக்கு... 

அந்த அதிர்ஷ்ட எண்ணைக் கொண்டு - கையில் உள்ள பட்டியலின்படி  சரியானதைச் செய்ய வேண்டும் -  என்பது உடன்படிக்கை..

எல்லா கணக்கீடுகளும் ஒன்பதில் வந்து முடிந்தது என்பது தான் சிறப்பு..

குளிர்ந்த நீரைக் குடித்தபடியே பணப்பெட்டியின் சாவியை இல்லத்தரசியிடம் கொடுத்தார் கணவர்..

தன் கையில் இருந்த தாளை மீண்டும் ஒரு தரம் பார்த்துக் கொண்டார்..

எல்லாத்துக்கும் - அந்த கணக்கு டீச்சர் தான் காரணம்!..
😁😁😁

ஓம் சக்தி ஓம்

ஞாயிறு, மே 11, 2025

தேரடி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 28
ஞாயிற்றுக்கிழமை








தஞ்சை மேல ராஜ வீதி தேரடி மண்டபத்தில்
தேரோட்டத்திற்கு முதல் நாள் இரவுக் காட்சிகள்..
 
நன்றி
நம்ம தஞ்சாவூர்


மன்னர்களால் செய்தளிக்கப்பட்ட  பெருந்தேரானது பற்பல போர்களினாலும் அந்நிய அத்து மீறல்களினாலும்
 சிதைந்து போனது ..

நூறாண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் இல்லாமல் தான் திருவிழாக்கள்..

பெரிய கோயிலுக்கு  தேர் வேண்டும் என்று தஞ்சாவூர் மக்கள் ஆர்வம் கொண்டனர்..

முதல் வேலையாக
தேர் மண்டபம், தேர் நிலை மீட்டெடுக்கப்பட்டது..

தஞ்சை பெரிய கோயிலுக்கு  தேர் வேண்டும் என எழுந்த கோரிக்கைகளை 
ஏற்றுக் கொண்ட  அன்றைய முதல்வர் ஜெயலலிதா
 புதிய தேர் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்..

50 லட்சத்தில் தேர் கட்டுமான பணிகள்  டிசம்பர் 2013 ல் தொடங்கப்பட்டன

திருத்தேரில்   231 சிற்பங்களுடன் 245
 மணிகளும் பொருத்தப்பட்டுள்ளன...

இந்தத் தேரின் சாதாரண எடை 40 டன் ..

இப்போதுள்ள தேரானது
 20/4/2015 ல் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.., 
 
பழைய
 செய்திகளில் இருந்து..

ஓம் சிவாய நம 
**

சனி, ஜனவரி 25, 2025

தர்மம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 12
சனிக்கிழமை


எத்தனையோ முறை
கேட்ட நல்லுரை..

மீண்டும் கேட்போம்..


ஒன்றே செய்க
நன்றே செய்க
நன்றும்
இன்றே செய்க..
ஃ

நீநாளும் நன்னெஞ்சே
  நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ்
  சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப்
  புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப்
  பெறலாமே நல்வினையே.. 2/41/3
-: திருஞானசம்பந்தர் :-
**

ஓம் ஹரி ஓம் 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***